Thursday, September 30, 2010

இந்தியாவிடம் தோற்கும் அமெரிக்கா! ஒபாமா கவலை

அயோவா: நாட்டில் கல்வியறிவு வெகுவாக குறைந்து கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் அமெரிக்க இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், கல்வியறிவு மற்றும் வேலை வாய்ப்பில் இந்தியா மற்றும் சீனாவிடம் அமெரிக்கா தோல்வியடைந்து வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.
அயோவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் இளைஞர்கள் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுவது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் உலக அளவில் வேலைகளுக்கு போட்டிபோடும் நிலையை அமெரிக்கா இழந்து வருகிறது. இந்தியா, சீனா நாடுகள் கல்விக்கு அதிக தொகை செலவிட்டு வருகின்றன. கல்வி நிலையங்களை பொறுத்தவரை நாம் முதலிடத்தில் இருக்கிறோம். ஆனால் மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை நாம் 12வது இடத்தில் இருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்றார்.
உலகில் அளவில் அதிக உற்பத்தி செய்யும் நாடாக இருந்த அமெரிக்கா, அந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவ தொடங்கி உள்ளது முன்பை விட இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்கள் மக்களுக்கு கல்வி அறிவு புகட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா இந்த நாடுகளிடம் விரைவிலோ அல்லது சில காலம் கழித்தோ அவர்கள் நம்மை முந்தி விடுவார்கள். அவர்கள் தங்கள் முன்பை விட அதிக ஏற்றுமதியும் செய்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் எரிசக்திக்கான ஆதாரங்களை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டு உள்ளன. எதிர்கால வேலைகள் எல்லாம் அவர்கள் கைகளில் தான் இருக்கும். பட்டதாரிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் குறைந்து விட்டன. புஷ் ஆட்சி காலத்தில் தான் சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மை குறைந்து போனது கல்வித் துறையில் பின் தங்கியுள்ளதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு என்றார்.
Source : http://www.inneram.com/2010100110929/america-defeat-by-india-soon-says-obama

நீங்கள் நீதிபதியானால் !!!உங்கள் தீர்ப்பு ? சொடுக்கி படித்து பாருங்கள்

Posted: 30 Sep 2010 11:39 AM PDT
அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள "வினவு" தளத்துக்கு நன்றி!


”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது.

http://maniblogcom.blogspot.com/2010/09/blog-post_7527.html

vote please 

--
எனக்கு வந்த மெயில்
---------------------------------------------------------------------------------------------------------------------
பாபரி மஸ்ஜித் தமிழ் பாடல்

Wednesday, September 29, 2010

அல் அக்ஸாவுக்குள் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளரின் திடீர் பிரவேசம்

கடந்த புதன்கிழமை (29.09.2010) சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் புனித மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் பிரவேசித்த யூத ஆக்கிரமிப்பாளர்கள்> இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸார் புடைசூழ அங்கு உலாவந்ததோடு> அதனை சேதப்படுத்தவும் முயன்றதாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஸியோனிஸவாதிகள் மஃரிபா நுழைவாயிலினூடே மஸ்ஜிதுக்குள் பிரவேசித்தனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மஃரிபா நுழைவாயிற் பிரதேசம் 1967 ஆம் ஆண்டு ஜெரூசலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குள்ளானதில் இருந்து இன்று வரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அல் அக்ஸாவின் பாதுகாப்புப் பணியாளர்கள் மேலும் கருத்துரைக்கையில்> இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரதும் ஆக்கிரமிப்புப் பொலிஸாரினதும் ஒத்துழைப்போடு அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் சிறுசிறு குழுக்களாகப் பிரவேசித்த ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள்> அங்கு இனவெறியைத் தூண்டும் விதமான பிரசங்கங்களை நிகழ்த்தி 'தல்மூ'திய சடங்குகளை மேற்கொண்டதோடல்லாமல்> அவர்களில் சிலர் மஸ்ஜிதை சேதப்படுத்தவும் முயன்றனர் என்றும்> இதற்கெதிரான எத்தகைய சட்ட நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிரிக்க சில நகைச்சுவைகள்!

சிரிக்க சில நகைச்சுவைகள்!

1. ''கஷ்டப்பட்டு பிச்சை எடுக்கற பணத்துல உன் பிள்ளையை ஊட்டி கான்வென்ட்ல படிக்க வைக்கறியாமே!''

''ஆமாம்மா, அவன் அமெரிக்காவில் போய் பிச்சை எடுக்கணும்னு ஆசைப்படறான் தாயி!''

2. ''பயப்படாதே! டாக்டரிடம் உண்மையைத்தான் சொல்ல வேண்டும்!''

''உண்மையைச் சொல்லிவிடுகிறேன் டாக்டர்... கடந்த மூன்று மாதங்களாக உங்களுக்குக் கொடுத்த 'பீஸ்' கள்ள நோட்டு, ஸாரி..''

3. ''உங்க வீட்ல யாரோட கை ஓங்கி இருக்கும்? உன் கையா? உன் மனைவி கையா?''

''என் மனைவி கை எப்பவும் ஓங்கி இருக்கும். என் தலை வீங்கி இருக்கும்.''

4. ''டைரக்டர் சார்! ஹீரோயினுக்கு நான் கிஸ் குடுக்கற மாதிரி ஸீன் கதைல இருக்கு. ஆனா, அதை எடுக்கவே இல்லையே?''

''ஸாரி ஹீரோ சார் ஸ்டன்ட் மாதிரியே அதையும் கிரா·பிக்ஸ்ல எடுத்துட்டேன்,.''

5. ''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''

6. ''லவ் லெட்டரை ஏன் குப்பைக் கூடைல போடுறே.?''
''அப்பதான் வேலைக்காரி படிப்பா...!''

7. ''உங்க கச்சேரியை வழக்கமா எப்ப முடிப்பீங்க?''

''முதல் கல் வந்ததும்!''

8. ''பெட்டியை திறங்க செக் பண்ணனும்...!''

''அப்பாடா, நான் கூட டிக்கட் செக்கிங்னு நினைச்சுட்டேன்...!''

9. ''மன்னா! படை தயாராக இருக்கிறது! போருக்குக் கிளம்புவோமா?'',

''எனக்குப் பாடை தயாராக இருக்கிறது என்று கூறும்.''

10. ''மன்னா... நேற்று இரவு தூக்கத்திலேயே ஓடி எல்லையை கடந்துவிட்டீர்!''

''அமைச்சரே.. மானத்தை வாங்காதீர். எதிரி மன்னன் படையெடுத்து வந்ததாய் கனவு கண்டேன்.''

11. ''ஏய்... மிஸ்டர்... என் சம்சாரத்தைப் பார்த்து சூப்பர் ·பிகர்னு கமென்ட் அடிச்சியாமே?''

''ஸாரி ஸார்... அது வந்து...''

''வாய் கூசலியா உனக்கு, இப்படிப் பச்சையா பொய் சொல்ற''....

12. ''அந்த பல் டாக்டர் ஆனாலும் ரொம்ப முரட்டு வைத்தியம்!''

''நிஜமாவா...?''

''ஆமாம்! பல்லை எடுக்க ரெளடிங்களை வேலைக்கு வைச்சிருக்காருனா பாருங்களேன்.''

13. ''மழை வருதுன்னு போருக்கு வாய்தா கேட்டு, எதிரி நாட்டு மன்னனுக்கு ஓலை அனுப்பினீங்களே மன்னா... திருப்பி அவர் என்ன அனுப்பினார்...?''

''போருக்கு கட்டாயம் வந்தாகணும்னு சொல்லி, மழை கோட்டு அனுப்பிவிட்டார்...!''

14. ''அந்தப் பிச்சைக்காரனுக்கு திமிர் அதிகம்னு சொல்றியே ஏன்?''

''பின்னே, 'இத்தனை நாட்களா இல்லாம இன்னிக்கு மட்டும் ஏன் எங்க வீட்டுக்கு பிச்சை எடுக்க வந்திருக்கே?'னு கேட்டதுக்கு 'டாக்டர் தான் என்னை உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிடணும்னு சொல்லியிருக்காரு'ங்கிறான்!''

15. ''என்ன... அந்த டாக்டர் ஆபரேஷனை பாதிலயே விட்டுட்டு போறாரு..?

''நான்தான் சொன்னேனே! அவரு டாக்டர் படிப்பை பாதிலயே விட்டவருன்னு.''

16. ''அந்த ஹீரோ வெப் டிசைனிங் படிச்சவராம்!''
''ஓ... அதான் அவருக்கு 'இணைய தளபதி'ன்னு பட்டம் தந்திருக்காங்களா!''

17. ''தலைவர் வேகமா ஓடிட்டே ஓட்டுக் கேட்கறாரே? அவ்வளவு அவசரமா?''

''நின்னு கேட்டா அவருக்கு உதை விழுமே?''

18. ''ஆபரேஷனுக்கு அப்புறம் எப்ப தையல் பிரிப்பீங்க டாக்டர்?''

