மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தன்னுடைய சொத்துகள் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலகின் முதன்மை செல்வந்தராக நீண்ட காலம் கோலோச்சியவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் 'பில் கேட்ஸ்' என்பது அறிந்ததே. 54 வயதான பில் கேட்ஸின் மனைவி 44 வயதான மெலிந்தா. இருவருக்கும் ஜெனீபர்,ரோரி, போயேப் என்ற 3 குழந்தைகள் இருக்கிறார்கள். தருமம் செய்வதிலும் உயரிடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் தனது சொத்து தனது பிள்ளைகளுக்குக் கிடையாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடைய பில் கேட்ஸ் இதுகாறும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயை பல சமூக நல திட்டங்களுக்கு கொடுத்து உதவி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏழைக் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளையும் பில் கேட்ஸின் அறக்கட்டளை இலவசமாக அளித்து வருகிறது. இதுவரை 25கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகள் இதில் பலனடைந்திருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment