Thursday, May 26, 2016

அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி அமைய உதவிய மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்

அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி அமைய உதவிய மௌலானா பத்ருத்தீன் அஜ்மல் – தென்றல் கமால்

தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்ஸாமில் கருத்துக் கணிப்புகளை புறந்தள்ளி பிஜேபி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்கு பல காரணிகள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணியாக அரசியல் பார்வையாளர்கள் ஊடகங்கள் சொல்வது
மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்

யார் இவர்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் பிரபலமான அஜ்மல் பெர்ஃப்யூம் கடைகளின் முதலாளி.  பல கோடிகளுக்கு அதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி ஆசை யாரையும் விட்டு வைக்காது.  தாருல் உலூம் தேவ்பந்தில் படித்த மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்
என்ற இந்த மார்க்க அறிஞரையும் விட்டு வைக்க வில்லை
வங்க மொழி பேசும் ……..தற்சமயம் பாராளுமன்ற உறுப்பினரான இவர் இந்த சட்டசபை தேர்தலில் நின்று …. காங்கிரஸ் கட்சியின் வாஜித் அலி சௌத்ரியிடம் தோற்றுப் போயிருக்கிறார்.  இந்தத் தோல்வியை இதுவரை இவரது கட்சியாலும் இவராலும் ஜீரணிக்க இயலவில்லை
ஏற்கனவே இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு உள்ள கட்சிகள் பற்றாது என இவரும் அல் இந்தியா யுனைடட் டெமாக்ரடிக் ஃபிரண்ட் என்ற கட்சியை தொடங்கி உள்ளார்.
இந்தத் தேர்தலில் கிங்மேக்கராக இவர் இருக்க விரும்பியது (அதாவது ஆட்சியைத் தீரமானிப்பவராக) காங்கிரஸை எரிச்சல்படுத்த அதனுடன் கூட்டணி வைக்க சோனியா ராகுல் வரை  இவர்  செய்த முயற்சிகளை காங்கிரஸ் ஏற்காமல் இவரைப் புறக்கணித்து விட்டது. விட்டுக் கொடுத்திருந்தால் கெட்டுப் போயிருக்க மாட்டார்கள்.  ஆனால் இப்போது உள்ளதும் போச்சே என்ற கைசேதம் இரு கட்சிகளுக்கும்.
3 கோடி மக்கள் தொகை கொண்ட அஸ்ஸாமில் 1 கோடி இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் யாருக்கு பெருவாரியாக வாக்களிக்கிறார்களோ அவர்கள்  ஆட்சியில் அமர வாய்ப்பதிகம்.  ஆனால் தனித்து நின்ற மௌலானா பத்ருத்தீன் அஜ்மல் இஸ்லாமியர்களின் வாக்குவங்கியை உடைத்தெறிந்தது பிஜேபி  அமோகமாக ஆட்சிக்கு வரக் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள்
மாறாக அஸ்ஸாமில் பங்களாதேஷில் இருந்து இஸ்லாமியர்கள் கள்ளத்தனமாக வந்து குடியேறுகிறார்கள் அதனால் அஸ்ஸாம் தன் தனித்தன்மையை இழக்கிறது என்ற கோஷத்தை  மைய்யமாக வைத்து அரசியல் களப்பணியைத் துவக்கிய பிஜேபி அங்குள்ள அஸ்ஸாம் கன பரிஷத் மற்றும் போடோலேண்ட்  (மலைவாழ் மக்களக்கு தனி மாநிலம் கோரும் கட்சி) கட்சியுடன் கூட்டணி வைத்து …………. அதல்லாமல் பழங்குடியினர் மலைவாழ்மக்கள் தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த அஸ்ஸாமில் மலைவாழ் இனத்தவரான சர்பானந்த சோனோவலை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கி அவர்களின் வாக்குகளை சாதுர்யமாக தனதாக்கியுள்ளது.
தொங்கு சட்டசபை அமையும் அப்போது தன்னை நாடி ஆட்சி அமைக்க காங்கிரஸ் அல்லது பிஜேபி வரும்போது தான் கிங் மேக்கராகத் திகழலாம் என்று நினைத்த மௌலானா பத்ருத்தீன் அஜ்மல் அவர்கள் கனவு நனவாகவில்லை.
தாசியில் அமரச் செய்த காரணிகளில் மௌலானா பத்ருத்தீன் அஜ்மல் ஒரு காரணி னும் தோற்று காங்கிரஸையும் தோற்கடித்து பிஜேபியை பெரும்பலத்துடன் ஆட்என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள்
வடகிழக்கு மாநிலங்களில் முதல் மாநிலமாக அஸ்ஸாமில் தன் வெற்றிக் கொடியை நாட்டி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளது பிஜேபி.  பிஜேபி தலைவர் அமித் ஷா கட்ச் (குஜராத்) முதல் காமருப் (அஸ்ஸாமின் பண்டைய பெயர்) தற்போது தங்கள் வசம் என்று பெருமிதப்பட்டுள்ளார்.
இந்திய தேசத்து அரசியலில் இஸ்லாமியர்கள் தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளாமல் தனிக் கட்சிகளைத் தொடங்கி இஸ்லாமியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லாது போகலாம் என்பதை இந்தத் தடவை தமிழகம் மற்றும் அஸ்ஸாமில் நடந்த தேர்தல் முடிவுகள் ஊர்ஜிதப்படுத்தி உள்ளன.
தென்றல் கமால்
http://mudukulathur.com/?p=39957

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails