Wednesday, May 30, 2012

தொட்டால் தொடரும் ! - குறுந்தொடர்-1

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரங்கூன் போன்ற நாடுகளுக்கு "திரை கடலோடி திரவியம் தேடச் சென்றார்கள். அப்படிப் போன பலபேருடைய குடும்பம் "நல்லா" இருந்தது. அவர்கள் "ஜக்காத்" கொடுத்தார்கள். மற்றவர்கள் வாங்கினார்கள். அவர்கள் "ஹஜ்" செய்தார்கள், மற்றவர்கள் அவர்களை "ஹாஜியாரே" என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்., கார் வாங்கினார்கள், பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல், தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள். Monday, May 28, 2012

ஈமான் என்றால் என்ன?' 'இஹ்ஸான் என்றால் என்ன?'

  நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள்.
அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர்.
- ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 50.
Source : http://www.tamililquran.com/

Sunday, May 27, 2012

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் !

 பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

Friday, May 25, 2012

நன்மை ஏவி, தீமை தடுப்பது இரண்டு பாலருக்கும் கடமை,

 'தாவா' என்றால் அழைத்தல் அல்லது பகிர்ந்து கொள்ளுதல் என பொருள்படும். நன்மை ஏவி, தீமை தடுப்பது இரண்டு பாலருக்கும் கடமையாகும்.இது மனித நேயத்தின் அடிபடையில் அமைந்த செயல்.ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய கடமை. மனிதன் தவறு செய்பவன் ஆனால் அந்த தவறுகளும் அதனால் விளையும் குற்றங்களும் நடைபெறுவதனை பார்த்தும் பாராமுகமாக இருந்தால் மனித சமுதாயமே சீர்கெட்டுவிடும். நல்லதை க்குவிப்பதும் கெட்டதை முடிந்தவரை தடுத்து நிறுத்துவதும் நமது கடமை.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

    ”கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:100)
 மனிதன் பிறக்கும்போதே கெட்டவனாக பிறப்பதில்லை . சூழ்நிலையும் வளர்ப்பு முறையும் அவனை தவறான  செயல்களில் ஈடுபட வைத்துவிடுகின்றது. 

(லுக்மான் தன் மகனிடம்..) என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். (அல்குர்ஆன் 31:17)

நாம் மட்டும் நல்லவனாக இருந்தால் போதுமா? நம் சகோதரர்களும் (அனைவரும் நமது சகோதரர்கள்தான்) நல்ல பண்பாளர்களாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நாமும் அவர்களைப்போல் மாறும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். அதற்கு முன் நாம் முந்திக்கொண்டு அனைவரையும் நல்லவற்றின் பக்கம் அழைப்பதே இந்த 'தாவா' அல்து 'தப்லீகின்'  பணியாகும். ஒரு சிலர் தவறாக நினைக்கின்றனர் இஸ்லாம் மார்கத்திற்கு மாற்றும் செயலாகவே இது  இருக்கின்றது என்று.

 (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.(அல் கசாஸ்  28 :56)

  
 மனிதனை நல்வழிப்படுத்துவது அணைத்து மக்களின் கடமை . மது அருந்துவனை அல்லது மாதின் பக்கம் தவறான வழியில் செல்பவனை பாராமுகமாக விட்டுவிட்டால் அவன் நிலை இன்னும் மோசமாகும் அது மட்டுமல்லாமல் அவன் மனித சமுதாயத்திற்கு ஒரு தவறான பாதையை காட்டும் வழிகாட்டியாகி விடுவான். மனிதனை  நேசிக்க வேண்டும் அவனது கெட்ட செயலுக்காக அவனை ஒதுக்கக் கூடாது, அவனையும் நல்வழிப்படுத்த வேண்டும்.. இதுதான் உயர்ந்த சேவை அதன் மறு பெயர் தான் நல்லது பக்கம்  அழைத்தல் அதுவே 'தாவா' அல்லது  தப்லீக் பணி
  

 ரசூலுல்லாஹ்வின் உம்மத் ஆண், பெண் இரு பாலரும் தாவத் பணியில் அர்ப்பணிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தாவத்பணியை அவசியம் உணரவேண்டும். சிலர் குறைவாகவும் இன்னும் சிலர் அதிகமாகவும் தாவத் பணி செய்கின்றனர். தாவத் இல்லாமல் வாழ்க்கை கழியக் கூடாது. வாழ்க்கையின் நோக்கம் தாவத்..நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம் நம்பிக்கையோடு மக்கள் நல் மாற்றத்தை  உருவாக்க நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்
 

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
(அன் -நஹல்    16:125)


Thursday, May 24, 2012

அடிப்படை கோளாறு

அடிப்படை கோளாறு
பெற்றோர்கள், தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்; கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்; மக்களின் மனம் நோகாது, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்; கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

ஆனால், பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள், மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

இதனால், நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம், மானம், ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது.