''தேவை இல்லாத சந்தேகமெல்லாம் கேட்காதீங்க!''

19. ''உன் அம்மாவும், மனைவியும் எப்போ பேசிக்குவாங்க?''

''சண்டை போட்டுக்கிறப்பதான்!''.

20. ''மீட்டிங்ல என்ன அந்தச் சின்ன பையன் நம்ம தலைவரை 'நாசமா போய்டணும்'னு திட்றான்..?''

''அவனுக்கு தலைவரை வாழ்த்த வயதில்லையாம்.''

21. ''நூறு ஆபரேஷன் பண்ணா அதுல ஒண்ணு 'அப்படி இப்படி' ஆகுறது சகஜம்தானே?

''ஏன்?... என்னாங்க?... நம்ம டாக்டர் ஆபரேஷன் பண்ணின பேஷன்ட் இறந்துட்டாரா?...

''பிழைச்சுட்டார்...''
22. ''நம்ம கட்சி காலியாகிக்கிட்டே வருது தலைவரே''

''இருக்கட்டுமே, நானும் ஒரு காலத்துல காலியா திரிஞ்சவன்தானே!''

23. ''நகர்வலம் தெரியும்... அதென்ன, 'சுகர்வலம்..?''

''மன்னருக்கு சுகர் அதிகமாகி தினமும் அரண்மனையை சுற்றி வலம் வருகிறாரே...!''

24. ''ஓய் சாஸ்திரிகளே, ஏன் ஓமத்துல இவ்வளவு புகை வரவழைச்சு என்னை சித்ரவதை செய்யறீங்க. தாங்க முடியலை.''

''கல்யாணம் பண்ணிக்கறேள். உங்களுக்கு இனிமே ரொம்ப பொறுமை அவசியம்! அதைப் பழக்கப் படுத்தறதுக்குத்தான் இது. பொறுத்துக்கக் கத்தக்குங்கோ.''

25. ''ஏன் மன்னர் தன் கையோடு சேர்த்து போர்வாளைக் கட்டியுள்ளார்?''

''பயத்தில் அடிக்கடி கைநழுவி விழுந்து விடுகிறதாம்!''

26. ''குமார், பசிக்குது சுண்டல் வாங்கிக் கொடுங்க.''
''என்ன கீதா இது, குமார்ங்கற, நான் சுரேஷ்?''

''அதான்.. பார்த்தீங்களா... உங்களை அஞ்சு மணிக்கு வரச் சொன்னேன்.''

27. ''புலவரே! பத்துப்பாட்டு பாடச்சொன்னா வெத்துப்பாட்டு பாடறீரே! ஒண்ணும் புரியலையே.''

''மன்னா! இது தெலுங்கிலிருந்து ரீமேக் பண்ணின தத்துப்பாட்டு.''

28. ''சீனா போல் இந்தியாவும் உருமாற பாடுபட்டோம்' பலன் கிடைத்ததுனு தலைவர் பேசறாரே?''

''பெட்ரோல் விலை கடுமையா உயர்ந்ததால் எல்லோரும் சைக்கிள்ல போற சூழ்நிலை உருவாகிடுச்சே, அதைச் சொல்றாரு.''

 29. ''பத்திரிகைக்காரங்களை எல்லாம் தன்னோட புருஷனா அந்த நடிகை நினைக்கறாங்க.''

''எப்படிச் சொல்றே?''

''மதிக்கவே மாட்டேங்கிறாங்களே?''
Source : http://adiraipress.blogspot.comசிரிக்க சில நகைச்சுவைகள்!

சூரத் அல் -பாத்திஹா Surat Al-Fātiĥah (The Opener)

அல்-குர்ஆன் 1:1
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
1:3

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Tuesday, September 28, 2010

இறைவனை தொழும்பொழுது...

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே !மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். 
2:45 அல்-குர்ஆன்

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. 2:114 அல்-குர்ஆன்

தொழுபவர்களைப்  பார்க்கும் பொழுது எத்தனை  அழகு நாம் தொழும்பொழுது எவ்வளவு மன நிம்மதி.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கை கட்டித் (படம் பார்க்க) தொழுகின்றனர் .பின் ஏன் இப்படி கை வைக்காதே என்று  சிலர் வம்பு செய்கின்றர். இறைவனை தொழும்பொழுது அதனை இறைவன் ஏட் றுகொள்வானா! என்பதனை  இறைவன்தான் முடிவு செய்ய  வேண்டும் .
தொழும்பொழுது தேவயற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டு தொழுவதில் ஈடுபடுங்கள். இறைவனை தொழும்பொழுது அமைதி காப்போம் .எல்லா மக்களையும் நேசிப்போம்

நபி வழியின் அடிப்படையில் நம்முடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்க வேண்டும்.இன்னும், நாம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை நம்முடைய தொழுகையால் அலங்கரிப்போம்.
நமக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன் !

ஆஹா.. துபாய்..

                                                           புர்ஜ்  க்ஹளிபா  துபாய் 
ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்...
"அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே....?""இந்த கம்பெனி இனி தாங்காதாமே...?""1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே...""போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே..."இப்படி வாய்க்கு வந்தபடி புரளி...
உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா...? இதுவெல்லாம் பொய்யா ..? என்றால்
இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை... வந்த புரளிகளின்
எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை...

Monday, September 27, 2010

அட!இது நம்ம ஆளு!!!

சலீம் நானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை."அடடா என்னமா,பேசுகிறார்.இஸ்லாத்தை அழகா,எவ்வளவு இனிமையா மேற்கோள் காட்டி மாணவர்கள்கிட்டேயும், எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும் விளக்குகிறார்."

பஷீர் காக்காவுக்கு முதலில் புரியவில்லை.சலீம் நானாவைப் பார்த்து கேட்டார்,"என்ன சலீமு,யாரு,என்ன கொஞ்சம் விளக்கமாத்தான் செல்லேன்"என்றார்.

"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க."

பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா.

"காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA".

"சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".

அன்புடன் நன்றி Source : http://peacetrain1.blogspot.comஅட!இது நம்ம ஆளு!!!

Sunday, September 26, 2010

இருதயம் பல விதமாக
Hearts

from Astonishing Pictures Source ; from Astonishing Pictures

குடும்ப கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

திருக்குர்ஆன்-17:31

நீங்கள்

சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்

நாளைய விடிவை !

Saturday, September 25, 2010

‌ உண்மையை ஒருபோதும் எரிக்க முடியாது

உண்மையை ஒருபோதும் எரிக்க முடியாது
அரசியல் குழு: குர்ஆன் நிரந்தரமானது. ஏனெனில் இறைவனும் உண்மையும் எப்போதும் நிரந்தரமானவை என ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், வியாழக்கிழமை, நிவ்யோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
செப்டம்பர் 11 தாக்குதலின் நினைவாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட குர்ஆன் எரிப்பு அசம்பாவிதத்தை விமர்சித்த அவர், 'குர்ஆன் என்பது பரிசுத்த வேதம். அது இஸ்லாத்தின் தூதரது நிரந்தரமான அற்புதங்களில் ஒன்று. அவர்கள், குர்ஆனின் போதனைகளையும் உண்மையையும் எரிப்பதற்காக குர்ஆன் பிரதிகளை எரித்துள்ளனர். எவ்வாறாயினும், குர்ஆன் என்பது எல்லையற்றதும் நிரந்தரமானதுமாகும். ஏனெனில் இறைவனும் உண்மையும் நிரந்தரமானவை என அவர் மேலும் தெரிவித்தார்.
குர்ஆன் எரிக்கப்பட்ட கீழ்த்தரமான மற்றும் மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு உலகம் சாட்சியாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், 'புனித அல்குர்ஆன், இறைவனை வணங்குதல், நீதி, மனிதர்களை கண்ணியப்படுத்தல், சமாதானத்தை ஏற்படுத்தல், சீரிய சிந்தனை, ஆக்கிரமிப்புக்குள்ளானோரைப் பாதுகாத்தல், அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடுதல் என்பவற்றையே போதிக்கின்றது. முன்னைய இறைத்தூதர்களான நூஹ், இப்ராஹீம், இஸ்ஹாக், யூசுப், மூசா, மற்றும் ஈசா எனும் இயேசு கிறிஸ்து ஆகியோரின் பெயர்களும் அவர்களது வரலாறுகளும் இதில் கூறப்படுகின்றன. இந்த உண்மைகளையும் இதிலுள்ள நியாயங்களையும் எரிப்பதற்காகவே அவர்கள் குர்ஆனை எரித்துள்ளனர். எவ்வாறாயினும் உண்மையை ஒருபோதும் எரித்து விட முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடுகளிடையே இடைவெளியையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் இத்தகைய செயல்கள் தீய சாத்தானின் செயல்களாகும் என ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் வலியுறுத்தினார்.
நாம் சாத்தானின் கைப்பொம்மைகளாக செயற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். ஈரான் தேசத்தின் சார்பாக, நான் உலகிலுள்ள அனைத்து சமயங்களுக்கும் அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கும் அவற்றின் வேதநூல்களுக்கும் உயர்ந்த கௌரவத்தையும் மதிப்பையும் வழங்குகின்றேன். இது குர்ஆன், இது பைபிள். நான் இவ்விரண்டுக்கும் மிக உயர்ந்த கண்ணியத்தைக் கொடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். 
‌ Source : http://iqna.ir/ta/news_detail.php?ProdID=662586உண்மையை ஒருபோதும் எரிக்க முடியாது

Friday, September 24, 2010

இரட்டை கோபுரத் தாக்குதல் அமெரிக்காவின் திட்டமே! அஹ்மத்நிஜாத்

லண்டன்: அதளபாதாளத்தில் வீழ்ச்சியடைந்து வந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை உலக அளவில் தூக்கி நிறுத்தும் உள்நோக்குடன் அமெரிக்க அரசின் ஒரு பகுதியினரின் சதித்திட்டமே 2000வது ஆண்டில் நியூயார்க் இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்று ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குற்றம் சாற்றியுள்ளார். ஐ.நா.வின் புத்தாயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு மாநாட்டில் ஈரான் அதிபர் இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநடப்பு செய்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் வீ்ழ்ச்சியை தடுத்து நிறுத்தவும், மத்திய கிழக்காசியாவில் ஜியானிஸ்ட் (இஸ்ரேல்) அரசைக் காக்கவும் அந்நாட்டு அரசின் ஒரு பகுதியினரே சதித் திட்டம் தீட்டி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது” என்று பேசிய அஹமத்நிஜாத், இந்த கருத்தை அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினரும், உலகின் பல நாடுகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஒப்புக் கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாற்றில் உண்மை உள்ளதா என்பதை அறிய விரிவான ஒரு விசாரணையை ஐ.நா.நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 

Thursday, September 23, 2010

கருவாடு தின்றால் சுடுகாடு

கருவாடு தின்றால் சுடுகாடு "மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு" என்று சினிமா பாடல்களில் வரும் வரி கொஞ்சம் மாற்றியமைத்து இனிமேல், 'கருவாடு' சாப்பிட்டால் கூட வெறுங்கூடு தான் என்று பாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தவறு 'கருவாடு' மீது அல்ல, அதை மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களால் தான். சமீபத்தில் சில ஊடகங்கள் பன்றி காய்ச்சல் நோய் வராமல் இருப்பதற்கு கருவாடு சாப்பிட வேண்டும் என்று கிளப்பிய புரளியால் கருவாடு வியாபாரம்  சூடு பிடித்தது குறிப்பிடதக்கது.  பதனிடப்படும் கருவாடுகளால் நச்சுத்தன்மை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது கருவாடுகளை வெளிமாநிலங்களுக்கு மற்றும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தற்காக அதை பதனிடும் போது கேடாமால் இருப்பதற்கு கருவாட்டில் சேர்க்கப்படும் ஃபார்மலின் டி ஹைடு (Formalin De-Hyde) என்ற அமிலம் கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது. இந்த இராசாயன அமிலம் தான் இறந்த மனிதர்களின் உடலை பிணவறையில் பதப்படுத்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  காரினாசி, ராம்நகர் மற்றும் பராதீப் போன்ற வங்காள விரிகுடா பகுதிகளில் கருவாட்டு ஏற்றுமதியாளர்கள் அதை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முன் இந்த இராசாயன அமிலத்தை அதில் கலக்குகிறார்கள். இதானால் நீண்ட நாட்கள் கருவாடு கெடாமல் இருக்கிறது. ஆனால் இவற்றை நீர்க்கச் செய்து தான் கலக்க வேண்டும், அவ்வாறு நீர்க்கச் செய்யாமல் கலப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடாகும் என்று பாராதீப் பகுதி கடல் மீன் வளப்பகுதி அதிகாரி சுப்ரட் தாஸ் தெரிவித்துஉள்ளார்.  புவனேஷ்வரில் அமைந்துள்ள ஒரு மாநில ஆராச்சிக்கூடத்தில் ஆரய்ந்ததில் சில விற்கப்படும் கருவாடுகளில் ஃபார்மலின் டி ஹைடு நீர்க்கச்செய்யாமல் கனிம துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயன கணிமத்தை சில நாடுகள் தடை செய்தும் உள்ளது.
Source : http://www.inneram.com/2010092310775/danger-dry-fish

அவர்களும் நமது நண்பர்கள்அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது.

"இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்".


நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..


இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.

21.நீங்கள் அமைதிபெற
உங்களிருந்தே துணைவியரை
உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும்
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சன்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் பாகம்:21---30 அர்ரூம்]

74.எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத்துணைகளிலிருந்தும்,மக்ககளிலிருந்தும்,
எங்களுக்கு கண்குளிரச்சியைத் தருவாயாக!
[உன்னை] அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும்
எங்களை ஆக்குவாயாக!
என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் பாகம்:19---25.அல் ஃபுர்கான்]
---------------------------------

"நாம் தாய்தந்தை மீது கொள்ளும் அன்பு
கணவன் மனைவி மீது கொள்ளும் அன்பு
பெற்றபிள்ளைகள் மீது கொள்ளும் அன்பு
ஏழை எளியவர்களின் மீது கொள்ளும் அன்பு
உற்றார் உறவினர் மீது கொள்ளும் அன்பு
காதலன் காதலியின் மீது கொள்ளும் அன்பு
உற்ற தோழமைகளின் மீது கொள்ளும் அன்பு
இவையனைத்தையும் முக்கியம்தான்

ஆனால்

அதைவிட பலமடங்கு இறைவன்மீது
அன்பு கொள்ளவேண்டும் ஏனென்றால்
இப்பூமியில்
நம்மைப் படைத்து பாதுக்காத்து பரிசுத்தப்படுத்தி
நமக்கு அன்பான தாய்தந்தை தந்து
நமக்கு அழகானமுறையில் உருவம்தந்து
பிறக்கவைத்து உயிர்வாழச்செய்துள்ளான்
உடல்தந்து உயிர்தந்து உலகில் வாழச்செய்த
இறைவன் தான் நமக்கு உயர்ந்தவன்."
-அன்புடன் மலிக்கா

Wednesday, September 22, 2010

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
முஹிப்புல் இஸ்லாம்

1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் - அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை.  அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4).
2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103)
3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3)
4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3)
தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம்:
தவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்றளவும் கேள்விக்குறியே? தவறாக புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம்.
தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக் கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும். இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர - தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச் சுளிக்கச் செய்கிறது - என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா?
இஸ்லாம், தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும், உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் - இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் - குறுகிய வரையறைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
தவ்ஹீத், குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட - தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்ற மாயத் தோற்றம் - தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பரத் தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.
இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமைக்கும், எல்லாக் காலங்களிலும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக, மிக அழுத்தமாய் இங்கே கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.
தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப் பெயர் அல்ல.
“தவ்ஹீத்” இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி-ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமை அல்ல. ஒரு கொள்கைப் பிரிவார், தங்களைத் தனிமைப்படுத்தி, பிரித்துக் காட்ட, தங்கள் கூட்டமைப்பிற்கு இட்டுக் கொள்ளும் பிரிவுப் பெயருமல்ல. இதை சம்பந்தப்பட்ட அனைவரின் சிந்தனைக்கும் கொண்டு வருகிறோம். தவ்ஹீத்-ஒரு கொள்கைப் பிரிவாருக்கான தனிப் பெயருமல்ல: பிரிவுப் பெயருமல்ல: இது துவக்கத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.
சீரிய சிந்தனையாளர்கள் கூட மற்றவர்களிடமிருந்து, தங்களைத் தவ்ஹீத் வாதிகள் என்றே இனம் பிரித்துக் காட்டினார்கள். தங்களின் கூட்டமைப்பு- அஹ்லுஸ் ஸுன்னத் - வல் - ஜமாஅத்தார்களிடமிருந்து பிரத்தியேகப்படுத்தி, பிரித்துக்காட்ட- தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக் கொண்டார்கள். அதில் பெருமைப்பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று, இவர்கள் பங்கிற்கு, இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவைத் தோற்றுவித்து விட்டார்கள். எடுத்துக் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் ஜீரணிப்பது மிக, மிக சிரமமே.. சீறிப்பாய்கிறார்கள். என்ன செய்வது? உண்மை - சத்தியம் கசக்கத் தானே செய்யும்.
எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தபோது, தவ்ஹீதைத் தனிப்படுத்தும் “ஸ்லோகம்;” எங்காவது எப்போதாவது கேட்கும் முனகலாயிருந்தது. அப்போது, பிரிவுப் பெயர் எதிர்ப்பாளர்கள் கூட - இதைப் பொருட்படுத்தவில்லை. அலட்சியப்படுத்திவிட்டார்கள் போலும்" அல்ல அல்ல. இது காலப்போக்கில் கரைந்து விடும் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். ஆனால் எண்;ணிக்கையில் இவர்கள் கூடுதலாகியபோது, முன கலாயிருந்தது பரவலான முழக்கமாயிற்று.
பத்து, நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் எ;ன்றோ, அதைவிட கூடுதலாகவோ - பக்தர்கள் கூட்டம் கூடியவுடன் - குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ - இயக்கங்கள் காணவோ - அமைப்புகள் ஏற்படுத்தவோ - ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக -
ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்: ஒன்றுபடுத்தப்படவும் வேண்டும் என்ற உன்னத இலட்சியத்திற்காக அல்லாஹ்வால், அருளப்பட்ட அருட்கொடையே - ஓரிறைக் கொள்கை.
- இதை நாமாகக் கூறவில்லை. இறை நெறிநூலும், இறை தூதர்(ஸல்) அவர்கள் வாழ்க்கை வழிகாட்டுதலும் நமக்கிதை ஐயத்திற்கிடமின்றி உணர்த்திக் காட்டுகின்றன. மாதிரிக்கு சில இறைவாக்குகளை மட்டும் தலைப்பில் முகப்புரையாக அன்பர்கள் சிந்தனைக்கு விருந்தாக்கியுள்ளோம். நெறிநூல் அல்குர்ஆனை உற்று நோக்கி இதை உணர்ந்து கொள்ளலாம். இல்லையெனில் மேலோட்டமாய் நோட்ட மிட்டாலே புரிந்து கொள்ளலாம்.
மனித சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓரிறைக்கொள்கை - இறை ஒருமை!
பல தெய்வ வழிகேடுகளை - வழிபாடுகளாகவும், ஒழுக்கக் கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதைப் பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்களையும், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக் கொண்டும், அனைத்து அநாகரிகங்களையும் நன்மைகளாகவும்;, புண்ணியங்களாகவும், விலங்கினும் கீழாய் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க  வைத்த  இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை! இறை ஒருமை!
இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்; மூலக் கொள்கை, இறைவன், ஏகன், அநேகன் அல்லன்" இறைவனை-இறைவனாகவும், மனிதனை மனிதனாகவும் வேறுபடுத்தி இனங்காட்டும் ஒப்பற்றக் கொள்கை! இறைவனை மனிதனோடும், மனிதனையும், மனிதர்களையும் இறைவனோடும் இரண்டறக் கலக்கும் இரு (வழிகே)ட்டில் மூழ்கிக் கெட்டழிந்த மனித சமுதாயம் மீட்சிப் பெறச் செய்த கொள்கை ஓரிறைக் கொள்கை! (அல்குர்ஆன் 112;:1-4)
இவ்வற்புதம், இறுதி நெறிநூல் யாருக்கருளப்பட்டதோ - அந்த இறுதி இறைத் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், 23 ஆண்டுகளில், அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்த பேருண்மை இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சரியத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிகமிக (எளிதாய் இல்லை) கஷ்டமாயிருக்கிறது. ஏன்?
ஒற்றுமையின் எதிர்ப்பதங்கள்:
இவர்கள் வாழ்வு - ஒற்றுமைக்கு எதிர்ப்பதமாகவே அமைந்திருக்கிறது. பிரிந்து வாழ்வதிலும் பிளவுபடுவதிலும் இன்புறும் இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு, இஸ்லாம், ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில், முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது. இன்றைய பெயர் தாங்கிகள்-ஒற்றுமை ஒற்றுமை என்று பிதற்றுவதெல்லாம் வெறும் பிரிவினைவாதங்களே! உண்மை ஒற்றுமையல்ல!
இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்கள் குழு மனப்பான்மைக் கொண்டவர்களே! அன்றி சமுதாய உணர்வு உள்ளவர்கள் அல்ல. ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். விதிவிலக்கு பொது நியதியல்ல.
தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களால் அல்லது ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறும் முன் அல்லது நிறைவுற்றதும் மீண்டும் பிரிந்து விடுவதும் சமுதாயமாகுமா? உலகியல் நியதிப்படி இதை ஒற்றுமை என்று வாதிடலாம். இஸ்லாமிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு, அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்க முடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது.
பிரிவுகளும், பிளவுண்ட குரூப்பிஸ போக்குகளும் (எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் அது ஒற்றுமையாகாது) அணி மனப்பான்மையும், அவற்றிற்கு இவர்கள் சுய வாழ்வு அனுபவங்களும் மிகப் பெரிய சாட்சியங்களாகும்.
இவர்கள் நடைமுறைக்கும், சொந்த அனுபவத்திற்கும், பரம்பரை வழக்கத்திற்கும், மூதாதையர்கள், பெரும்பான்மையோர் முடிவிற்கும் மாற்றமான ஒன்றை - ஏற்பது மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் கடினமே! சாத்தியமே இல்லாத விஷயமாய் தெரிகிறது. இது மனிதன் அல்லது மனிதர்கள், மனித இயல்பின் அடிப்படையில் கண்ட முடிவு. ஆனால் மார்க்க முடிவோ - இதற்கு முரணாயிருக்கிறது. நெறிநூலிலிருந்தும், நபி வழி காட்டுதல்களிலிருந்து நேரடியாக அல்லது அவைகளுக்கு ஒத்ததாக இருக்கக் கூடியவைகள் மட்டும் மார்க்க முடிவுகளாகும்.
அல்லாஹ்வும், இறைத்தூதரும் ஒரு கருத்து அல்லது கொள்கை குறித்து, இறுதி முடிவெடுத்து விட்டால், அதில் எக்கார ணத்தை முன்னிட்டும் வேறு அபிப்பிராயம் அல்லது மாற்றுக் கருத்து ஏற்படுத்திக் கொள்ள எந்த முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரமில்லை. மாற்றுக் கருத்து கொள்பவர் வழிகேட்டில் நிலைத்திருப்பவராவர். (அல்குர்ஆன்: 33:36 இறைவாக்கின் சாரம்சம்)
மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியுமா?
உலகெங்கும், பரவலாய், பிளவுண்டு, சிதறிக்கிடக்கும் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமுதாயமயமாக்கும் உயர் இலட்சியம், நீண்ட நெடுங்காலமாய் வெறும் கற்பனையான தோற்றமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மனித சக்திக்கு உட்பட்டு, மனிதர்கள் சாதிக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது மனித சமுதாயம் முழுமையும் ஒன்றிணைப்பதே! அறிஞர் முதல் பாமரர் வரை இதில் அனைவரும் கருத்தொருமிக்கின்றனர்.
மொழி, இனம், நாடு, நிறம், பல்வேறுபட்ட தத்துவங்கள், அரசியல், பொருளாதாரம், ஆத்திக மதங்களால், நாத்திக சித்தாத்தந்தங்களால் ஏற்பட்டு வரும் வழிகேடுகள், விபரீதங்கள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்க கேடுகள் போன்றவைகளால் கணக் கிலடங்கா பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கி நாளுக்கு நாள், எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட மனித சமுதாய (மய)மாக்கும் சாத்தியக் கூறுகள் - வெற்றுக் கனவுகளே!
இது, சில காலம் முன்பு வரை அஞ்ஞானிகள் கண்ட தவறான முடிவு. ஆனால், இன்று, அல்ஹம்துலில்லாஹ், அந்த அவல நிலை மாறி அதற்குரிய சாத்தியக் கூறுகள் உண்டு. இஸ்லாம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடுடைய சமூக இயல் ஆய்வாளர்களும் உதயமாகி இருக்கிறார்கள். இந்த வியப்பிற்குரிய உண்மையை, ஜீரணிக்கு முன், இதை எடுத்துக் காட்டியவர், ஒரு முஸ்லிம் அல்ல என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. (காண்க நூல்: இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். பக்கங்கள் 256 முதல் 269 வரை) ஆம்! இஸ்லாத்தை அதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியும் வேட்கையுடன், ஆய்வு செய்வோருக்கே இந்த பேருண்மை புலப்படும், பரம்பரை பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இது புலப்படாமல் போனதில் வியப்பில்லை.
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்: அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்-வ-அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு - என்ற இஸ்லாமிய கொள்கை முழக்கத்தோடு, இறைத் தூதர் (ஸல்) அவர்களின், இஸ்லாமிய அழைப்புப் பணித் துவங்கியது. இருபத்து மூன்றாம் ஆண்டு, ஹஜ்ஜத்துல் விதாவுவில், இஸ்லாம் நிறைவுற்றது (இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;.5:3)  என்ற இனிய இறைவாக்கு அருளப்படும்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை, முஸ்லிம்களின் ஜமாஅத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இப்படிப்பட்ட உன்னதமான ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அடிகோலியது எது?
இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் 7:3, இறை வாக்கின் அடிப்படையில், இறையருளியதை மட்டுமே பின்பற்றி இந்த அற்புத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அன்று பிரிவுக்கும், பிளவுக்கும் வித்திடும் அனைத்து வழிகேடுகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன. 3:103, இறைவாக்கின் அடியொற்றி, இஸ்லாமிய ஒற்றுமை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டப்பட்டது.
முஸ்லிம்கள் ஒன்றுபடுவதையும், அதில் நிலைத்திருந்ததையும் 5:3 இறைவாக்கு இஸ்லாம் நிறைவுற்றது என்று உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இறைவாக்கை மூச்சுக்கு முன்னூறு தடவை என்றல்ல, இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலை நாட்டுகிறோம் என் போர் பேச்சிலும், எழுத்திலும் முழங்கி வரும் நம்மவர்கள் - அதிலிருந்து படிப்பினை பெறத் தவறியது ஏன்?
இஸ்லாம் நிறைவு பெறும்போது (5:3) ஓரிறைக் கொள்கை - தவ்ஹீத் - முஸ்லிம்கள் அனைவர்களது வாழ்க்கை நடைமுறையால் பிரதிபலித்துக் காட்டப்பட்டதேயன்றி, தங்களைத் தனிமைப்படுத்திக் காட்ட பயன்படுத்தப் படவேயில்லை. தவ்ஹீத்வாதிகள் என்று யாரும் தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டவில்லை. தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று எதுவும் உருவாகவில்லை. பிற்காலத்தில் அப்படி உருவாக்கும் எந்த முகாந்திரத்தையும் இஸ்லாம் விட்டு வைக்கவில்லை. தவ்ஹீத் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதைத் தனிமைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை என்பதை அன்றைய உண்மை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தார்கள். கொள்கை சகோதரர்கள் இன்றைய வழிகேடர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திட  தவ்ஹீதைப் பயன்படுத்துவது சரிதானா? தவ்ஹீதைப் பிரிவினைவாதத்துக்கும் பிளவுபடுவதற்கும் துணைக்கழைப்பது இஸ்லாத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
தவ்ஹீத்வாதிகள் - நேர்வழி பெற்றவர்கள் உயர்ந்தவர்கள்
அனாச்சாரவாதிகள்- வழிகேடர்கள்-தாழ்ந்தவர்கள். இதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுகிறோம் என்போர் எழுதவில்லை. பேசவில்லை. உண்மை, அவர்களின் நடைமுறை இதை மெய்ப்பிக்கிறது" விதிவிலக்கு வெகு சொற்பம்.
மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்ட ஓரிறைக் கொள்கை! இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்... இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா?
சம்பந்தப்பட்டவர்கள் ஆத்திரம் அடைய வேண்டாம். ஆழ்ந்து சிந்தித்து - தவறிலிருந்து விடுபட அன்போடு அழைக்கிறோம். மற்றப் பிரிவுப் பெயர்கள்: ஹனபி, ஷாஃபி என்றும் மத்ஹபுகள் பெயரால், தரீக்காக்கள் பெயரால், மன்றங்கள் பெயரால், ஜமாஅத்கள் பெயரால், அரசியல் கட்சிகள் பெயரால் இன்னும் எழுத்தில் வடிக்க இயலாத பிரிவிலும் பிளவிலும் சிக்கி, சிதறி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை,
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.7:3 இறையருளியதைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103) இறை நெறிநூலோடு ஐக்கியமாகி ஒன்றுபட்ட உண்மை முஸ்லிம்களாக அழைப்பு விடுக்கும் மகத்தான சேவையில் ஈடுபட வேண்டிய நாம் தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம், ~ஜாக்ஹ், அஹ்ல ஹதீஃது, ஸலஃபி, இவையன்றி, அந்தந்த குழுக்கள் சரிகண்ட தனித்தனி பெயர்களில், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்கள், மன்றங்கள், அழைப்பு மையங்கள் என்று முன்னரே பல்வேறு பெயர்களில் பிளவுண்டோரை மீண்டும் பிரிக்காமல், முஸ்லிம்கள் என்று நம்மை நாமே தனிமைப்படுத்தி பிரிந்து செல்லாமல், முஸ்லிம்கள் என்ற நிலையில் உம்மத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைக்கும் தொலை நோக்கிற்கு - நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு அனைவரையும் கேட்டுக்கொண்டு, அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்து இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம். வஸ்ஸலாம்.
Source : http://www.readislam.netநபிகால இஸ்லாமிய ஒற்றுமை!

