Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Friday, June 27, 2014

ரமலான்

ரமலான்- நிஷா மன்சூர்


ரமல் என்றால் கருக்குதல் என்று பொருள்.
கரும்பு விளைவிக்கப்பட்ட விளைநிலத்தில் அறுவடைக்குப்பிறகு கருக்குவார்கள்.அது எதற்காக...???
மண்ணின்/நிலத்தின் வளத்துக்காக.அப்போதைக்கு அவை கருக்கப்பட்டாலும் கருக்கப்படுவதன் நோக்கம் மீண்டும் உயிர்ப்புடனும் வளமையுடனும் வளரவேண்டும் என்பதுதான்.

அதுபோல நான்/என்னுடைய என்னும் மாயையான நம் சுயத்தைக் கருக்குவதற்கும் எல்லா படைப்பினங்களுக்கும் மூலமாக இருக்கும் ரட்சகனில் தன்னை அடையாளப்படுத்துவதற்கும் அந்த ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அற்புதமான பயிற்சிதான் நோன்பு என்பதாகும்.

Monday, July 15, 2013

சங்கை மிகு ரமலான்


காத்திருந்து காத்திருந்து
பூத்ததிந்த புனித நோன்பு

வருசத்தில் ஓர் உதயம்
வந்து போகும் வசந்த மாதம்

இறை மறையாம் திருக்குர்ஆன்
இறங்கியதும் இம்மாதம்

அருள் நலமும் ஒருங்கே பெற்று
அகம் மகிழச் செய்திடும் மாதம்

பாவங்கள் விட்டொழித்து
இறைப் போதனைகள் பொழியும் மாதம்

இச்சைக்கு விடைகொடுத்து
இறைப் பொருத்தம் தேடும் மாதம்

பசித்தாகம் மறந்த நிலையாய்
புனித நோன்பு நோற்கும் மாதம்

Tuesday, July 9, 2013

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் அல்லாஹ்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

Saturday, July 30, 2011

அமலால் நிறையும் ரமலான் (அமல் = நற்செயல்)


கவிதை தந்தவர் : கவிஞர்

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்

படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்

கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்

கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்

பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்

பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்

வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்

வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்


குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்

குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்

*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*

திண்ணமாகச் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்

உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்

உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்

கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்

கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்


குறிப்பு: இப்பாடலில் தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அறபுச் சொற்கள்; இவ்வாறாக அறபுத்தமிழினைப் பாடலில் இணைப்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்படிருப்பதை உமறுப்புலவர் அவர்களின் சீறாப்புராணம் மற்றும் உள்ள இலக்கிய நூற்களில் காணலாம். கீழே அச்சொற்கட்கான பதவுரை வழங்கியுள்ளேன்:


ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.



ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்


குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்


கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்


ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்



*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்* = மஹ்ஷர் என்னும் திடல் judgment day ground மறுமை நாளின் தீர்ப்பு வழங்கப்பெறும் இடம்

யாப்பிலக்கணம்:

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்



எண்சீர் கழிநெடிலடி விருத்தம்



”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
Source : http://kalaamkathir.blogspot.com/2011/07/blog-post_29.html
---------------------------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails