பினாங்கு - 'நமது வேர்கள்'
இது எழுத நினைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.... ஒரு முறை நண்பர்களுடன் கதைத்தது... பிறகு.. எழுத தூண்டுகோல் ஆனது.
பினாங்கு... சின்னவயதில் கேள்விப்பட்ட 'சொர்க்கம்".
இன்றய திகதியில் என வீட்டு கொல்லைபுரத்துக்கு போர மாதிரி என்று சொல்லும் அளவுக்கு அடிக்கடி போகும் இடம் ஆகிவிட்டது
தரகர் தெருவும் , கடல்கரை தெருவும் கொஞ்சம் தலை தூக்க உதவிய ஊர்.[ ஆனாலும் அங்கு போய் வந்தவர்கள் செய்த அலப்பரை கொஞ்சம் ஒவர்.நம் ஆட்கள் பார்க்கும் வேலை கடுமையானது, ஆனாலும் பினாங்கு கவர்னர் ரேஞ்சுக்கு லந்து பண்ணும் தைரியம் அதிசயமானது.
ரயிலில் வந்து இறங்கியதும், ஒதும் பாத்திஹா, பின்னாடி ஒடி வரும் பசங்க ,… கொடுமை என்னவென்றல் அதில் அவர் மகனும் வருவான் அது அந்த ஆளுக்கு அது தெரியாது" இந்த சிதம்பர ரகசியத்தை வீட்டில் உட்கார்ந்து வெத்திலை, பாக்கு இடிக்கும் கிழவிதான் சொல்லவேன்டும், பிறகு 'என்னை உரிச்சு வச்சிருக்கான் , பிழிஞ்சு வச்சீருக்கான் என்று சர்பத் கடைக்காரர் மாதிரி உளர்வார்.
பினாங்கு ஆட்கள் வந்தவுடன் கேள்விப்படும் சுடு தண்ணி, எறச்சான்ம், சேமியா எல்லாம் கால ஓட்டத்தில் நிறைய மாசுபட்டுவிட்டது.
இவர்கள் தரும் "பல்லி முட்டாய், பிஸ்கோத்துக்கு’ பல முறை ரெங்கு பெட்டிக்கு பக்கதில் வரும் பசங்கள் எல்லாம் இப்பொது இல்லை.
நிலைக்கதவின் ஓரத்தில் நின்று நலம் விசாரிக்கும் நம்தெரு பெண்கள். பல வருடம் ஊருக்கு வராமல் அடம் பிடிக்கும் கணவன், பிள்ளை, உடன் பிறந்தவன் என்று எல்லோரையும் நலம் விசாரிக்கும் முறை[அப்போதெல்லாம் நம் ஜனங்களிடம் வறுமை இருந்தாளும் ஒழுக்கம் இருந்தது]. . " ஆமா அவனை "பொரொயில்"['PRAI" is name of the place in Main Land. Remember PENANG is an island] பார்த்தென், அக்கரைக்கு போயிட்டான்ல என்று சொல்வது, சில அறிவுரைகளையும் [கருத்து கந்தசாமி ஸ்டைலில் நமது ஆட்கள் சொல்வதும் இப்போது வந்த மொபைல் ஒழித்துவிட்டது
காது ஒரத்தில் பஞ்சு, கொஞ்சம் பச்சை கலர் சென்ட். காலரில் மடித்த கர்சீப், ஸ்டிச்கர் கிழிக்காத சட்டை, கையில் பட்டன் குடை என்று [கொஞ்சம் சின்ன வயது ஆட்கள் என்றால் Rayban கண்ணாடி, கலர் செருப்பு வந்த புதிதில் இவர்களின் "பில்டப்பு"க்கு மயங்காதவர்கள் இல்லை.
கஸ்டம்ஸ் விதி முறைகளின் மாற்றம், மற்றும் இப்போது வந்த கார்கோ சர்வீசஸ்... “நாகப்பட்டினதில் ஜப்தி பண்ணிட்டான்”, “டூட்டி கடுமை” போன்ற வார்த்தைகள் மறைய காரணமாகி விட்டது.
"என்ன ஈந்தியா?" [ இந்தியா தான் இவர்கள் வாயில் இப்படி ஆனது]
"பினாங்கிலெ ரோட்டிலெ சோரே போட்டு திங்கலாம்" போன் ற அல்ட்டாப்புகள் எல்லாம் நான் இங்கு வந்த பிறகு அவர்கள் சொன்ன இடங்களை பார்த்து சிரிப்புதான் வந்தது.
கறி வாங்கும் ஓமலில் மீன் வெளியில் தெரிய நடப்பதும், இறைச்சி கடையில் தான் ஒரு திறமையான ஆள் மாதிரி பேரம் பேசுவதும்[இறைச்சிகாடைகாரர்களிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை]
நாளடைவில் கொண்டு வந்த காசு எல்லாம் கந்தூரியிலும், தர்கா நேத்திகடனிளும், ஸ்விட்ச் போட்ட மாதிரி அழும் சொந்தங்களின் கண்ணீருக்காகவும்,சுன்னத்து, காது குத்து தேவைகளில் கரைய 'பொடி மீன் பிடித்து போவதும்...ஒமல் இரட்டையாக மடிப்பதும்....யாரும் நலம் விசாரிக்காமல் நடப்பதும் ...உலகம் இப்படித்தான் என்று எனக்கு அப்போ தே காண்பித்தது
கப்பல் கல்லுக்கு[ship ticket] மனைவியின் நகை, வலையல் எல்லாம் அடமானம் போவதும் இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் "என் இனமே இப்படி அடிப்படை தேவைக்காக மொத்தமாக அவதிப்பட்டதே என்று, இன்றும் என் மனம் வலிக்கும்'
வாழ்க்கையில் நாம் எவ்வளவு சாதித்தாலும், அந்த "வேர்களின்" பங்களிப்பு நிறைய இருக்கிறது.
Zakir Hussain
Source :http://adirainirubar.blogspot.com/2010/09/blog-post_6785.html
No comments:
Post a Comment