Monday, May 2, 2016
தொதல் கிண்டுவோம் ....
Abdul Gafoor
தொதல் கிண்டுவோம் ....
இட்டப் பெயர்
தொதல்
பட்டப் பெயர்
செம்பல்வா ....
உருளியும் சட்டுவமும்
மோதல் இட்டு
அண்டிய ஆசையில்
ஆனந்த மனசோடு
கிண்டிய ருசியான
தொதல் மீதெனக்கு
என்றென்றும் தணியாத
காதல் உண்டு ....
கிழம் எய்தி
வாழ்ந்த முன்னோர்களும்
வளம் பெருகி
வாழும் பின்னோர்களும்
கடினப்பட்டு கிண்டும்
பழம் பெரும்
பண்டமாம் தொதல் ....
இனிப்பான கருப்பட்டி
வேதிப் பொருளாய்
தானிய வகைகள்
பாதிப் பொருளாய்
தயாரிப்புக்கு உகந்தது ....
உருளியின் கரைகளில்
காய்ந்தும் காயாமலும்
ஒட்டியிருக்கும் தொதலை
கரண்டிகளால் கிள்ளியெடுத்து
கைகளால் அள்ளியெடுத்து
சுவைப்பதில் பேரானந்தம் ....
திருவிய தேங்காயும்
தூவிய கசகசாவும்
விரவிய கடலைகளும்
முறுவிய தொதலுக்கு
தெவிட்டா சுவையூட்டும் ....
கண்டம் தாண்டி
பணியாற்றி வாழ்வோர்
கண்டாலும் உண்டாலும்
மோகம் குறையாத
பண்டம் தொதல் ....
அப்துல் கபூர்
Abdul Gafoor
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment