சுபுஹுத் தொழுது-
மேற்கு நோக்கி வாக்கிங்!
இருந்து எழுந்து-
பாத்திர பண்டம் துலக்காமல்...
குனிந்து நிமிர்ந்து-
வீடு வாசல் பெருக்காமல்...
சர்க்கரை கரைக்க
சாலையெல்லாம் பெண்கள்!
நடந்து கடக்கையில்
நான் கேட்ட சம்பாக்ஷ்னையில்...
மெகா தொடர்களின்
மகா காட்சிகள்!
உழைத்து உடல் களைக்காமல்...
உண்டு கொழுத்து...
வயிற்றின் டயர் எறிக்க
வழியெல்லாம் ஆண்கள்!
கடக்க நடக்கையில்
காதில் விழுந்ததில்
பாஸ்போர்ட் விசா போய்
மனைக்கட்டு, சதுர அடி!
பள்ளிக் கூடம் போகாமல்-
பள்ளி வாசல் நாடாமல்-
மடிப்புக் கலையாச் சட்டையும்
மாப்ளே மச்சான் பேச்சும்
அலைபேசி விரலுமாய் சிறுசுகள்!
கடக்கும்போது கவனித்ததில்
குறுஞ்செய்தி குசும்பு,
குசுகுசு முனகல்!
வயல்வெளி யெல்லாம்
வீட்டு மனையாகுது...
வாய்க்கால் வரப்பெல்லாம்
கழிவு நீர் ஓடுது!
திரும்பிய திசையெல்லாம்
திடலாத் தெரியாது...கருவேலங் காட்டிலும்
கட்டுமானப் பனி நடக்குது!
பச்சயம் பற்றாமல்
பிராண வாயு குறையுது...
பக்கத்து வீட்டாரோடு
பரிச்சயம் கசக்குது!
விளையாட்டு மைதானம்
வெரிச்சோடி கிடக்குது...
சிறுசு பெருசெல்லாம்
சீக்கு வந்து வாடுது!
மாற்றி யோசி, மக்களே...!
ஊர் பெருக்கலாம்
ஊண் பெருக்கலாமா?
வாயைக் கட்டினால்
நோய் கட்டுறாதா?
நேர் வழி உழைத்துண்டால்
பை பாஸ் அவசியமா?
வீட்டு வேலை செய்தல்
நடைப் பயிற்சியை விட
நான்கு மடங்கு நல்லதன்றோ?
விடியோ கேமில்
வியர்க்காது இளைஞனே...
வெட்ட வெளியில் வா
விட்டதெல்லாம் விளையாடு!
உன்னை மாற்று...
ஊர் மாறும்!
-சபீர்
நன்றி: சகோதரர் ஷாஹுல் ஹமீது
http://adirainirubar.blogspot.
No comments:
Post a Comment