Showing posts with label அல்லாஹ். Show all posts
Showing posts with label அல்லாஹ். Show all posts

Friday, June 12, 2015

படச்சோனே ...

அல்லாஹ்வைத் தமிழில் எப்படி அழைப்பது என்பது குறித்து பலருக்கும் பலமாதிரி அபிப்பிராயங்கள் இருக்கின்றன.
இறைவன் என்று சொல்லலாமா ?
அது சரியா என்று கேட்கிறார்கள்.
மனதில் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு ஆண்டவன் என்றாலும் இறைவன் என்றாலும் அது அல்லாஹ்வைத்தான் குறிக்கும்.
இந்த விஷயத்தில் கேரளா முஸ்லிம்கள் தெளிவு.
குமரி மாவட்ட முஸ்லிம்களிலும் ஏராளமானவர்கள் தெளிவுதான்.
அவர்கள் " படச்சோனே " என்பார்கள்.
அதற்கு " படைத்தவனே " என்பதே பொருள்.
அல்லாஹ் தனது தூதருக்கு இறக்கிய குரானின் முதல் அத்தியாயத்திலும் ...

Tuesday, December 9, 2014

குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?”


குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?” என்று கேட்டார் சூஃபி.

இதற்கென்ன கேள்வி? என்பது போல் எண்ணினேன். ”அல்லாஹ்வைத்தான் நினைவு கூர்வோம்” என்று எங்களில் சிலர் பதில் சொன்னோம். மௌனமாக இருந்தவர்களின் பதிலும் அதுதான். அவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

“அதாவது, குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அவனின் பேச்சு – கலாம். எனவே அதனைச் செவியுறும்போது அவனின் நினைவு வருகிறது. சரி. மற்ற ஒலிகளில் ஓசைகளில் அவனை நீங்கள் நினைவு கூர்வதில்லை அல்லவா? ஆனால், ஒலிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதே அவனின் சிஃபத்தெ கலாம் என்னும் தெய்விகப் பண்புதான் அல்லவா? ஒலிகளுக்குள் அவனின் குரலைக் கேட்க வேண்டும் எனில் வேறு இரு செவிகள் வேண்டும்.

Thursday, March 14, 2013

ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,..

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.- Quran. 62:9

Thursday, March 7, 2013

இறைவா..!

உங்கருணையில துளியளவு
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா

மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா

நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா

எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா

என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா

எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா

இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிறை யாக்குமப்பா

வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா...

rafeeqspoem.
இவன் சக்தி..!
Source : http://rafeeqspoem.blogspot.in/

Tuesday, August 21, 2012

அல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா?

 அல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா?
இறைவனுக்கு உருவம் உண்டா?

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சிலர் உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றனர்.

குர்-ஆன் தனித்துவமான உயர் இலக்கிய நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருக்கிறது. அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும். ”பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால், உருவமிருந்தால் இது எப்படி இயலும்?

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன 5:64

Monday, February 27, 2012

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!

"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.

Friday, December 23, 2011

*உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா**? **உங்களின் வாழ்நாள் நீள** **வேண்டுமா**?*



*உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா**? 
**உங்களின் வாழ்நாள் நீள** **வேண்டுமா**?* ****
 
 தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் *தன் 
வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து
 
** **நடக்கட்டும்* என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) ****
 
  **** 
 *அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று** **விரும்புகின்றீர்களா**?* **** 
 யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் 
பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ****
 
  **** 
 *உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும்**, **அது மன்னிக்கப்பட** **வேண்டுமென்று 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 யார் ஒரு நாளில் நூறு தடவை **** 
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ**** 
 *'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி**’* என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் 
நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
(புகாரி, முஸ்லிம்) ****
 
  **** 
 *உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம்** **இருக்க 
வேண்டுமென்று விரும்புகின்றீர்களா**?* ****
 
 யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது 
ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள்
 
