Monday, July 15, 2013

சங்கை மிகு ரமலான்


காத்திருந்து காத்திருந்து
பூத்ததிந்த புனித நோன்பு

வருசத்தில் ஓர் உதயம்
வந்து போகும் வசந்த மாதம்

இறை மறையாம் திருக்குர்ஆன்
இறங்கியதும் இம்மாதம்

அருள் நலமும் ஒருங்கே பெற்று
அகம் மகிழச் செய்திடும் மாதம்

பாவங்கள் விட்டொழித்து
இறைப் போதனைகள் பொழியும் மாதம்

இச்சைக்கு விடைகொடுத்து
இறைப் பொருத்தம் தேடும் மாதம்

பசித்தாகம் மறந்த நிலையாய்
புனித நோன்பு நோற்கும் மாதம்


கனிந்து உள்ளம் உருகிட நாம்
பணிந்து துவா கேட்கும் மாதம்

ஐவேளை தொழுகையுடன்
மெய்வணக்கம் செய்திடும் மாதம்

மறை வழியே நாம் நடந்து
மகிழ்வுடனே நோன்பு நோற்ப்போம்

சத்தியற்ற எளியோர்க்கு
சமர்ப்பிப்போம் ஜக்காத்தினை

பக்தியுடன் நாம் நடந்து
படைத்தவனின் அருள் பெறுவோம்

இயன்ற வரை அமல்ச் செய்து
இறையன்பை ஈட்டிவிடுவோம்

மறைந்த பின்னும்
பின் தொடர்ந்து
மகத்தான நன்மை பயக்கும்

துன்பத்தை தூரமாக்கும்
தூய இம்மாதத்திலே
நல் அமல்கள் பல செய்து
நாயனருள் பெற்றிடுவோம்

நலமாய் ரமலான் நிறைவாக்கி
மகிழ்வாய் பெருநாள் அனுசரிப்போம்


அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த
[ 11-07-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...





Source : http://nijampage.blogspot.ae/

1 comment:

சமூக விழிப்புணர்வு பக்கங்கள் said...

மிக்க நன்றி !

அறிஞர் நீடூர் அலி அவர்களுக்கு

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails