Saturday, May 28, 2016

இறைவன் ...

J Banu Haroon
...

நியாயமாக கேட்பது எதையும் ...
நிச்சயமாக தருபவன் ...
வார்த்தைக் கொட்டல்களை ..
வாங்கிக் கொள்பவன் ...
எத்தனை திட்டல்களையும் ..
ஏற்றுக் கொள்பவன் ...
கொட்டும் கண்ணீர்த்துளிகளில் ..
கருணை கொள்பவன் ...
நன்றிகளை சார்த்தினால் ..
பெற்றுக் கொள்பவன் ...

Thursday, May 26, 2016

அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி அமைய உதவிய மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்

அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி அமைய உதவிய மௌலானா பத்ருத்தீன் அஜ்மல் – தென்றல் கமால்

தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்ஸாமில் கருத்துக் கணிப்புகளை புறந்தள்ளி பிஜேபி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்கு பல காரணிகள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணியாக அரசியல் பார்வையாளர்கள் ஊடகங்கள் சொல்வது
மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்

Monday, May 23, 2016

அறிந்தவரை ....!

ஆதியும் அறிந்தேன்
அந்தமும் அறிவேன்
வாழ்கையை அறிந்தேன்
வணக்கத்தை அறிவேன்
வம்புகள் அறியேன்
வாய்மை அறிவேன் 
வாய்ப்புகள் அறிந்தேன்
வறுமையை ஒழித்தேன்
இருப்பதை அறிந்தேன்

Saturday, May 21, 2016

குழந்தைகளின் பிரார்த்தனை..!!

நிஷா மன்சூர்
பிரார்த்தனை ஆகி என் உதட்டில் வருகிறது
என் ஆர்வம், என் ஏக்கம்.
என் இறைவா! என் வாழ்க்கை
ஒரு மெழுகுவத்தி போல் ஆகட்டும்.
என் மூச்சில் என் தாய்நாடு
பொலிவு பெறட்டும்
பூவைக் கொண்டு ஒரு
பூங்கா பொலிவது போல்.
என் ரட்சகனே! என் வாழ்க்கை
ஒரு விட்டில் பூச்சி போல் ஆகட்டும்.

Tuesday, May 10, 2016

வரலாற்றில் ஒரு கருத்துக் கணிப்பு...

Abu Haashima
வரலாற்றில் ஒரு
கருத்துக் கணிப்பு...
முஆவியா ...
அபு சுப்யான்
ஹிந்தாவின் செல்லப் பிள்ளை.
இமாம் அலீ ( ரலி ) அவர்களின் ஷஹாதத்திற்குப் பிறகு தன்னை இஸ்லாமியப் பேரரசின் மன்னராக முடி சூட்டிக் கொண்டவர்.
தனக்குப் பிறகு தனது மகன் யஜீதை
அரசனாக்க அனைத்து அயோக்கியத்தனங்களையும் இவர் அரங்கேற்றினார்.
சதி ,சூழ்ச்சி , மிரட்டல் , பழி வாங்கல் எல்லாவற்றையும் சர்வசாதாரணமாக நடத்தினார்.
முஆவியாவின் மதினா ஆளுநர் மர்வான்
" முஆவியா தனக்குப்பின் தனது மகன் யஜீதை புதிய கலீபாவாக தேர்ந்தெடுத்து விட்டார் " என்று மக்களிடம் அறிவித்தார்.
இதனை ...
அபுபக்கர் ( ரலி ) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான்
ஹஸ்ரத் அலீ ( ரலி) அவர்களின் மகன் இமாம் ஹுஸைன்
உமர் ( ரலி ) அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான்
ஜுபைர் ( ரலி ) அவர்களின் மகன் அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

Friday, May 6, 2016

ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் ஆற்றவேண்டும்


இந்தியர் என்பதில் பெருமைக்கொள்வோம்...
இன்று ஜும்ஆ தொழுகைக்கு சென்ற பொழுது நமதூர்
(நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரி) மதரஸாவில் பயிலும் கேரளத்தினை சேர்ந்த மாணவர்களிடம் உரையாட நேர்ந்தது . அவர்களிடம் ஓட்டு போட செல்வீர்களா? என கேட்டேன்.
ஆம் எனவும் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை  ஒவ்வொருவரும் ஆற்றவேண்டும் என்பதற்காக பரீட்சையினை கூட இரண்டு தினங்கள் முன்பாகவே முடித்துக்கொள்ள நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாகவும்,
22ந்தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள மீண்டும் வர இருப்பதாகவும் சொன்னார்கள்.

Monday, May 2, 2016

தொதல் கிண்டுவோம் ....


Abdul Gafoorதொதல் கிண்டுவோம் ....
இட்டப் பெயர்
தொதல்
பட்டப் பெயர்
செம்பல்வா ....
உருளியும் சட்டுவமும்
மோதல் இட்டு
அண்டிய ஆசையில்
ஆனந்த மனசோடு
கிண்டிய ருசியான
தொதல் மீதெனக்கு
என்றென்றும் தணியாத
காதல் உண்டு ....

இஸ்லாத்தின் பார்வையில்... திருக்குர்ஆனும் இலக்கியமும்

இஸ்லாத்தின் பார்வையில்... 46. திருக்குர்ஆனும் இலக்கியமும்

‘திருக்குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா?

ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன்.

ஆம், திருக்குர்ஆனுக்கு இதர வேதங்களை காட்டிலும் தனிச்சிறப்புகள் பல உண்டு. முந்தைய நபிமார்  களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத், இன்ஜில், ஜபூர் போன்ற வேதங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதாகும்.

ஆனால் குர்ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான வேதம் அல்ல. மாறாக அனைத்துலக மக்களுக்கும் இறுதி நாள் வரை பொருந்தக்கூடிய உலக பொது மறையாகும்.

LinkWithin

Related Posts with Thumbnails