கூறினார்கள். (புகாரி) ****
 
  **** 
 *அல்லாஹ் உங்கள் மீது**, **அருள்புரிய வேண்டுமென நீங்கள்** ** 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை 
ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(
 
புகாரி) ****
 
  **** 
 *அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று** **விரும்புகின்றீர்களா**?* 
****
 
 யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் 
அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ****
 
  **** 
 *அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா**?* **** 
 ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் 
நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்)
 
அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ****
 
  **** 
 *ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா**?* **** 
 ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் 
செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ****
 
  **** 
 *சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என** **விரும்புகின்றீர்களா**?* **** 
 அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக 
அதுபோன்ற (வீட்டை)
 
சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ***
 
*
 
  **** 
 *அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா**?* **** 
 ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் 
அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக்
 
கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்) ****
 
  **** 
 *உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று** ** 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) 
அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) ****
 
  **** 
 *ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென** ** 
விரும்புகின்றீர்களா**?* ****
 
 ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு 
சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ****
 
  **** 
 *மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று** **விரும்புகின்றீர்களா**?* **** 
 ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து 
கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம்
 
செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும்
 
கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று
 
கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,
 
முஸ்லிம்) ****
 

Saturday, October 15, 2011

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
1) அல்லாஹ் - அல்லாஹ்
2) அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
3) அர்ரஹீம் - நிகரற்ற அன்புடையவன்
4) அல் மலிக் - பேரரசன்
5) அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன்
6) அஸ்ஸலாம் - சாந்தி மயமானவன்
7) அல்முஃமின் - அபயமளிக்கிறவன்
8) அல்முஹைமின் - பாதுகாப்பளிக்கிறவன்
9) அல் அஜீஜ் - யாவற்றையும் மிகைத்தவன்
10) அல் ஜப்பார் - அதிகாரத்தன்மையுள்ளவன்
11) அல் முதகப்பீர் - பெருமைக்குரியவன்
12) அல் காலிக் - படைக்கிறவன்
13) அல் பாரிஉ - புதிதாக உண்டாக்குகிறவன்
14) அல் முஸவ்விர் - உருவம் அமைக்கிறவன்
15) அல் ஙஃப்பார் - அதிகம் மன்னிக்கிறவன்