வாரிசுகளுக்கு சொத்துரிமை வழங்க பில் கேட்ஸ் மறுப்பு!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தன்னுடைய சொத்துகள் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

உலகின் முதன்மை செல்வந்தராக நீண்ட காலம் கோலோச்சியவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் 'பில் கேட்ஸ்' என்பது அறிந்ததே. 54 வயதான பில் கேட்ஸின் மனைவி 44 வயதான மெலிந்தா. இருவருக்கும் ஜெனீபர்,ரோரி, போயேப் என்ற  3 குழந்தைகள் இருக்கிறார்கள். தருமம் செய்வதிலும் உயரிடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் தனது சொத்து தனது பிள்ளைகளுக்குக் கிடையாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடைய பில் கேட்ஸ் இதுகாறும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயை பல சமூக நல திட்டங்களுக்கு கொடுத்து உதவி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏழைக் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளையும் பில் கேட்ஸின் அறக்கட்டளை இலவசமாக அளித்து வருகிறது. இதுவரை 25கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகள் இதில் பலனடைந்திருக்கிறார்களாம்.

பொன்னான நேரங்கள்-1 by அஹ்மத் பாகவி

பொன்னான நேரங்கள்-1

( 15.04.2010 அன்று ஜித்தாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையிலிருந்து )
வீணாகும் காலங்கள்
வீணாகும் காலங்கள் என எனக்குத் தலைப்பு தரப்பட்டுள்ளது.
அப்படியானால் நமது பொன்னான நேரங்கள் மண்ணாகின்றன, வீணாகின்றன என்று தானே பொருள்படுகிறது.
நேரத்தின் விலையை, மதிப்பை மாண்பை வெகுமதியை, அது நிகழ்த்தும் அதிசயத்தை மக்கள் புரிந்து கொள்ளாததால் தான் நேரத்தை வீண்விரயம் செய்கின்றனர்.
அதன் ஆழமான பொருளை, அது வலியுறுத்தும் உண்மையை, அதை இழப்பதால் ஏற்படும் பேரழிவை, அதனால் விளையும் ஆபத்துகளை மக்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். மக்களைப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வித்தியாசமான தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது.
அதை நாம் இஸ்லாமியப் பார்வையில் அலசுவோம்.
நேரம் என்பதற்கு அரபியில் ‘வக்து’ (وقت) எனக் கூறப்படும்.எனவே விலைமதிக்க முடியாத நேரத்தின் தலைப்பை