மேலும் படியுங்கள்  தலைபோகிற விஷயம்...! முதலில் இதைப் படியுங்கள்...!

Source   http://khanbaqavi.blogspot.in/2011/07/blog-post_22.html

விடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி !

அழகிய பெண்களின் படங்களை முகப்பில் சூடிக் கொள்ளாத, சினிமாக் கவர்ச்சி மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாத, சிறு பிள்ளைகளுக்குக் கூட ஒரு நல்ல பரிசாக வாங்கிக் கொடுத்துவிடக் கூடியதோர் பெறுமதியான பத்திரிகையாக நான் விடிவெள்ளியைக் காண்கிறேன். இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியரின் உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகளை மட்டுமே தாங்கி வரக் கூடிய ஊடகங்கள், அன்றும் இன்றும் நம் நாட்டில் மிக மிகக் குறைவாகவே உள்ளன. முஸ்லிம்களுக்கென்றொரு தனியானதொரு ஊடகம் அவசியமாக உள்ளதென்பது எம்மில் பலராலும் உணரப்பட்டுள்ள இவ்வேளையில், விடிவெள்ளியானது இச் சிறுபான்மை இனத்தவருக்காகவே வாராவாரம் தொடர்ந்தும் வெளிவருவது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஒன்றாக அளிக்கிறது.

Wednesday, May 23, 2012

ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர்-1&2

 
  by Dr. Ahmad Baqavi Ph.D.

பார்போற்றும் ஹதீஸ் கலையின் பேரரசர்
அமீருல் முஃமினீன் ஃபில்ஹதீஸ்
இமாம் புகாரி(ரஹ்) ஹி 194-256

அலை அடங்கிய ஆழிய நடுக்கடலை அந்தக் கப்பல் கிழித்துச் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் ஒரு மாணவரும் பயணம் செய்தார். அவரிடம் ஆயிரம் பொற் காசுகள் இருந்தன. கப்பலில் வழிப்போக்கன் ஒருவன் மாணவருக்குப் பயணத் தோழனாகக் கிடைத்தான்.அவனுடைய நடை உடை பாவனைகளைக் கண்டு அவனை நல்லவன் என நம்பிய மாணவர், தம்மிடம் ஆயிரம் பொற்காசுகள் இருப்பதை அவனிடம் வெள்ளை மனத்தோடு கூறினார்.

ஒருநாள், காலை நேரம்…..மாணவரின் சகத் தோழன் விழித்தெழுந்து, கூச்சல் போட்டு அழுது புலம்பினான். அவனைச் சுற்றிப் பிரயாணிகள் கூடிவிட்டனர். கப்பல் பணியாளர்கள் பரிவோடு அவனை விசாரித்த போது அவன் சொன்னான், நான் ஆயிரம் தங்கக்காசுகள் வைத்திருந்தேன்,  அதனைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டார்கள்.

அவனது பேச்சினை உண்மை என நம்பி, பணியாட்களும் கப்பலில் ஒருவரையும் விடாது சோதனை போட்டனர். கப்பல் பரபரப்போடு காணப்பட்டது. நமது மாணவரின் நிலையோ தர்ம சங்கடமாகப் போய்விட்டது. தம் பணத்தை அபகரிப்பதற்கே அந்த வழிப்போக்கன் சு10ழ்ச்சி செய்கிறான் என்பதை உணர்ந்த மாணவர் திடுக்கிட்டார். தம் பணம் என்று எவ்வளவுதான் சொன்னாலும், கப்பற் பணியாட்கள் நம்பப் போவதில்லை என உணர்ந்த மாணவர், ஆயிரம் பொற்காசுகளையும் கடலிலே வீசி எறிந்து விட்டார்.

ஒவ்வொருவராகச் சோதனை போட்டும், யாரிடத்திலும் அந்தப் பணம் அகப்படாதததைக் கண்ட பணியாட்கள் மிகவும் கோபமடைந்தனர். வேண்டுமென்றே பொய் சொல்லித் தங்களை அலைக்கழித்து விட்டான் என அந்த வழிப்போக்கனை கண்டபடி திட்டிப் பலர் முன்னிலையில் அவனைக் கேவலப்படுத்திவிட்டார்கள்.

பயணம் முடிந்து பிரயாணிகளனைவரும் சென்றபின் அந்த வழித் தோழன், மாணவரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டான்,

‘ஆமாம், அந்த ஆயிரம் தங்கக் காசுகளை என்ன செய்தீர்கள்?’

‘அதனைக் கடலில் எறிந்து விட்டேன்!’

‘அவ்வளவு பெருந் தொகையை வீணாக்க உங்கள் மனம் எப்படித் துணிந்தது?’

‘எனது மதிப்பு மிகுந்த வயதினைச் செலவு செய்து நான் சேகரித்துள்ள மாபெரும் புனிதச் செல்வமாம் கல்விக் கருவூலத்தை அந்தச் சில பொற்காசுகளுக்காக அழித்துவிட என்னால் இயலாது’ என்று பதில் அளித்தார் அம் மாணவர்.

யார் அந்த அதிசய மாணவர்?

யார் அந்த அதிசய மாணவர்? திருட்டுப் பட்டத்தைச் சுமக்க விரும்பாமல், தம் சொந்தப் பணம் ஆயிரம் பொற்காசுகளையும் தூக்கியெறிந்த அற்புதமானவர் யார்?

அவர் தாம் பிற்காலத்தில், ‘ஹதீதுக் கலைப் பேரரசர்’ என நபிமொழிக் கலை வல்லார்களால் புகழப்படும் பேறு பெற்ற இமாம் புகாரீ(ரஹ்) ஆவார்.

கி.பி.12-ம் நூற்றாண்டில்.

வானைத் தழுவினாற் போன்ற உயர்ந்த மினாராக்களைக் கொண்ட மஸ்ஜிதுகளும், வேதம் ஓதும் கூடங்களும், நபிமொழி மன்றங்களும் தாம் அன்றைய புகாராவின் புகழுக்கு முழு முதற் காரணமாக விளங்கின.

சோவியத் ரஷ்யாவின் இன்றைய உஸ்பெக்கிஸ்தான் மாகாணத்திலுள்ள புகாரா, அன்று இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால், இஸ்லாமியக் கலைகளும் அங்கே சிறப்புற்று விளங்கின. ‘இஇல்முல் ஹதீஸ்’ என்னும் நபிமொழிக் கலையில் பேரும் புகழும் பெற்ற பல முஹத்திஸ்கள் நிரம்பியிருந்ததால் ஹதீஸ் பயிலும் மாணவர்களுக்கு புகாரா ஒரு மத்தியக் கேந்திரமாகத் திகழ்ந்தது.

பிறப்பு

புகாராவின் பெரும் முஹத்திஸ்களில் ஒருவரும் இமாம் மாலிக்(ரஹ்) ஹம்மாதுப்னு ஜைத், அபூ முஆவியா ஆகியோரின் மாணவரும் அப்துல்லாஹிப்னு முபாரக்(ரலி) அவர்களின் நண்;பருமான இஸ்மாயீல் அவர்களின் அருந்தவச் செல்வராக ஹிஜ்ரீ 194, ஷவ்வால் பிறை 13-ம் நாள் வெள்ளியன்று ஜும்ஆவுக்குப் பின் இமாம் புகாரீ(ரஹ்) பிறந்தனர். இமாமவர்களின் இயற்பெயர் முஹம்மது, அன்புப் பெயர் அபூ- அப்துல்லாஹ்,  ஹதீதுக்கலை உலகில் அவர்கள்’அமீருல்முஹத்திஸீன்’ என்றும் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படு கிறார்கள். பல பெயர்கள் இருப்பினும் சொந்த ஊரான புகாராவைச் சேர்த்து ‘புகாரீ’ என்ற பெயராலேயே இமாமவர்கள் உலகுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளனர்.

இமாமவர்கள் நடுநிலையான உயரமும், கோதுமை நிறமும், மென்மையான தேகவாக்கும் பெற்றிருந்தனர். இமாமவர்கள் தூய வெண்ணிற ஆடையினை மிகவும் விரும்பி அணிவார்கள்.

இமாமவர்கள் இளவயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டனர். பின்னர் இறையன்பும், பக்தி நிறைஉளமும் கொண்ட தம் அன்னையாரின் அரவணைப்பில் நாளொரு ஞானமும், பொழுதொரு அறிவும் பெற்று வளர்ந்தனர். அந்தோ! இவ்விளம்பருவத்திலேயே இமாமவர்களின் இரு விழிகளின் பார்வையும் குன்றிவிட்டது. அன்புக் கணவர் மறைந்த துயரத்தின் ஈரம் உலருவதற்கு முன் மகனின் பார்வையும் குன்றி விட்டதால், அன்னையார் ஆறாத் துயரடைந்தனர். தம் மகனுக்குக் கண் பார்வையை மீண்டும் தருமாறு இறைவனை இரவும் பகலும் இறைஞ்சிய வண்ணமிருந்தனர்.

