Tuesday, July 30, 2013

ஒரு மாணவியின் துஆ...!


யா அல்லாஹ்; யா ரஹ்மானே!
என்
இதயத் துடிப்புகள்
இறைவா உனக்காக

எந்நிலையிலும்
நிற்கச் சம்மதமாய்
என் இதயம் இருப்பினும்
ஆழ் மனதில்
மரணத்தை எதிர்கொள்ள
மருகும் கோழை நான்!

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்
பலகீனமான படைப்பே
பெண்ணினம் -
மறுப்பதற்கில்லை!

என்னினத்தை
ஏய்ப்பது எளிது
எள்ளளவு அன்பு காட்டி!

எம்மில் அநேகம்
ஏமாந்து போவது
கண்களைக் கட்டும்
அற்ப ஆசைகளால்

அவை
அன்பென்று துவங்கி
அற்ப
இச்சைகளில் முடிபவை;

நேர்வழி நடக்கும்போது
குறுக்கிடும்
அன்போ ஆசையோ
தவறல்ல

அவ்வாறில்லாவிடில்
பாவப்பட்ட ஜென்மங்கள்
நரகத்தையே சென்றடைகின்றனர்

இவ்வாறே
நரகம்
பெண்களால் நிரம்புகிறது!

ஷைத்தானுக்கு
பெண்களை
ஏய்த்து வழிகெடுப்பதே இலகுவானது
இருப்பினும்
அத்தகையோரில் ஒருத்தியாக
நான் இருக்க விரும்பவில்லை!

நினைவிருக்கட்டும் பெண்களே,
முதன்மையான அன்பின்
ஆதியும் அந்தமும்
அல்லாஹ் ஒருவனுக்கே
அவனுக்குப் பிறகே
நபி(ஸல்)களும்
பெற்றோரும்
கணவரும்
குழந்தைகளும்…

என்னைப் பார் இறைவா
என்
சுவாசத்தின் காரணம் நீ அறிவாய்

என் விழி திறந்து
காண்கிறேன்
புரிந்து
தெளிவு பெறுகிறேன்
நான்
உன்னால் படைக்கப்பட்டவள் என்று

என் உயிரின்
ஒவ்வொரு அங்குலமும்
உனக்குச் சொந்தமானது யா அல்லாஹ்

நான்
சொர்க்கம் விரும்புவதன் நோக்கம்
அங்கு வாய்க்கும்
மகிழ்ச்சியான வாழ்க்கையது அல்ல

நீ
விரும்புபவர்களில் ஒருத்தியாகவும்
உனக்கு
நெருக்கமானவளாகவும்
இருக்க வேண்டும் என்று மட்டுமே

எனக்கருள் செய்வாய் யா அல்லாஹ்
தொடர்ந்து என்னை நேசி
வெறுத்துவிடாதே யா அல்லாஹ்

உன்னை தியானம் செய்யும்
தருணங்களில்
என் இதயம் உருகுவதால்
கண்ணீரில் வெப்பம்;
எனது ஆத்மா உருகுவதை
வார்த்தைகள் விளக்காது

தயவு காட்டு யா அல்லாஹ்
மகிழும்போது லேசாகவும்
சோகங்களைத் தாங்க கடினமாகவும்
ஐயுப் நபி(ஸல்)க்குத் தந்த
பொறுமையோடும்
இதயம் கொடு இறைவா !

என் நாட்டம்
இறுதி நாளில்
என் பெற்றோரை உயர்த்துவது
பிரகாசத்தில் நிலைநிறுத்துவது
சிறந்த பெற்றோரென
வெற்றிகண்டதால்
அவர்கள்
சொர்க்கத்தில் நுழையட்டும் அல்லாஹ்
…ஆமீன்!

(சூரா அல் ஆனாம்: வசனம் 162)

(எனக்கு மிகவும் பிடித்த குர் ஆன் வசனங்களில் ஒன்று: நிச்சயமாக என் வணக்கங்களும் தியாகங்களும் என் வாழ்க்கையும் என் மரணமும் எல்லாமும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனே அகில உலகிற்கும் இறைவன். )

-Shahnaz Sabeer Ahmed, MBBS 2nd Year
தமிழில்: சபீர் அஹ்மது அபுஷாருக்
Source : http://adirainirubar.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails