கருவாடு தின்றால் சுடுகாடு "மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு" என்று சினிமா பாடல்களில் வரும் வரி கொஞ்சம் மாற்றியமைத்து இனிமேல், 'கருவாடு' சாப்பிட்டால் கூட வெறுங்கூடு தான் என்று பாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தவறு 'கருவாடு' மீது அல்ல, அதை மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களால் தான். சமீபத்தில் சில ஊடகங்கள் பன்றி காய்ச்சல் நோய் வராமல் இருப்பதற்கு கருவாடு சாப்பிட வேண்டும் என்று கிளப்பிய புரளியால் கருவாடு வியாபாரம் சூடு பிடித்தது குறிப்பிடதக்கது. பதனிடப்படும் கருவாடுகளால் நச்சுத்தன்மை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது கருவாடுகளை வெளிமாநிலங்களுக்கு மற்றும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தற்காக அதை பதனிடும் போது கேடாமால் இருப்பதற்கு கருவாட்டில் சேர்க்கப்படும் ஃபார்மலின் டி ஹைடு (Formalin De-Hyde) என்ற அமிலம் கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது. இந்த இராசாயன அமிலம் தான் இறந்த மனிதர்களின் உடலை பிணவறையில் பதப்படுத்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. காரினாசி, ராம்நகர் மற்றும் பராதீப் போன்ற வங்காள விரிகுடா பகுதிகளில் கருவாட்டு ஏற்றுமதியாளர்கள் அதை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முன் இந்த இராசாயன அமிலத்தை அதில் கலக்குகிறார்கள். இதானால் நீண்ட நாட்கள் கருவாடு கெடாமல் இருக்கிறது. ஆனால் இவற்றை நீர்க்கச் செய்து தான் கலக்க வேண்டும், அவ்வாறு நீர்க்கச் செய்யாமல் கலப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடாகும் என்று பாராதீப் பகுதி கடல் மீன் வளப்பகுதி அதிகாரி சுப்ரட் தாஸ் தெரிவித்துஉள்ளார். புவனேஷ்வரில் அமைந்துள்ள ஒரு மாநில ஆராச்சிக்கூடத்தில் ஆரய்ந்ததில் சில விற்கப்படும் கருவாடுகளில் ஃபார்மலின் டி ஹைடு நீர்க்கச்செய்யாமல் கனிம துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயன கணிமத்தை சில நாடுகள் தடை செய்தும் உள்ளது.
Source : http://www.inneram.com/2010092310775/danger-dry-fish
No comments:
Post a Comment