ஒரு நாள் இரவில் பிரார்தனை புரிந்து கொண்டிருந்த ஆன்னையாரை நித்திரை ஆட்கொண்டது. தூக்கத்தில் கனவு ஒன்று காணுகின்றனர். கனவில் நபி இப்ராஹீம் கலீலுல்லாஹ் தோன்றி, ‘உம் புதல்வருக்கு அல்லாஹ் கண்ணொளி தந்துவிட்டான்’ எனக் கூறி மறைந்தனர். காலை புலரும் போது கண் விழித்த அன்னையார் தம் திருமகனின் இருவிழி களும் உண்மையிலேயே ஒளிபெற்றுத் திகழ்ந்ததைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினர். இறையருளைப் பெற்ற இமாம் அவர்களின் பார்வை அபார சக்தி வாய்ந்ததாய் ஒளிர்ந்தது. பின் நாளில், மங்கிய இரவுகளில் நிலா வெளிச்சத்திலேயே இரண்டு பெரிய நூல் களை எழுதி முடிக்கும் ஆற்றலை அக்கண்கள் பெற்றிருந்தன. இத்தகவலை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தமதுஃபத்ஹுல் முபீன் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இளமை

இமாமவர்களுக்குப் பத்து வயதாகும் பொழுதே குர்ஆனை மனனம் செய்துஅடிப்படைக் கல்வியையும் முடித்துக் கொண்டனர். அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்தில் புனிதப் போர்களில் (ஜிஹாதில்) கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவே, உடலை வலுப்படுத்த ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்தனர். அம்பினைக் குறிப்பார்த்து, இலக்கு நோக்கி எய்வதில் திறமையும் பெற்றனர். அடிப்படைக் கல்வியை முடித்துக் கொண்ட இமாமவர்களுக்கு அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆழ்ந்த விருப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த ஹதீஸ் மன்றங்களில் சேர்ந்து ஹதீஸ் கற்றுணர்ந்தனர், புகாராவில் நிரம்பிருந்த ஹதீதுக் கருவூலம் முழுவதையும் மிக விரைவிலேயே கற்றுத் தேர்ந்தனர். அப்துல்லாஹிப்னு முபாரக், இமாம் வகீஃ ஆகியோரின் நூல்களையும் இதே காலத்திலேயே மனனம் செய்து முடித்து விட்டனர்.

அறிவாற்றல்

புகாராவிலிருந்து நபிமொழி மன்றங்களில் மிகப் பெரிதாகத் திகழ்ந்தது இமாம் தாகிலீ(ரஹ்) அவர்களின் மன்றமாகும். இந்த மன்றத்தில் இமாமவர்கள் சேர்ந்து ஒரு சில நாட்களே சென்றிருந்தன. ஒரு நாள்.. ஆசிரியப் பெருந்தகை தாகிலீ(ரஹ்) அவர்கள் ஹதீஸ் சொல்லத் துவங்கி, ஒரு ஹதீதை அறிவித்தவர்களைப் பற்றிக் கூறினார். அப்போது, ‘அபூஜுபைர் என்பவர் இப்ராஹீமிடமிருந்து அறிவிக்கிறார்’ எனக் குறிப்பிட்டார்கள். இதுவரை அமைதியோடு வீற்றிருந்த இமாமவர்கள் குறுக்கிட்டு, ‘ஆசிரியர் அவர்களே! ஸனது (ராவீகளின் பெயர் வரிசை) அவ்வாறன்று, இப்ராஹீமிடமிருந்து அபூஜுபைர் என்பவர் அறிவிக்கவில்லை’ என்றார்கள்.

இடை மறித்துப் பேசியவர் சிறிய வயதுடைய புது மாணவர் என்பதை அறிந்து கொண்டு, ‘பேசாமலிரு’ என்று ஆசிரியர் அதட்ட, இமாமவர்கள் விடாப்பிடியாக, ‘தங்களின் சமூகத்தில் மூல நூல் இருப்பின், அதைத் தாங்கள் சற்றுப் புரட்டிப் பார்க்கலாமே!’ என்று கூறினார். புதிய மாணராக,  சிறியவராக இருந்தாலும், பேச்சு அறிவுத் தெளிவோடு ஒலிப்பதை உணர்ந்த ஆசிரியர், மூல நூலை எடுத்து, அந்த ஹதீதின் ஸனதைப் பார்த்த போது சிறுவர் கூறியது உண்மையாக இருக்கக் கண்டு வியந்தார். ஆசிரியர், ‘சிறுவரே! நான் சொன்ன ஸனது சரியில்லை  என்றால், சரியான ஸனது எப்படி இருக்கும்?’ என வினவினார்கள். இமாமவர்கள், ‘இப்ராஹீமிடமிருந்து அறிவித்தவர் ஜுபைர் இப்னு அதீயாகும். அபூஜுபைர் அல்லர்’ என்று சரியான ஸனதைக் கூறினார்.

இந்தச் சமயத்தில் இமாமவர்களின் வயது என்ன? இச்சம்பவத்தைப் பற்றி வினவியபோது, ‘எனக்கு அப்போது பத்து அல்லது பதினொன்று இருக்கும்’ என இமாமவர்களே விடை பகர்ந்துள்ளனர்.