16) அல் கஹ்ஹார் - அடக்கியாள்கிறவன்
17) அல் வஹ்ஹாப் - பெருங்கொடையாளன்
18) அர் ரஜ்ஜாக் - உணவளிக்கிறவன்
19) அல்ஃபத்தாஹ் - வெற்றியளிக்கிறவன்
20) அல் ஙலீம் - மிக்க அறிந்தவன்
21) அல் காபிள் - இறுக்கிப் பிடிக்கிறவன்
22) அல் பாஸித் - விரிவாக வழங்குகிறவன்
23) அல்ஃகாபிள் - தாழ்த்துகிறவன்
24) அர்ராஃபிஃ - உயர்த்துகிறவன்
25) அல்முஇஜ்ஜூ - கண்ணியமளிக்கிறவன்
26) அல்முதில்லு - கேவலப்படுத்துகிறவன்
27) அஸ்ஸமீஉ - செவியேற்கிறவன்
28) அல் பசீர் - பார்க்கிறவன்
29) அல் ஹகம் - தீர்ப்பளிக்கிறவன்
30) அல் அத்லு - நீதியாளன்
31) அல்லதீஃபு - உள்ளன்புள்ளவன்
32) அல் கபீர் - செய்தி அறிகிறவன்
33) அல் ஹகீம் - சாந்தமுள்ளவன்
34) அல் அளீம் - மகத்துவமிக்கவன்
35) அல்ஙஃபூர் - மிக மன்னிக்கிறவன்
36) அஷ்ஷகூர் - நன்றி பாராட்டுகிறவன்
37) அல் அலிய்யு - உயர்வானவன்
38) அல் கபீர் - மிகப் பெரியவன்
39) அல் ஹஃபீள் - பாதுகாக்கிறவன்
40) அல் முகீத் - உணவை உற்பத்தி செய்கிறவன்
41) அல் ஹஸீப் - போதுமானவன்
42) அல் ஜலீல் - மாண்புமிக்கவன்
43) அல் கரீம் - சங்கைக்குரியவன்
44) அர்ரகீப் - கண்காணிக்கிறவன்
45) அல் முஜீப் - முறையீட்டை ஏற்பவன்
46) அல்வாஸிஃ - விசாலமானவன்
47) அல் ஹகீம் - ஞானமுள்ளவன்
48) அல் வதூத் - உள்ளன்புமிக்கவன்
49) அல் மஜீத் - மேன்மைக்குரியவன்
50) அல் பாஇஸ் - இறந்தவர்களை எழுப்புகிறவன்
51) அஷ்ஷஹீத் - சாட்சியாளன்
52) அல்ஹக் - உண்மையாளன்
53) அல் வகீல் - பொறுப்பேற்கிறவன்
54) அல்கவிய்யு - வல்லமைமிக்கவன்
55) அல் மதீன் - உறுதி வாய்ந்தவன்
56) அல் வலிய்யு - உதவியாளன்
57) அல் ஹமீத் - புகழுக்குரியவன்
58) அல் முஹ்ஸீ - சூழ்ந்து அறிகிறவன்
59) அல் முப்திஉ - ஆரம்பமாக உண்டாக்குகிறவன்
60) அல் முயீத் - மீளவைக்கிறவன்
61) அல் முஹ்யீ - உயிர்ப்பிக்கிறவன்
62) அல் முமீத் - மரணிக்கச் செய்கிறவன்-
63) அல் ஹய்யு - நித்திய ஜீவனானவன்
64) அல் கய்யும் - என்றும் நிலைத்திருப்பவன்
65) அல் வாஜித் - நினைத்ததை பெறுபவன்
66) அல் மாஜித் - மேன்மையானவன்
67) அல் வாஹித் - தனித்தவன்
68) அல் அஹத் - ஏகன்
69) அஸ்ஸமத் - தேவையற்றவன்
70) அல் காதிர் - ஆற்றலுள்ளவன்
71) அல் முக்ததிர் - மாபெரும் சக்தி உடையவன்
72) அல் முகத்திம் - முற்படுத்தி வைக்கிறவன்
73) அல் முஅக்கிர் - பிற்படுத்தி வைக்கிறவன்
74) அல் அவ்வல் - முதலானவன்
75) அல் ஆகிர் - இறுதியானவன்
76) அல்ளாஹிர் - பகிரங்கமானவன்
77) அல் பாதின் - அந்தரங்கமானவன்
78) அல் வாலீ - அதிகாரமுள்ளவன்
79) அல் முதாஆலீ - மிக்க உயர்ந்தவன்
80) அல் பர்ரு - உபகாரம் செய்கிறவன்
81) அல் தவ்வாப் - தவபாவை ஏற்கிறவன்
82) அல் முன்தகிமு - பழி வாங்குகிறவன்
83) அல் அஃபுவ்வு - மன்னிக்கிறவன்-
84) அர்ரவூஃப் - இரக்க சிந்தையுள்ளவன்
85) மாலிகுல் முல்க் - அரசாட்சிக்குரியவன்
86) துல்ஜலாலி வல்இக்ராம் - மாண்பும் மரியாதையும் உடையவன்
87) அல் முக்ஸித் - நீதியாளன்
88) அல் ஜாமிஃ - ஒன்று சேர்க்கிறவன்-
89) அல் ஙனிய்யு - தேவையற்றவன்
90) அல் முங்னீ - தேவையறச் செய்கிறவன்
91) அல் மானிஃ - தடுக்கிறவன்
92) அள்ளார்ரு - துன்பமுறச் செய்கிறவன்
93) அந்நாபிஃ - பலன் தருகிறவன்
94) அந்நூர் - ஒளிமயமானவன்
95) அல் ஹாதீ - நேர்வழி காட்டுகிறவன்
96) அல் பதீஃ - புதுமையாய்ப் படைக்கிறவன்
97) அல் பாகீ - நிலையானவன்
98) அல் வாரித் - அனந்தர உரிமை கொள்பவன்
99) அர் ரஷீத் - நேர்வழி காட்டுபவன்
100) அஸ்ஸபூர் - மிக்கப் பொறுமையாளன்


