புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே !
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. 2:114 அல்-குர்ஆன்
தொழுபவர்களைப் பார்க்கும் பொழுது எத்தனை அழகு நாம் தொழும்பொழுது எவ்வளவு மன நிம்மதி.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கை கட்டித் (படம் பார்க்க) தொழுகின்றனர் .பின் ஏன் இப்படி கை வைக்காதே என்று சிலர் வம்பு செய்கின்றனர். இறைவனை தொழும்பொழுது அதனை இறைவன் ஏட் றுகொள்வானா! என்பதனை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும் .
தொழும்பொழுது தேவயற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டு தொழுவதில் ஈடுபடுங்கள். இறைவனை தொழும்பொழுது அமைதி காப்போம் .எல்லா மக்களையும் நேசிப்போம்
நபி வழியின் அடிப்படையில் நம்முடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்க வேண்டும்.இன்னும், நாம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை நம்முடைய தொழுகையால் அலங்கரிப்போம்.
நமக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன் !
No comments:
Post a Comment