கல்வி

புகாராவில் அல்லாமா பேகந்தீ(ரஹ்) அவர்களிடமும் இமாமவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர். ஒருமுறை அல்லாமா பேகந்தீ(ரஹ்) அவர்களை, அறிஞர் சலீமுப்னு முஜாஹித் சந்திக்க வந்திருந்தனர். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்த போது அல்லாமா பேகந்தீ(ரஹ்), ‘சற்று நேரத்திற்குமுன் நீங்கள் வந்திருந்தால் எழுபதாயிரம் ஹதீதுகள் மனனம் செய்திருக்கும் ஒரு சிறுவரைப் பார்த்திருக்கலாமே!’ என்றனர்.

இச்சம்பவத் தொடரை அறிஞர் சலீம் அவர்கள் இதோ இவ்வாறு விளக்குகிறார்கள். ‘இவ்வாறு ஒரு சிறுவனைப்பற்றி அல்லாமா அவர்கள் கூறக் கேட்டதும், நான் அசந்து விட்டேன். நான் அங்கிருந்து புறப்பட்டு அச்சிறுவரைச் சந்தித்தபோது, ‘என்னஉங்களுக்கு எழுபதாயிரம் ஹதீதுகள் மனனமிருப்பதாகச் சொல்கிறார்களே!’ என நான் வினவினேன். உடனே சிறுவர், ‘ஆமாம், அத்துடன் ஹதீதுகளை அறிவித்திருக்கும் ஒவ்வொரு ராவீயின் வரலாறும் தெரியும். ஸனதின் தொடரில் எந்த இடத்தில் யாரைப்பற்றி நீங்கள் வினவினாலும், அவரைப் பற்றி அவரது ஊர் பெயரோடு அவரது பிறந்த நாளையும், இறந்த நாளையும் என்னால் சொல்ல முடியும்’ என்று கூறினார்.

இவ்விளம் வயதில் இமாமவர்களிடம் இமாமின் ஆசிரியர் அல்லாமா பேகந்தீ (ரஹ்) அவர்கள் தாங்கள் எழுதிய ஒரு நூலைக் கொடுத்து, ‘இந்த நூலை நீங்கள் ஒரு முறை படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்தித் தர வேண்டும்.’ எனக் கேட்டுக் கொண்டனர். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் மிக வியப்புற்று, ‘யார் இந்தப் பையன்? தாங்கள் இன்றைய சமய அறிஞர்களின் தலைவராக இருந்து கொண்டு, இச்சிறுவனிடம் போய் ‘திருத்திக் கொடு’ என்று கூறுகின்றீர்களே’ என்று கேட்டார். இதற்கு அமைதியாக, ‘இந்தச் சிறுவரைவிட உயர்ந்தவரோ இவருக்கு சமமானவரோ இன்றைக்கு எவருமில்லை’ என அல்லாமா பேகந்தீ(ரஹ்) பதிலளித்தனர்.(நூல்: கஸ்தலானியின் முன்னுரை)

புகாராவில் வாழந்த ஹதீது வல்லுநரிடம் கற்றுத் தேறும் போது இமாம் அவர்களுக்கு வயது 16. அதன் பின்னர் ஹஜ்ஜு செய்வதற்காக அன்னையரோடும், அருமை சகோதரர் அகமதோடும் மக்கா சென்றனர். ஹஜ்ஜு முடிந்து அன்னையும் சகோதரரும் ஊர் திரும்பிட இமாம் புகாரி மட்டும் மாநபி(ஸல்); மணpமொழிகளைக் கற்றுணர மக்காவிலேயே தங்கி விட்டனர். அன்றைய காலத்தில் தாபியீன்களும், தபஉத் தாபீயீன்களும், விரிந்து பரந்திருந்த இஸ்லாமிய ஆட்சி நடத்த பல்வேறு பகுதிகளில் போய் தங்கியிருந்தாலும், வஹீ (வேத வெளிப்பாடு)ம் அருளப்பட்ட புண்ணிய பூமி என்ற முறையில் மக்காவும். மதீனாவும் ஹதீஸைப் பொறுத்தவரை தனிச் சிறப்பை பெற்று இருந்தன. நம் இமாம் அவர்கள் மக்காவிலும். மதீனாவிலும் மிகப் பிரபலமான முகத்திஸ்களிடம் ஆறு ஆண்டுகள் ஹதீஸ் கற்றுக் கொண்டனர். மதீனாவில் மாணவராக இருக்கும்போதுதான் ‘தாரிக்குல் கபீர் - மாபெரும் வரலாறு’ எனும் நூலை வெண்ணிலாவின் குளிர் ஒளியில் எழுதி முடித்தனர். பின்னர் மதீனாவை விட்டு பஸரா சென்று, அங்கே பத்து ஆசிரியர்களிடம் ஹதீஸ் கலை பயின்றார். பின்னர் கூஃபாவிலும் பாடம் கேட்டுக் கொண்டார்.

