சுவையும், வாசமும் மூலையில் எப்படி உணரப்படுகின்றது என்பதில் அற்புதமான முன்னேற்றத்தை உலகிற்கு காட்டியவர் உபைத் சித்திகி (வயது 81). அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், இந்திய தேசிய உயிரியல் மையத்தில் பேராசிரியராக பணியில் இருந்தார். கடந்த புதன்கிழமை, அவரது வீட்டருகே, பைக்கில் வந்த ஒரு இளைஞர் உபைத் சித்திகியை மோதிவிட்டார். காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உபைத், சிகிச்சை பலனளிக்காமல் மரணத்தை தழுவினார் (இன்னாலில்லாஹி).
விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞரின் எதிர்கால வாழ்வை மனதில் கொண்டு அவர் மீது வழக்கு தொடுக்க சித்திகியின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான உபைத்தின் மரணம் குறித்து தி ஹிந்துவில் வெளிவந்துள்ள செய்தி http://m.thehindu.com/
இப்படியான அருமையான ஆய்வாளர்களை அவர்கள் இறக்கும் தருவாயில் தான் அறிந்துக்கொள்ள முடிகின்றது... #என்னத்த சொல்ல :-(
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
No comments:
Post a Comment