Best Regards
'Jumaana' Syed Ali - www.jsyedali.com

Sunday, September 25, 2011

தமிழில் "கடவுள்" என்றும் ஆங்கிலத்தில் "God" என்றும் அரபியில்.....

தமிழில் "கடவுள்" என்றும் ஆங்கிலத்தில் "God" என்றும் உர்துவில் "குதா" என்றும் கூறும்போது கொள்ளப்படும் பொருளுக்கு சமமானதல்ல அல்லாஹ் என்ற பதம். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. ஆக அல்லாஹ் என்ற பதத்தின் பொருள் அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது பொருள். அல்லாஹ் என்ற பதத்தின் உருவாக்கத்தைப் பற்றி வேறு அபிப்பபிராயங்களும் உண்டு. எதுவாக இருந்தாலும் உண்மையான இறைவனின் அறியப்பட்ட பெயரே அல்லாஹ் என்பதாகும். உண்மையான இறைவன் என்ற நிலையிலேயே திருக்குர்ஆனும் அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.


﴿ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ ﴾

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

﴿ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ ﴾

அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (40:62)

﴿ إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ ﴾

நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:64)

﴿ بَدِيعُ السَّمَاوَاتِ وَالأرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لا إِلَهَ إِلا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ ﴾

﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾

மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள் அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (43:87)

﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾

மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? (29: 61)

﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الأرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْقِلُونَ ﴾

இன்னும், அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில் "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள் (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)

﴿ قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَتَّقُونَ ﴾

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள் "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:86,87)

﴿ قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ ﴾

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23: 88,89)

Saturday, April 23, 2011

நீரின்றி அமையாது உலகு ...

மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400 ஆண்டுகளுக்குமுன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகையில்:
“அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான் ...” (24:45) என்றும்
“... நாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் நீரை வாழ்வின் மூலாதாரமாக்கினோம் ...” (21:30) என்றும் கூறுகிறான்.

Thursday, April 21, 2011

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்

    பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களும் அதற்கப்பாலுள்ள ஒரு காரணத்தைத் தேடுகின்றது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன்மைக்கும் மனிதன் காரண்தைத் தேடுகின்றான். அணுமுதல் நட்சத்திர மண்டலங்கள் வரை உள்ள எல்லா சிறிய பெரிய வஸ்துக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொன்றினதும் காரணத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும்போது அந்தக் காரணத்தின் காரணத்தைத் தேடி சிந்தனை நீளுகின்றது. இது சங்கிலித் தொடர் போன்று நீண்டு செல்வதில்லை. அது காரணங்கள் தேவைப்படாத ஒருவனில் சென்றடைகின்றது. அவன் எல்லாத் தேடுதல்களினதும் இறுதியாக இருக்கின்றான். எல்லா வகையான தேட்டங்களும் விசாரணைகளும் இந்த பரமமான எல்லையில் முடிவடைகின்றன. பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் காரணங்களற்றது என்று நம்மால் கூற இயலாது. சிறிதாகட்டும் பெரிதாகட்டும் எல்லா வஸ்துக்களுமே காரணங்களைத் தேடுகின்றன. ஆக காரணங்கள் அவசியமற்ற பராசக்தி பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். பதார்த்தத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தையே இஸ்லாம் அல்லாஹ் என்றழைக்கின்றது.

Tuesday, March 15, 2011

தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் !