கல்வித்திருநகர் பக்தாத் மாநகரில்
பஸ்ராவையும் கூஃபாவையும் விட்டு நீங்கிய இமாம் அவர்கள் பல்கலைகளின் உறைவிடமாம், பண்பாளர் இருப்பிடமாம் பாக்தாத் மாநகர் சென்றனர். அங்கே நான்காவது மத்ஹபின் சிறப்பு மிக்க தலைவர் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களிடமும், முஹம்மது இப்னு சாயிக், முஹம்மது இப்னு ஈசா சபாக், சுரைஜ் இப்னு நுஃமான், போன்ற மதிப்பிற்குரிய முஹத்திஸ்களிடமும் பாடம் கற்றுக் கொண்டனர். அதன் பின் சிரியா (ஷாம்), எகிப்து (மிஸ்ர்), ஜஸீரா (பஹ்ரைன்), குராசான், மரு, பல்ஃக், ஹிராத், நைஷாப்பூர், ரிஆ முதலிய இடங்களுக்கும் சென்று கல்வி தேடினார்கள். நைஷாப்பூரில் இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹ்வைஹி (ரஹ்) இடம் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.

தொடரும்….

Source : http://albaqavi.com/home/?p=255

ஹதீஸ்கலையின் முடிசூடா மன்னர்-2

 by Dr. Ahmad Baqavi Ph.D.

அபார நினைவாற்றல்

இவர்கள் அபார நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் தாம் பயிலும் எந்த ஹதீஸையும் எழுதிக் கொள்வதில்லை. இவர்கள் இவ்வாறு எழுதிக் கொள்ளாதததைப்பார்த்த சகமாணவர்கள் இவர்களை ஏளனமாகப்பார்த்து கேலிசெய்தனர்.ஒருநாள் அவர்கள் எழுதிவைத்திருந்த ஹாதீஸ்கள் அனைத்தையும் கொணருமாறு கூறினர். அவர்கள் கொணர்ந்த பதினையாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை இவர்கள் மளமள வென ஒப்புவித்ததைக்கண்டதும் அவர்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை.
அவர்களை ஏளனம் செய்தவர்களெல்லாம் தாம் எழுதி வைத்திருந்த வற்றிலிருந்த தவறுகளைத் திருத்திக் கொண்டார்கள்.நான் என் வாழ்நாளை விணாக்கிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அதற்காகத்தான் இவற்றை ஒப்புவித்தேன் என அடக்கத்தோடு கூறினார்கள்.
பக்தாதில் சோதனை
இவர்கள் ஒருமுறை பக்தாது வந்திருந்த வேளை அங்குள்ள அறிஞர்கள் இவர்களின் நினைவாற்றலை சோதிக்க வீரும்பினர். தம் மாணவர்களில் பத்துபேரை தயார் செய்தனர்.அவர்கள் ஒவ்வொருவரும் இமாம் அவர்களிடம் பத்து பத்து ஹதீஸ்களை அவற்றைக் கூறியவர்களின் வரிசையையும் அவர்களின் வரலாற்றையும் மாற்றி மாற்றிக் கூற வேண்டும் என்பது அவர்களின் ஏற்பாடாகும்.இதற்கென்று ஒருநாள் தீர்மானிக்கப்பட்டது. அந்த நாள் அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குழுமலயாயினர். அவர்களில் மார்க்கத்தில் தேர்ந்த உலமாக்களும் ஹதீஸ்கலையில் வல்ல முஹத்திதீன்களும் பலர் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் நடுவில் இமாமவர்கள் அமாந்திருந்தார்கள்.

ஒருவர் எழுந்தார்.ஒரு ஹதீஸைக் கூறினார்.அதனைத் தெரிவித்தவர்களின் வரிவையையும்.வரலாற்றையும் மாற்றிக் குழப்பினார்.இப்படி அவர் பத்து ஹதீஸகளையும் சொன்ன பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்திக் கூறும்படி இமாமவாகளைப் பார்த்துக் கேட்டார்.இமாமவர்கள் ‘நான்அறியேன்’ என்றார்கள்.அடுத்தவர் எழுந்தார். முதலாமவர் கூறியவாறே பத்து ஹதீஸ்களையும் அறிவிப்பாளர் வரிசையையும் வரலாறுகளையும் குழப்பிக்தாற்றுவிட்டார்கள். இவர்களால் பதில் சொல்ல முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். நிசப்தம் நிலவிய அந்த வேளையில் இமாமவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு மெதுவாக எழுந்து நின்று தமது அமுத வாயைத் திறந்தார்கள்.