الوقت في حيات المسلم

‘ஒரு முஸ்லிமின் வாழ்வில் நேரம்’ என வைத்துக் கொள்ளலாம்.
காலம் என்றால் என்ன?
ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியை காலம் எனக் கூறுகிறோம்.சூரியன் சந்திரனின் இயக்கத்தை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. மனிதன் காலமின்றி வாழவே முடியாது. நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும், ஆண்டு தோறும் மீண்டு வரும் பெரும் பொழுதும் காலத்தின் அவசியத்தைக் காட்டுகிறதல்லவா?
1.காலத்தின் பார்வையிலிருந்து மனிதன் எதனையும் மறைத்து விடமுடியாது.
2.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர காலம் ஒரு போதும் அடங்கி நடக்காது.
3. காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எந்தப் பெருவீரனும்,பேரரசனும் றெ;றிருக்கவில்லை.
4.காலமும் கடல் அலையும் எவருக்காகவும் காத்து நிற்காது என்பார்கள்.
5.ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும், ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது என்பது சீனப் பழமொழி.
6.காலமென்பது ஓய்வற்றது. உலகின் உயிர் போன்றது.நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு. இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.
7. காலமகளின் பின்தலை வழுக்கையாக இருப்பதால் அவளின் முன் கூந்தலைப் பற்றிப்பிடித்துக்கொள்.
காலத்தின் அருமையயையும் நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும தெளிவு படுத்துகின்றன.
சிறு துள்ளி பெருவெள்ளமமாதல் போன்று பல மணித் துளிகள் ஒன்றிக் கலப்பதே காலமாகும். ஒரு நிமிட நேரம் அளவிற் சிறிதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்சிகள்,அதிசயங்கள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.
ஒரு நிமிஷம் தானே!
ஒரு நிமிஷம் தானே! கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களா? குடியா முழுகிப்போகும்?என்றெல்லாம் நம் நண்பர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுவதைப் பர்க்கிறோம்.பாருங்கள் ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்களை!
ஒரு நிமிடத்தில் நடக்கும் அதிசயங்கள்
1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத் தானே சுற்றிவிடுகின்றது.
2. பூமி தன்னைத்தானே சுற்றுவதில் நாம் நிமிடத்திற்கு 91,500 அடி நகர்ந்து போகிறோம்
3. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு நிமிடத்திற்கு 1110 மைல்கள் பிரயாணம் செய்கிறோம.
4. மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 தடவைகள் சுவாசிக்கிறான்.
5. மனிதனின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 72 தடவைகள் ஆகும்.
(ஒரு மணி நேரத்துக்கு 4320 தடவைகள் 24 மணிக்கு 10,3680 தடவைகள்.
ஆயுளில் 250 கோடி தடவைகள் துடிக்கின்றன. (4 நிமிட நேரம் இதயம்
இயங்காவிட்டால் மனிதனின் உயிரே போய்விடும்)
6. 1400 கன அடி மழை மாநிலத்தில் பொழிந்து விடுகின்றன.
7. 35000 தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றன.
8. 68 கார்கள் உற்பத்தியாகின்றன.
9. 4600 செருப்புகள் உற்பத்திச ;செய்யப்படுகின்றன.
10. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
11. 100 பேர் இறக்கின்றனர்.
12. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
13. தேனீ ஒரு நிமிடத்தில் 13 பூக்களில் தேன் எடுக்கிறது.
14. 6000 விண்கற்கள் வீழுகின்றன.
15. அறுபது இலட்சம் சிகரெட்டுகள் பிடிக்கப்படுகின்றன.
16. 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.
நாற்பதாண்டுகளுக்கு முன் (20.8.1966 ஆம் ஆண்டில்) ஒரு புள்ளி விவரக் கணக் கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தியுள்ளார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர்.
இன்று அதை பத்தாகப் பெருக்கிப் பர்க்க வேண்டும்.அப்போது தான் நேரத்தின் அருமை நமக்குப் புரியும்.
மனிதன் நேரத்தின் அருமையைஉணர்ந்து கொள்வதற்காகவே உலகில் எங்கு பார்த்தாலும் கடிகாரங்களைக் காண முடிகிறது.
எங்கும் கடிகாரங்கள்
கையிலே கடிகாரம்,
தெலைபேசியிலே கடிகாரம்,
கணிணியிலே கடிகாரம்,
வீடடுச்சுவர்களிலே கடிகாரம்,
வரவேற்பறையிலே கடிகாரம்
அலுவகத்திலே கடிகாரம்,
பள்ளிக்கூடத்திலே கடிகாரம்
வாகனத்திலே கடிகாரம்,
பேருந்திலே கடிகாரம்
விமானத்திலே கடிகாரம்,
ஊர் முகப்பிலே கடிகாரம்,
பூங்காக்களிலே கடிகாரம்,
காணும் பொருளிலெல்லாம் காலத்தை காட்டும் கடிகாரங்கள்.
பார்க்கும் பொருளிலெல்லாம் நம்மை உணர்த்தும் கடிகாரங்கள்!.
பேருந்து நிலையங்களிலும் இரயில்வே நிலையங்களிலும் விமான நிலையங்களிலும்அவ்வப்போது பயண அறிவிப்பு நேரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?காலத்தின் அருமையை யல்லவா காட்டுகின்றன.
இஸ்லாமியப் பார்வையில் நேரம்
இப்போது இஸ்லாமியப் பார்வையில் நேரம் என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நேரம் இறைவனின் மாபெரும் அருட்கொடை!
நேரம் என்பது இறைவனின் மிகப் பெரும் அருட்கொடையாகும். அந்த நேரத்தைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது (அதாவது குர்ஆனும்  ஸுன்னாவும் என்னகூறுகிறது)  என்பதைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவது குர்ஆன் என்ன கூறுகிறது:-

وَسَخَّر لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآئِبَينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்குமாறு அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.அவனே இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான் (14:33)

وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُوراً

சிந்திக்க விரும்புபவனுக்;கும், நன்றி செலுத்த விரும்புவனுக்கும் இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருமாறு அமைத்துள்ளான்;.(அல்புர்கான் 25:62)
வல்ல இறைவன், ‘இரவைப் பகலைத் தொடர்ந்து வருமாறும், பகலை இரவைத் தொடர்ந்து வருமாறும் ஒரு வினாடி கூட பிசகாது இயங்குமாறு செய்துள்ளான்.இந்த சுழற்சி நிகழ்ச்சியில் ஒருவினாடி கூட பிசகிவிட்டால் உலகமே நிலைகுலைந்துவிடும்.அதனால் தான் ஒவ்வொரு கோளங்களையும் ஒரு வட்டவரைக்குள் (எல்லைக்குள்) சுற்றிவருமாறு செய்துள்ளான்.

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

அவனே இரவையும் பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வாரு கோளங்களும் அதன் வட்டவரைக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. (21:33)
என்ற குர்ஆனின் அறிவியற் செய்தி உலகையே வயப்பிலாழ்த்துகிறது.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللّهِ

மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். (9:36)
அதற்கான கால வரையை அறிவதற்கு சூரியனையும் சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான. இரவை இருளாக்கி சுகம் பெறவும், பகலைப் பிரகாசமாக்கி அவனது அருட்கொடைகளைத் தேடவும் அல்லாஹ் காலத்தை வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வாறு அல்லாஹ் வழங்கிய காலம் மனித குலத்திற் கோர் அருட்கொடையாகும்.
காலத்தைக் குறித்து வரும் வசனங்கள் 18
நேரத்தின் முக்கியத்தைக் கருதியே குர்ஆனில் காலத்தின் மீது ஆணையிட்டுப் பல வசனங்கள் வருகின்றன. குர்ஆனில் ஆணையிட்டு வரும் மொத்தம் வசனங்கள் 92 ஆகும். இவற்றில் 18 வசனங்கள் காலத்தின் மீது ஆணையிட்டே வருகின்றன.
உதாரணமாக:-

وَاللَّيْلِ إِذَا يَغْشَى، وَالنَّهَارِ إِذَا تَجَلَّى

وَالْفَجْرِ ، وَلَيَالٍ عَشْرٍ

وَالضُّحَى، وَاللَّيْلِ إِذَا سَجَى

وَالْعَصْرِ، إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

92:1-2, 89:1-2,93:1-2, 103:1-2 ஆகிய வசனங்களில் இரவின் மீது ஆணையாக! பகலின் மீது ஆணையாக, விடியற்காலையின் மீது ஆணையாக, முற்பகல் மீது ஆணையாக, மாலைவேளை மீது ஆணையாக என்று சத்தியமிட்டுக் கூறுகிறான் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை தனது அடியார்களுக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.
காலத்தைப்பற்றி இறை தூதர் (ஸல்) கூறியது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விலைமதிக்க முடியாத நேரத்தின் மாண்பையும், அதன் முக்கியத்துவத்தையும் குறித்து எடுத்துரைக்கிறார்கள்.
கியாமத் என்னும் விசாரணை நாளிலே இறைவன் மிக முக்கியமானதாக அதுவும் முதன்மையாகக் கேட்கப்படும் நான்கு கேள்விகளிலே தலையாயதாக ‘நேரத்தைப் பற்றியே இரு கேள்விகள் அமைந்திருக்கும்’ என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்படடிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

عن معاذ بن جبل أن النبي صلعم قال

لن تزول قدما عبد يوم القيامة حتي يسأل عن أربع خصال عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين إكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به ( رواه البزار والطبراني باسناد صحيح واللفظ له)

மறுமை நாளில் நான்கு கேள்விகள்
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதங்கள் நகரவே செய்யாது.
1.அவனது வாழ்நாளை எப்படிச் கழித்தான்?
2.அவனது இளமையை எவ்வாறு செலவிட்டான்?
3.அவனது செல்வத்தை எப்படி திரட்டடினான் (சம்பாதித்தான்) ?
அதை எவ்வாறு செலவு செய்தான் ? என்றும் நேட்கப்படும்.
4.அவனது கல்வி கற்றதன் மூலம்; எவ்வாறு செயலாற்றினான்.?
(ஆதாரம் பஸ்ஸார், தப்ரானி)
ஆயுளை பொதுவாகக் கூறிய நபிகளார்(ஸல்) வாலிபத்தை குறிப்பாகக் குறிப்பிடக் காரணம் என்ன?
ஆயுளிலே உட்பட்டது தானே வாலிபம். அதற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்யப்படுவதன் நோக்கம்; என்ன ? ஒரு மனிதனின் ஆயுளில் அவனது வாலிபப் பருவமே மிகவும் முக்கியானது.அதில்தான் அவன் தீரத்தோடும் விவேகத் தோடும் செயல்படுகிறான்.அதுவே அவனது பொற்காலம்.சாதிக்க வேண்டிய வயது. குழந்தைப் பருவமும்; முதுமைப்பருவமும் பலவீனமான பருவங்கள். இந்த இரு பலவீனமான பருவத்திற்கிடையே வந்து போகும் திடமான பருவமே இளமைப் பருவம். எனவே, குறிப்பாக வாலிபப்பருவம் பற்றி வசாரணை செய்யப்படும் என்றார்கள் நபியவர்கள்.
வாலிபப் பருவம் பற்றி இறைமறை
வலிமைமிக்க வாலிபம் பற்றி இறைவன் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفاً وَشَيْبَةً

பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான்.பின்னர் பலவீனத்திற்குப்பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் நரையையும் ஏற்படுத்தினான். (அவன் நாடியதைப்  படைப்பான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்). (அர்ரூம் 30:54)
பலவீனமான நிலையென்றால் குழந்தைப்பருவம் என்றும் பலவீனத்திற்குப்பின் பலம் என்றால் வாலிபப்பருவம் என்றும் மீண்டும் பலத்திற்குப் பின் பலவீனம் என்றால் முதுமை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்தே திடமான இளமப் பருவமே செயலாற்றவேண்டிய காலம் எனத்தெரிகிறது.வலிமையுள்ள காலத்தை நாம் வீண்விரயம் செய்து விடக்கூடாது.
இஸ்லாமிய வணக்கங்கள்
அடுத்து இஸ்லாமிய வணக்கமுறைகளும் நேரத்தின் மதிப்பையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்துவதைப்; பாருங்கள்.
பர்ளான வணக்கங்களும், இதர கடமைகளும்; விலைமதிக்க முடியாத நேரத்தை ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் மனிதனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
உலகின் இயக்கம், அண்டஙகளின் சுழற்;சி,சூரிய சந்திரனின் ஓட்டங்கள், அதன் மூலம் இரவு பகல் மாறி மாறி ஓயாமல்; வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் கால ஓட்டத்தை உணர்த்தி மனிதன் சீராக இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
ஃபஜ்ருத் தொழுகை
ஒவ்வொரு நாளும் இரவுப் பொழுது மறைந்து அதிகாலைப் பொழுது மலர்ந்தும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்ற பாங்கொலி முழக்கம் தூங்கிக் கொண்டிருப்போரை எழுப்பி விடுகிறது. உணர்வர்வற்ற மனிதனை உசுப்பி விடுகிறது. ‘மனிதா! இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூங்கும் நேரம் முடிந்து விட்டது. எழுந்து செயலாற்றும் நேரம் வந்து விட்டது என முழங்குகிறது.
உலகெலாம ஒலிக்கும் அந்த முழக்கத்தை கேளுங்கள்.

حي علي الصلاة – حي علي الصلاة

அல்லாஹ்வைத் தொழ ஓடி வாருங்கள்!

حي علي الفلاح حي علي الفلاح

வெற்றியிச் சிகரத்தை நோக்கி பீடு நடை போட வாருங்கள்!

الصلاة خير من النوم

தூக்கத்தை விட தொழுகை மேலானது.
அப்பப்பா! எப்படிப்பட்ட வார்த்தைகள்! உயிரோட்ட முள்ள சொற்கள், எந்த மதமும் அழைக்காத ஒலி முழக்கங்கள். ஒரு நாளா இருநாட்களா? நாள் தோறும் முழக்கங்கள்! வரரந்தோறும் முழக்கங்கள்! மதந்தோறும் முழக்கங்கள!
ஆண்டு முழுவதும் சதா ஒலித்துக் கொண்டே  இருக்கிறது.  இதைக் கேட்ட பின்னருமா நம் மக்களுக்கு அதிகாலையில் தூக்கம் வருகிறது?
கல்லையும் கனியச் செய்யும் அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும்  இறைவனை நினைந்துருகும் இதயங்கள் நன்றிப் பெருக்கால் அந்த அழைப்பிற்கு பதில் கூறிக் கொண்டே உளுச் செய்துவிட்டு தொழுகைக்கு விரைந்து வருகின்றனர். தாலாட்டும் சைத்தானின் மாய வலையில் விழாது ஓடோடி வரும் காட்சிகள் இறைவனைப் பரவசப்படுத்துகின்றன.
அது மட்டுமா இரவில் சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்திருப்போருக்கு இறைவனின் பேரருள் கிடைக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

اللهم بارك لامتي في بكورها (رواه أحمد، وحاكم

இறைவா! என் சமுதாய மக்களுக்கு அதிகலை வேளையில் அருள் பொழிவாயாக! (ஆதாரம்: அஹ்மத், ஹாக்கிம்)
லுஹர் தொழுகை
அடுத்து  பகல் வேளையிலே வேலையில் மழுமூச்சுடன் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் மனிதன்நோக்கி மீண்டும் அதே பாங்கோசைகள்!

الله أكبر الله أكبر

பணம் தேடும் ஆசையில் படைத்தோனை மறந்து விடாதே! ‘மனிதா! இதுவரை ஊக்கத்தோடு உழைப்பதற்கு வாய்ப்பளித்த வல்லோனை வணங்கிட மீண்டும் ஓடிவா! உணவளித்துக் காக்கும் வல்லானின் முன் நின்று உன் தேவைகளை முறையிட வா! மறுஉலக வெற்றியை நோக்கிவா! என்ற லுஹர் நேர அழைப்பு! இது இரண்டாவது அழைப்பு!
அஸ்ர் தொழுகை
வேலையிலிருந்து வீடு திரும்பியதும் ஓய்ந்து விடாதே! உடல் வலிமையோடு பகலெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி செலுத்த (அஸர்) மாலை நேரத் தொழுகையை நோக்கி வா! இது மூன்றாவது அழைப்பொலி!
மஃரிப் தொழுகை
பகல் நேரம் முடிந்து இரவின் துவக்கம்! மஃரிப் என்னும் அந்தி நேரம் வந்து விட்டது. அமைதியைத் தரும் அந்த நேரத்திலும் அல்லாஹ் வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பதற்காக மீண்டும் நான்காவது அழைப்பொலி !
இஷாத் தொழுகை
இறுதியாக உறங்கச் செல்லு முன் இரவின் இருளிலும் இறைவனை மறவாது ‘பகற் பொழுதை வெற்றிகரமாக கழித்ததற்கு நன்றி செலுத்தும் முகமாக கடைசிநேர பாங்கோசை!’ இது ஐந்தாவது அழைப்பொலி! இறை நினைவிலே வாழும் அடியான் கடைசி நேரத் தொழுகையை தொழுது விட்டு உறங்கச் செல்லுகிறான்.
ஒரு நாள் பொழுதை, அதிகாலைத் தொழுகையோடு துவங்கி இரவுத்தொழுகையோடு முடிக்கும் மனிதன் நாள் முழுவதும் ஐவேளை இறைவனை மறக்காது நன்றிப் பெருக்கோடு துதிக்கிறான். ஒவ்வொரு வேளையும் அவன் முன் நின்று,
இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். நீயே ரப்புல் ஆலமீன்.அகிலத்தின் அதிபதி! நீயே மாலிக்கி யவ்முத்தீன்! நியாயத்தீர்ப்பு நாளின் பேரரசன்!

إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّهِ رَبِّ الْعَالَمِينَ

இன்ன ஸலாத்தீ வநுஸ்கீ வமஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன் ….(6:162) எனது வணக்கம், தியாகம்,வாழ்வு, மரணம் யாவும் உனக்காகவே உள்ளது என உறுதி மொழி எடுத்துக் கொண்டு அந்த நாயனுக்கு மாறு செய்ய  எப்படி மனம் துணியும்? பாவம் செய்ய எப்படி மனம் வரும்? விலை மதிக்கமுடியாத நேரங்களை வீணாக்குவதற்கு எப்படி அவன் மனம் துணிகிறது?
இறை உணர்வுகளோடு செயலாற்றும் அடியானின் பொன்னான நேரங்கள் நன்மையான காரியங்களில் பதிவு செய்யப்படுகின்றன். அவன் மனிதப் புனிதனாக வாழ்கிறான்.
ஜும்ஆத் தொழுகை
அடுத்து வாரந்தோறும் மக்கள் ஒன்று கூடும் சிறப்புத் தொழுகையான ஜும்மாத் தொழுகையை நிறைவேற்றுதற்கு வார அழைப்பு! பல சிறப்பு அம்சங்களோடு இத் தொழுகை நிறை வேற்றப்படுகிறது.இந்த நாளும் இறைவனின் பேரருளைப் பெறுவதற்கு ஒரு பென்னான வாய்ப்பை வழங்குகிறது. இதுவும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் மகத்தான பாக்கியமாகும்.
பர்ளான நபிலான வணக்கங்கள்.
இவை போதாதென்று இரவு வேளைகளில் தனித்திருந்து அமைதியாக இறைவனை வணங்கி வழிபட்டு,அவனோடு உரையாடவும் ஸலாத்துல்லைல் போன்ற இரவுத் தொழுகைகளை தொழுது அல்லாஹ்வின் நினைவுகளிலே தோய்ந்து அவனது அருளைப்; பெறும் மகத்தான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.
இறைவனின் நல்லடியார்கள் அந்த பொன்னான வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. இது குறித்து இறைவன், அருள் மறை குர்ஆனில்

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّداً وَقِيَاماً

(அந்த நடுநிசி வேளைகளில்) இறைவனின் நல்லடியார்கள் நின்றவர்களாகவும், பணிந்து (ஸுஜூது) சிரம் தாழ்த்தியவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள் (25:64) எனக்கூறிச் சிறப்பிக்கிறான்.
இவை போன்று இரவிலும் பகலிலும் அல்லாஹ்வின் நல்டியார்கள் அல்லாஹ்வின் அருளைத்தேடுவதற்கு ளுஹா,தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற நஃபிலான பல வணக்கங்களும் உள்ளன.
இவையெல்லாம் மனிதனை புனிதனாக்கும் சிறப்பு வணக்கங்களாகும். மனிதன் எந்தச் சூழலிலும் அவனது பொன்னான நேரங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் ஒவ்வொரு சந்தர்பத்திலும் நேரத்தை பயனோடு செலவிடுவதற்கு அவனை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
புதுப்பிறையால் புத்தணர்வு.
மாதம் பிறந்து விட்டால் புதுப்பிறை தோன்றுகிறது.அப்போது ஒரு முஸ்லிம் மகிழ்ச்சிப் பெருக்கால் விண்ணை நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறியவனாக அந்த பிறையை நோக்கி “அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று கூறி சந்திரனைப் படைத்து பல நிலைகளாக அமைத்து அதை அல்லாஹ்வின் அத்தாட்சியாக ஆக்கியமைத்ததற்காக நன்றி கூறி,

الله أكبر ألله أكبر الحمد لله الذي خلقك، وقدرك منازل ، وجعلك آية للعالمين . أللهم أهله علينا بالأمن والايمان
والسلآم والاسلآم والتوفيق بما تحب وترضي ، هلال خير ورشد ربي وربك الله

இறைவா! இந்த பிறை தோன்றிய இம்மாதத்தை ஈமானோடும், அமைதியோடும், இஸ்லாமிய நெறிகளோடும், இறைவன் விரும்பும் அருளோடும், நன்மை பயக்கும் நேர்வழியோடும் எங்களை வாழச் செய்வாயாக! என்னுடையவும், உன்னுடையவும் நாயன் அல்லாஹ் வாகும். என்று இறைவனிடம் பிரார்த்தித்து புத்துணர்வு பெறுகிறான். (திர்மிதி, அறிவிப்பவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)

5094 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم-

كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ « هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِى خَلَقَكَ ». ثَلاَثَ مَرَّاتٍ. ثُمَّ يَقُولُ « الْحَمْدُ لِلَّهِ الَّذِى ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا

நன்மையை வழங்கி நேர்வழியைக் காட்டும் பிறையே! என்று மூன்று முறைகள் கூறிவிட்டு, உன்மைப்படைத்த நாயனை ஈமான் கொண்டேன் என்று சொல்லியவர்களாக சென்ற மாதத்தை போக்கி (அந்த மாதத்தைக் குறிப்பிட்டு) புது மாதத்தை வழங்கிய நாயனுக்கே புகழ் யாவும் என்று கூறுவார்கள்.(ஸுனனு அபூ தாவூது)
ஒரு மாதம் பிறந்ததும் அதை எவ்வாறு வரவேற்றுச் சிறப்பிக்க வேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.
ரமளானின் வருகை
ஆண்டு தோறும் ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன.; ஷைத்தன்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அப்போது இறைவனின் அமரர்கள் கீழ்வானத்திற்கு இறங்கி வந்து

يا باغي الخير أقبل ! وياباغي الشر أقصر

நன்மை தேடுவோரே! முன்னோக்கி வா ! தீமையைத் தேடுவோரே! பின்னோக்கிச் செல்!. என்று கூறி நம்மை புத்தார்வத்தோடும் எழுச்சியோடும் இயங்கவேண்டும் என வாழ்த்துவார்கள்.
(அக்பில் : முன்னோக்கு.அக்ஸிர்: (அத்பிர்)- பின்னோக்கு)
ஹஜ்ஜுடைய காலம்
அடுத்து ரமளான் முடிந்ததும் ஹஜ்ஜுடைய காலம் வருகிறது. உலகோர் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே உடையில் ஒரே குரலில் விண்ணதிர தல்பியா கூறியவர்களாக வந்து நிற்பார்கள்.

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். (2:197) என ஹஜ்ஜின் காலத்தைக் குறிப்பிட்டுவிட்டு அதில் கடைபிடிக்கவேண்டிய விதிகளையும் கூறிவிட்டு அதையடுத்து அல்லாஹ’ கூறுகிறான்:

وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللّهُ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى

நீங்கள் செய்யும் நன்மையான காரியங்கள் யாவற்றையும் அல்லாஹ் அறிகிறான். ஹஜ்ஜிலே நல்லமல்களை திரட்டிக் கொண்டு, கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பை மகத்தானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். (2:197)
இவ்வாறே ஆண்டு தோறும் ஏழை எளியவர்களுக்காக வழங்கும் ஸகாத் ஏழை வரியையும் முறையாக வினியோகிக்க வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அறிஞர் பெருமக்களில் சிலர் இந்த வணக்கங்களின் தத்துவத்தைக் குறிப்பிடும் போது
1. ஐவேளைத் தொழுகையை   ஒருநாள் திட்டம்   ميزان اليوم
(One day Programe) என்றும்

2. ஜும்ஆ தொழுகையை ميزان الأسبوع ஒரு வாரத்திட்டம் (One week Programe ) என்றும
3. ரமளான் மாதத்தையும், ஸகாத் கடமையையும்
ميزان العام ஓராண்டுத் திட்டம் ( One year Programe) என்றும்,
4. ஹஜ்ஜுக் கடமையை ميزان العمر ஆயுள் திட்டம் ( Life Programe) என்றும்வகைப்படுத்தி இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
ஒரு நாள் வணக்கம் என்றும்
வாராந்தோறும் நிறைவேற்றும் வணக்கம் என்றும்
ஆண்டிற்கொரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
ஆயுளிலே ஒரு முறை நிறைவேற்றும் வணக்கம் என்றும்,
இவ்வாறாக அல்லாஹ்வுக்காக திட்டமிட்டு அதற்குரிய காலங்களில் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்கள் உள்ளன.அதை ஏனோ தானோ என்றில்லாமல் இது தான் நமது கடைசி வணக்கமாக இருக்கும் என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும் என்பதை மனித சமுதாயத்திற்கு எவ்வாறெல்லாம் இஸ்லாம் உணர்த்துகிறது பார்த்தீர்களா? இவ்வாறு மனித குலம் மாண்பு பெறவேண்டுமென அல்லாஹ் மகத்தான பல சந்தர்பங்களையும் நேரங்களையும் நமக்குத்தந்து ஊக்குவிக்கிறான்.
பொருள் பொதிந்த வணக்கங்கள்! இறையருளையும் சுவர்க்கத்தையும்
பெற்றுத்தரும் அரிய இபாதத்துகள்! வாய்ப்புகள்!! இதனை கண் இமை போல் பேணிக் காத்து வாருங்கள்.
தொடரும்…..

Source : http://albaqavi.com/home/?p=877பொன்னான நேரங்கள்-1


வீணாகும் காலங்கள்! from islamkalvi on Vimeo.

வணங்க சொன்னேன்

வணங்க சொன்னேன்
வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்
காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்


காணமல் இருப்பதும் நானே
எபோதும் இருப்பதும் நானே
காடு மலை கடலும் படைத்தேன்
நட்சத்திர கோளம் படைத்தேன்
சூரியனும் நிலவும் படைத்தேன்
அத்தனையும் படைப்பது எனக்கு
குன் என்ற சொல்லே என்றேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

தோன்றுவது என்னில் என்றேன்
மறைவதும் என்னில் என்றேன்
மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்
மலக்குகளும் நூரில் படைத்தேன்
அதனையும் படைத்து எனக்கு
அடிமைகள் என்றே சொன்னேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

கருவுக்குள் உயிரும் நானே
நெருப்புக்குள் உஷ்ணம் நானே
ஆகாய பெருவெளி நானே
அனைத்திலும் உண்மை நானே

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

வேதங்களும் விதிகளும் நானே
போதகனும் தூதனும் நானே
போதனைகள் செய்ததும் நானே
வேதனைகள் செய்ததும் நானே
காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்
காணமல் இருப்பதும் நானே

எபோதும் இருப்பதும் நானே.
 
Source : http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_03.html
 

ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1 +2+3+4+5

Tuesday, September 21, 2010

தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்( World Breastfeeding Week Special )
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.
அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.
தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.
வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.
வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.
தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.
SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.
பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.
குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.
தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.
முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்
பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..
எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.
உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.
சேவியர்  Source : http://xavi.wordpress.com/2008/08/04/breastfeeding/

LinkWithin

Related Posts with Thumbnails