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (அல் குர்ஆன்-62:9)

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல் குர்ஆன்-62:10)

மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச் சிறந்தது ஜுமுஆ நாளாகும்.
[நூல் - முஸ்லிம்]

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Friday, February 18, 2011

நபியவர்கள் ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

நபியவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) ‘ர்கலுக்கு’ எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி (ரஹ்) ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)

Sunday, December 5, 2010

ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?


(மீள்பதிவு)
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)
அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனைப் பலதெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப்பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!
உங்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் இதோ சில ஆலோசனைகள்:
1. துஆ
பாபரி மஸ்ஜிதை அதேஇடத்தில் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை நிறைவேற்ற முஸ்லிம் உம்மத்திற்கு உதவி அருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். இதற்கு எதுவும் செலவாகாது, இதற்காகப் பொதுஅறிக்கைகள் எதுவும் தேவையில்லை. தினந்தோறும் உங்கள் துஆக்களில் பாபரி மஸ்ஜிதை நினைவுபடுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. உண்மைத் தகவல்களை படியுங்கள்; அதனைப் பற்றி எழுதுங்கள்.
பாபரி மஸ்ஜித் சோக நிகழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரியாமலிருந்தால், அதைப் பற்றி வாசித்தறியுங்கள். ஷரீஅத்தில் மஸ்ஜித்களின் அந்தஸ்து பற்றியும், பாபரி மஸ்ஜிதின் நிர்மாணம் முதல் நிர்மூலம் வரையிலான வரலாறு பற்றியும் அறியலாம்; இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (இந்திய முஸ்லிம்களின் சம்மேளனம்) என்ன நிலை எடுத்துள்ளது என்பது பற்றி தெளிவடையலாம். இந்துத்துவ சக்திகள் முதலில் அதனை அடையாளப்படுத்தி, அதன்பின்னர் முழு உலகிற்கும் முன்னிலையிலும் அதனை சுக்கு நூறாக தரைமட்டப்படுத்தியது ஏன் என்பது பற்றி அறிய முயலுங்கள். அது, பாபரி மஸ்ஜித் அதே இடத்தில் மீண்டும் நிர்மாணம் செய்யப்படுவதே மிக முக்கியமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை உங்களுக்கு தரும்.
இந்திய அரசின் பாதுகாப்பின்கீழ், பாபரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும், பாபரி மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சட்டரீதியாகவும், சரித்திரரீதியாகவும் எந்த ஓர் ஆதாரமுமில்லை. மஸ்ஜிதை ஷஹீதாக்கிய கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் தத்தம் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கியக் குற்றவாளிகள் அரசியலில் இன்றும் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் என்பதும், அதே நேரத்தில் இந்த மனிதாபிமானமில்லாத அக்கிரமத்திற்கெதிராக அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு வீதிகளில் குழுமி கண்டனம் தெரிவித்த முஸ்லிம்களுள் ஏறத்தாழ 2000 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றதும் அப்பட்டமான உண்மைகளாகும்.
3. நீங்கள் வாழும் பகுதிகளிலுள்ள மஸ்ஜித்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முஸ்லிம்களில் பலதரப்பட்டவர்கள் ஒரேசமயத்தில் மஸ்ஜிதில் ஒன்று கூடுவது வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குத்தான் என்பதால், குத்பா பிரசங்கத்தைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜித் பற்றி விளக்கிக் கூறலாம்; இயன்ற வழிகளில் பாபரி மஸ்ஜித்துகாக மக்களின் ஆதரவைக் கோரலாம்.
4. ஊடகங்கள் மூலம் உண்மைச் செய்தியை உலகறியச் செய்யுங்கள்:
பாமர மக்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் பக்கச் சார்புள்ள முஸ்லிமல்லாத செய்தி ஊடகங்கள் மூலமாக வரும் உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட செய்திகள்தான். இந்த நிலையில், பாபரி மஸ்ஜிதின் உண்மை நிலையை மக்கள்முன் எடுத்து வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எலக்டிரானிக்/அச்சு ஊடகங்களில் பணியாற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்கும் பாபரி மஸ்ஜித் பற்றிய உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைக் கோரலாம்.
5. உங்கள் ஊர்களில்/நகரங்களில் "பாபரி மஸ்ஜித் புனர் நிர்மாணக் குழுக்களை" நிறுவுங்கள்:
பாபரி மஸ்ஜிதைப்பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்கும் ஹிந்துத்துவ சக்திகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்ட உங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் சட்ட, தார்மீக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இக்குழுக்கள் பயன்படும். கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான கூட்டு நிகழ்ச்சிகள், செய்தி மடல்கள் வாயிலாகச் சமுதாயத்தினருக்கு விழிப்பூட்டுங்கள்.
6. பொது மக்கள் அபிப்ராயத்தை உருவாக்குங்கள்:
மனித உரிமை குழுக்கள், அரசியல் கட்சிகள், திறந்த மனதுள்ள முஸ்லிமல்லாத குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தைப் பற்றிய கருத்தோட்டத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்குவது முஸ்லிம்களின் பொறுப்பாகும். கருத்தொற்றுமை கொண்டவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி வேண்டிப் போராடும் முஸ்லிம்களுக்கு வலுவைக் கொடுக்கும்.
7. ஹிந்துத்வ சக்திகள் மத்தியில் அழைப்புப்பணியும்:
தேசிய அளவில் மிகப்பெரும் சோக நிகழ்ச்சியான பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நீங்கள்தான் பொறுப்பாகும். உங்களின் சதித்திட்டத்தின் காரணமாக நீதிக்குப் புறம்பான செயலை நீங்கள் செய்ததாக இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்குபின் வரும் மறுமை நாளில் இறைவனின், கேள்வியான "எந்த உரிமையையும் அனுமதியையும் கொண்டு இஸ்லாத்தின் அடையாளமாகிய மஸ்ஜிதை இடித்தீர்கள்? எனது அடியார்களைக் கொன்று குவித்தீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். குருட்டுக் குறிக்கோள்களுக்குப் பாடுபடுவதை விடுத்து, எங்களையும் உங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் பக்கம் திரும்புங்கள் என்ற செய்தியை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் நேர்வழிக்காக தினமும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
8. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
முஸ்லிம்கள் உறுதியாக நின்று அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மென்மையான குறிக்கோளற்ற அணுகுமுறையைக் கையாண்டால், அது இந்தியாவில் அமைதியை நிலவச் செய்யும் எனப் பலர் நம்புகின்றனர். அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவது என்னவென்றால் அல்லாஹ்வின் அருளால் எங்களின் ஜிஹாத் உணர்வுதான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதையும், மேலும் ஏனைய மஸ்ஜித்களைத் தாக்கி அழிப்பதையும் முஸ்லிம்களைத் தாக்குவதையும் விட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் நாம் தளர்வு காட்டினோமென்றால், ஹிந்துத்துவ சக்திகள் தங்கள் அநீதிகளையும் அக்கிரமங்களையும் மறுபடியும் கட்டவிழ்த்து விடுவதற்கு உற்சாகமளிப்பதாய் அமைந்து விடும். எனவே எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ்வின்மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்து, அல்குர்ஆன், அல்ஸுன்னாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நாம் உறுதிப்பாட்டுடனும் உத்வேகத்துடனும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நமது கருத்தை நிறுவதற்காக மனப்பூர்வமாகவும், மன உறுதி தளராமலும் உழைப்பது கொண்டு மட்டுமே பாபரி மஸ்ஜிதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யலாம்! இம்மை மறுமை வெற்றியை அடையலாம்!
முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்" (அல்குர்ஆன் 72:18)

நன்றி: இக்ரஹ்

LinkWithin

Related Posts with Thumbnails