Showing posts with label அல்குர்ஆன் AL QUR'AN. Show all posts
Showing posts with label அல்குர்ஆன் AL QUR'AN. Show all posts

Tuesday, August 21, 2012

அல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா?

 அல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா?
இறைவனுக்கு உருவம் உண்டா?

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சிலர் உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றனர்.

குர்-ஆன் தனித்துவமான உயர் இலக்கிய நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருக்கிறது. அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும். ”பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால், உருவமிருந்தால் இது எப்படி இயலும்?

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன 5:64

Sunday, August 5, 2012

பத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What is said about the battle of Badr in the Quran


3:13   قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا  ۖ فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ ۚ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَن يَشَاءُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُولِي الْأَبْصَارِ

குர்ஆன் 3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.

3:123   وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ  ۖ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
குர்ஆன் 3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

8:5   كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِن بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِّنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.

8:17   فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ اللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ اللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

குர்ஆன் 8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

8:41   وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِن كُنتُمْ آمَنتُم بِاللَّهِ وَمَا أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

குர்ஆன் 8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

8:42   إِذْ أَنتُم بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُم بِالْعُدْوَةِ الْقُصْوَىٰ وَالرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَاخْتَلَفْتُمْ فِي الْمِيعَادِ  ۙ وَلَٰكِن لِّيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَن بَيِّنَةٍ وَيَحْيَىٰ مَنْ حَيَّ عَن بَيِّنَةٍ ۗ وَإِنَّ اللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ

குர்ஆன் 8:42. (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
Source : http://www.tamililquran.com/

What is said about the battle of Badr in the Quran
The Battle of Badr is one of the few battles explicitly discussed in the Qur'an.
Qur'an 3:13 Already there has been for you a sign in the two armies which met - one fighting in the cause of Allah and another of disbelievers. They saw them [to be] twice their [own] number by [their] eyesight. But Allah supports with His victory whom He wills. Indeed in that is a lesson for those of vision.

Qur'an 3:123And already had Allah given you victory at [the battle of] Badr while you were few in number. Then fear Allah ; perhaps you will be grateful.

Qur'an 8:5 [It is] just as when your Lord brought you out of your home [for the battle of Badr] in truth, while indeed, a party among the believers were unwilling,

Qur'an 8:17.And you did not kill them, but it was Allah who killed them. And you threw not, [O Muhammad], when you threw, but it was Allah who threw that He might test the believers with a good test. Indeed, Allah is Hearing and Knowing.

Qur'an 8:41And know that anything you obtain of war booty - then indeed, for Allah is one fifth of it and for the Messenger and for [his] near relatives and the orphans, the needy, and the [stranded] traveler, if you have believed in Allah and in that which We sent down to Our Servant on the day of criterion - the day when the two armies met. And Allah , over all things, is competent.

Qur'an  8:42.[Remember] when you were on the near side of the valley, and they were on the farther side, and the caravan was lower [in position] than you. If you had made an appointment [to meet], you would have missed the appointment. But [it was] so that Allah might accomplish a matter already destined - that those who perished [through disbelief] would perish upon evidence and those who lived [in faith] would live upon evidence; and indeed, Allah is Hearing and Knowing.

Source : http://quran.com/

Thursday, February 24, 2011

தமிழில் குர்ஆனிலிருந்து ரப்பனா துவா



இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு
குர்ஆன்.2:201

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
குர்ஆன் 3:53

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
குர்ஆன் 5:83

அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
குர்ஆன் 7:23

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
குர்ஆன்14:40

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
குர்ஆன்23:106

நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் "எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
குர்ஆன் 23 : 109

ஆனால், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!" என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
குர்ஆன்34:19

அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
குர்ஆன் 40:11

(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-"
குர்ஆன்50:27

இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
குர்ஆன் 2:61

Source : http://quran.com/search?q=rabbanaa+dua

Wednesday, October 27, 2010

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று


வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

-- Azeezudheen.
 Source : http://adirainirubar.blogspot.com/2010/10/blog-post_27.html

Wednesday, September 29, 2010

சூரத் அல் -பாத்திஹா Surat Al-Fātiĥah (The Opener)

அல்-குர்ஆன் 1:1
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
1:3

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Tuesday, September 28, 2010

இறைவனை தொழும்பொழுது...

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே !



மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். 
2:45 அல்-குர்ஆன்

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. 2:114 அல்-குர்ஆன்

தொழுபவர்களைப்  பார்க்கும் பொழுது எத்தனை  அழகு நாம் தொழும்பொழுது எவ்வளவு மன நிம்மதி.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கை கட்டித் (படம் பார்க்க) தொழுகின்றனர் .பின் ஏன் இப்படி கை வைக்காதே என்று  சிலர் வம்பு செய்கின்றனர். இறைவனை தொழும்பொழுது அதனை இறைவன் ஏட் றுகொள்வானா! என்பதனை  இறைவன்தான் முடிவு செய்ய  வேண்டும் .
தொழும்பொழுது தேவயற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டு தொழுவதில் ஈடுபடுங்கள். இறைவனை தொழும்பொழுது அமைதி காப்போம் .எல்லா மக்களையும் நேசிப்போம்

நபி வழியின் அடிப்படையில் நம்முடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்க வேண்டும்.இன்னும், நாம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை நம்முடைய தொழுகையால் அலங்கரிப்போம்.
நமக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன் !

Monday, September 20, 2010

தமிழ் இஸ்லாமிக் பாட்டு - ஹச்பி ரப்பி - E.M.ஹனிபா Tamil Islamic Song - Hasbi RabbiTamil Islamic Song - Hasbi Rabbi - E.M.Haniffa

ஹச்பி ரப்பி ஜல்லல்லாஹ் மாபி கல்பி க்ஹெயரல்லாஹ் நூரூ முஹம்மது சல்லல்லாஹ் லாயிலாஹா...லாயிலாஹா இல்லல்லா

 (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்--.17:45 Al Quran

Wednesday, September 8, 2010

துபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மேர்பை வெற்றி

துபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மேர்பை வெற்றி
குர்ஆன் செயற்பாட்டுக் குழு: 14ஆவது துபாய் சர்வதேச குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த போட்டியாளர் முஹம்மத் இர்சாத் மேர்பை முதலிடம் பெற்று 250,000 திர்ஹம் பணப்பரிசைப் பெற்றுக் கொள்ள, பங்களாதேசைச் சேர்ந்த மஸ்ஊத் ரித்வான் மற்றும் பஹ்ரைனைச் சேர்ந்த மிசாப் ஈஸா ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ரித்வான் 200,000 திர்ஹம்களையும், ஈஸா 150,000 திர்ஹம்களையும் பெற்றுக் கொண்டனர்.
அஹ்மத் யசூரி (எகிப்து), காலித் அபூபக்கர் (யெமன்), கலீல் தாஹிர் (லிபியா), மப்வானா அஸ்ஸா (தான்சானியா), அம்மாh புகிஸ் (சவூதி அரேபியா), நாசிர் சர்ராம் (குவைத்), முஹம்மத் லட்ராச் (மொரோக்கோ) மற்றும் முஹம்மத் ஒஸ்மான் (சூடான்) ஆகியோர் அடுத்தடுத்த பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.
80 மற்றும் 80க்கு மேல் புள்ளிகள் பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் 30,000 திர்ஹம்களும், 70 – 79 வரை புள்ளிகள் பெற்றோருக்கு 25,000 திர்ஹம்களும், 70க்குக் குறைவாகப் பெற்றோருக்கு 20,000 திர்ஹம்களும் வழங்கப்பட்டன.
திங்கட்கிழமை இரவு, டுபாய் வர்த்தக சதுக்கத்தில் இடம்பெற்ற நிறைவு விழாவில், சூடானின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் ஸ்வார் அல்தஹப் மற்றும் 70 போட்டியாளர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 சிறந்த போட்டியாளர்களுக்கு கௌரவமளித்தார். போட்டியாளர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் உரை நிகழ்த்திய, விருது வழங்கல் நிகழ்வின் தவிசாளர் கலாநிதி சயீத் ஹாரிப் குறிப்பிடும் போது, டுபாய் சர்வதேச குர்ஆன் போட்டி, நாட்டினுள்ளும் நாட்டிற்கு வெளியேயும் குர்ஆனை மனனம் செய்யும் நடவடிக்கைகளையும் குர்ஆனை ஓதும் வாய்ப்புகளையும் அதிகப்படுத்திக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் வகை செய்கின்றது என்றார்.
டுபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மேர்பை வெற்றி
Source :http://iqna.ir/ta/news_detail.php?ProdID=649584

Wednesday, September 1, 2010

நோன்பு.


2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.

5:95. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.

9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

Tuesday, August 31, 2010

அல்-குர்ஆன் டிஜிட்டல் பிளாஷ் -----المصحف الرقمي الفلاشي


"ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும்."

-திருக்குர்ஆன் 2:185

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

திருக்குர்ஆன் 2:2


(நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 38:29)

நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121)


அல்-குர்ஆன்  டிஜிட்டல்  பிளாஷ் 

அவசியம் பார்க்க வேண்டும் -.பார்த்து ஓதி பயன் அடைய வேண்டும் .



--காண  இங்கு  கிளிக் : செய்யவும்المصحف الرقمي الفلاشي 



Friday, August 13, 2010

அல் குர்ஆன் - DOWNLOAD செய்து கொள்ளுங்கள்

அல் குர்ஆன் - DOWNLOAD செய்து கொள்ளுங்கள்


அன்பு சகோதரர்களே,  அல் குர்ஆன் மிக அழகிய தெளிவான எழுத்து தோற்றத்தில் PDF வடிவில் வெளிவந்துள்ளது.                                                               

கிழே  உள்ள சுட்டியிலிருந்து நீங்கள் தரவிரக்கம் செய்து ஓதி பயனடைவீர்கள் என்று நம்புகிறோம்.


குர்ஆன் PDF FORMAT



தயவு செய்து இந்த தரவிரக்க சுட்டியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


ஈ மடலில் இந்த குர்ஆனை நமது அதிரைநிருபருக்கு அனுப்பிவைத்த அன்பு சகோதரர்
மு செ மு நெய்னா முகம்மது அவர்களுக்கு மிக்க நன்றி.

- அதிரைநிருபர் குழு

Saturday, April 3, 2010

அல்குரானையும் ,கிதாபினையும்....

 

அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.

 

 நேர்த்தியான அச்சிட்டு ஒரு புத்தகம் இருக்கிறது
என் பெயர் தெரிய
, இங்கே சில குறிப்புகள் உள்ளன... 

அழகிய அட்டையில் மற்றும் காட்சிக்கு இனிமையாய் நன்றாக பிணைக்கப்பட்டுள்ளது
ஆனால் முஸ்லிம்கள் இதயத்தில் நான் அரிதாக காணப்படுவன் நான்!

ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில் 
நான் வரிசைப் படுத்தப்பட்டு அழகாக   வைக்கப்பட்டு  இருக்கிறேன்

மரியாதையுடன் அதிகமாக   முத்தம் நிறைய கிடைக்கப் பெறுகின்றேன்
ஆனால் எனது  முக்கியத்தினை  அவர்கள் எப்போதும் இ
ழந்து விடுவதனை  பார்கின்றேன்!

ஒரு மென்மையான குரலில் அவர்கள் என்னை ஓதாமல்
என்னை உள்ளே வைத்து புறக்கணிக்கப்படுவது வேதனையானது.
அதனால் வரும் இழப்பு என்னைப் பாராமல்
ஓதாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்குதான்
என்பதனை அவர்கள் அறியாமல் இருப்பது வேதனை!

உண்மையாக   சொல்கிறேன், இந்த நேரத்தில் எனக்கு இது பழகிவிட்டது
எனது  அருமை
யினை  பயன்படுத்துவது மிக மிக அரிதாக உள்ளது!

நான் உலகத்தில்  மாற்ற
ம் கொண்டு  வர முடியும்.
நான் ஒரு அதிசயம், என் வார்த்தை புரிந்துக் கொள்வதில்  உயர்வு  உள்ளது.

நான் உங்கள் காப்பாளர் ,  நான் உங்கள் வழிகாட்டியாக இருக்கிறேன்,
என்னைப் பயன் படுத்திக் கொண்டோர் உயர்வடைவார்.

எனக்கு பெயர் வைத்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ்
எனது புனித
பெயர் குர்ஆன்.
----------------------
அல்லாஹ்வின் அருளை அலமாரியில் வைத்து அழகு பார்க்கும் நிலை வேண்டாம் .

அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.

 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

 தயவு செய்து கீழ் உள்ள லிங்குகளை கிளிக் செய்து ஓதுங்கள் 

Al Qura`n explorer

 QuranFlash

 Qurantour.com

 Tanzil.info

LinkWithin

Related Posts with Thumbnails