|
"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை
பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்.
அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர்
பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான்
- நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)
"மேலும், வானத்திலிருந்து நாம்
திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப்
பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப்
போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle
of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள்
மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த
ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும்,
அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக
ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர்
ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும்
ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும்
படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water
cycle என்று பெயர். |