முதலாமவர் கூறிய ஹதீஸைக் கூறினார்கள்.அதனை வெளிப்படுத்தியவர் வரிசையையும் வரலாற்றையும் அவர் குழப்பிக் கூறியவாறே வரிசை மாறாமலே அவர்களும் கூறினார்கள்.பின்னர் அதன் சரியான வரிசையையும் வரலாற்றையும் தெரிவித்தார்கள். அதன்பின் முதலாமவர் கூறிய இரண்டாவது ஹதீஸை எடுத்துக் கொண்டார்கள். அதையும் முன்போலவே அவர் குழப்பிச் சொன்னதையும் அதன் சரியான வரிசையையும் கூறினார்கள்.

இவ்வாறே பத்து ஹதீஸகளையும் கூறிமுடித்தார்கள். இதைப்போலவே ஒவ்வொருவரும் குழப்பிக் கூறிய பத்து ஹதீஸ்களையும் அவற்றின் சரியான வரிசையையும் வரலாறுகளையும் அமைதியாக அதே நேரம் மிகவும் தெளிவாக அழுத்தமாகக் கூறிமுடித்தார்கள்.இப்படி பத்தாமவர் கூறியதுடன் சேர்த்து நூறு ஹதீஸ்களையும் நூல் பிசகாமல் சொல்லி முடித்ததைக் கேட்ட மக்களும் உலமாக்களும் அசந்து போய்விட்டனர். உண்மையிலேயே இமாமவர்கள் அசாதாரணமான அற்புத நினைவாற்றலைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் எது வேண்டும்? அவர்களில் ஒருவர் கூறினார்:- ‘ஒரு ஹதீஸின் வரிசை குழம்பிக் கூறப்பட்டால் அதன் சரியான வரிசையை வேண்டுமானால் சொல்லிவிடலாம்.ஆனால் வேண்டுமென்றே குழப்பிக் கூறப்பட்ட வரிசையை ஒரு முறை கூறக்கேட்டதுமே நினைவு வைத்திருந்து அதனையும் அப்படியே ஒப்புவிப்பதற்கு அசாத்தியத் திறமையும் அபார ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும் என்று.’

சமர்கந்தில் சோதனை
இவ்வாறு சமர்கந்திலும் ஒரு சோதனை நடைபெற்றது. அங்குள்ள நானூறுக்கும் அதிகமான ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஒன்று கூடி ஒரு சோதனையைச் செய்தார்கள்.சிரியாவில் கிடைத்த ஹதீஸ்களை ஈராக்கிலும் ஈராக்கில் கிடைத்த ஆதாரங்களை சிரியாவிலும் கிடைத்ததாக மாற்றி மாற்றிக் கூறினார்கள்.ஆனால் அவர்களால் ஒருமுறைகூட இமாம் அவர்களை ஏமாற்ற இயலவில்லை. இமாமவர்கள் மாற்றிக் கூறப்பட்டவற்றைச் சொல்லி சரியானவற்றைத் தெரிவித்தார்கள்.

ஹதீதைத் திரட்டும் பணி மிகப் புனிதம் வாய்ந்ததாகும். இப்பணியில் ஸஹாபாப் பெருமக்களும் தாபிஈன்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரே ஒரு ஹதீதைக் கேட்பதற்காக, ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் பயணம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்புனிதப் பயணத்தைப்பற்றி ஞானக் கருவூலம் இப்ராஹீம் இப்னு அத்ஹம், ‘இவை போன்ற பயணங்களின் பரக்கத்தால் அல்லாஹ்தஆலா, இச்சமுதாயத்திற்கு வரும் கேடுகளை அகற்றிவிடுகிறான்.’ எனப் போற்றியிருக்கிறார்கள்.

 இன்றைக்கிருப்பதைப் போல பயண வசதிகள் அறவே இல்லாத அக்காலத்தில், பயணத் துன்பங்கள் எத்தனை ஏற்படினும், அவற்றைத் துளிக்கூடப் பொருட் படுத்தாமல் இமாமவர்கள் சளைக்காது பயணம் செய்தார்கள். அன்றைய இஸ்லாமிய ஆட்சி பரவியிருந்த பல பகுதி களுக்கும், ஏன , ஏறக்குறைய எல்லா இடங்களுக்குமே இமாமவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் செய்த சுற்றுலா இஸ்லாத்தின் வெற்றி உலாவாகவே அமைந்து விட்டது.

பற்பல இடங்களில் பல ஆசிரியர்களிடம் திரட்டிய ஹதீதுகள் அனைத்தையும் உடனுக்குடன் மனனம் செய்துவிடுவார்கள். ‘நான் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களிடம் பாடம் கேட்டிருக்கிறேன், எந்த அளவு ஹதீதுகள் தெரியுமோ, அந்த அளவு ஸனதும் எனக்கு மனப்பாடமாகவே உள்ளது’ என இமாமவர்களே கூறியுள்ளார்கள்.

விளை நிலத்தில் களை படர்ந்தாற்போன்று, அண்ணலார் கூறாத சில மொழிகளும் ஹதீதுத் தொகுப்பில் வரும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, ஹதீதுகளுக்குக் களை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.. உண்மையான ஹதீதுகளைத் திரட்டுவோருக்குத் தனித் திறமைகள் தேவைப்பட்டன. ஹதீதை ரிவாயத்ததுச் செய்யும் ராவீ நல்லவரா? தீயவரா? அவரது பெயர், ஊர் போன்ற சரியான வரலாறுகளையும் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இத்தகு ஆற்றல் உள்ளவரால் தான் இந்த ஹதீது (ஸஹீஹ்)சரியானது, (ளயீஃப்) சரியில்லாதது என்று பிரித்து அறிய முடியும். இந்தத் துறையில் தனித் திறமை பெற்றிருந்த முஹத்திதுகள், இமாம்களின் வரிசையில் நம் இமாம் அவர்களே முன்னிலையில் இருந்தார்கள்.

இமாமவர்களுக்கு அபரிமிதமான நினைவாற்றல் இருந்தது. இதனால் இமாமவர்கள் அமர்ந்திருக்கும் மன்றங்களில் பாடம் சொல்லும் ஆசிரியர் சற்று அச்சத்துடனேயே பாடம் சொல்லுவார். கல்வியை முடித்துக் கொண்ட இமாம் அவர்கள் எங்குச் சென்றாலும். அவர்களின் கல்வி தரத்தை அறிவதற்காக அங்கிருந்த அறிஞர்களால் பற்பல முறைகளில் சோதிக்கப்பட்டனர். இந்த அடிப்படையில் பாக்தாதில் இமாமவர்கள் சோதிக்கப்பட்ட அற்புத நிகழ்ச்சி, வரலாற்றுப் புகழ் பெற்ற ஒன்றாகும். இமாமவர்களுக்குத் தெரியாத ஒரு ஹதீதை நாம் சொல்லிவிட வேண்டும் என்று துடித்து, தாம் மேற்கொண்டிருந்த பயணத்தை நிறுத்திவிட்டு, நம் இமாமுடன் சென்ற இமாம் ஃபஜ்லக் ராஜி(ரஹ்) அவர்களால் இமாமவர்களுக்குத் தெரியாத எந்த ஹதீதையும் சொல்ல முடியாமல் போய்த் தமது தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

யூசுஃப் இப்னு மூஸா மரூஜி அறிவிக்கிறார்,

பஸ்ரா நகரின் ஜாமிஆ மஸ்ஜிதில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது, ‘இமாம் புகாரீ அவர்கள் பஸ்ராவுக்கு வந்து விட்டார்கள்.’ என்று அறிவிப்புச் செய்யப்பட்டது. இமாமவர்களை வரவேற்பதற்குப் புறப்பட்ட ஜனத்தினரில் நானும் சேர்ந்து கொண்டேன். இச்சமயம் இமாமவர்கள் கருநிறத் தாடியுடைய வாலிபராக இருந்தார். இமாமவர்கள் வந்து மஸ்ஜிதில் தொழுது முடித்ததும், மக்கள் தங்கள் வீட்டிற்கு இமாமவர்களை அழைத்துச் சென்றனர். மறு நாள் முஹத்திதுகள், ஹதீதுகளை மனனம் செய்வேர் முதலியோர் சூழ்ந்திருக்க, இமாமவர்கள் மேடையில் அமர்ந்தார்கள். பின் கூறினார்கள்: ‘பஸ்ராவாசிகளே! நான் பஸ்ராவாசிகள் ரிவாயத் செய்த ஹதீதுகளாகவே இப்போது சொல்லப் போகிறேன். ஆனால் அந்த ஹதீதுகள் (இப்போது) உங்களிடம் இல்லை.’ இதே முறையில் அங்கிருந்த எல்லா மன்றங்களிலும் ஹதீதுகளை எடுத்துச் சொன்னார்கள்.


வரலாறுகள்
இமாமவர்களுக்குப் பல்லாயிரக் கணக்கானோரின் வரலாறுகள் தெரியும். பல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்கள். அவர்களது வரலாற்று நூல் மூலம் முஹத்திதுகள் பலர் பயனடைந்தனர். ஒருமுறை உதுமானிப்னு மர்வானின் ஜனாஸாவில் கலந்து கொள்ள வந்தார்கள். முஹம்மது இப்னு யஹ்யா துஹலீ அவர்கள் இமாமவர் களிடம் ஒரு சில ராவீகளின் பெயரையும் ஒரு சில ஹதீதுகளையும் பற்றிக் கேட்டார்கள். அந்த விபரத்தை ஒரு மனிதன் எளிதில் ஓதும் ‘குல்ஹுவல்லாஹ்’ சூராவைச் சொல்வதுபோல் கடகடவெனக் கூறினார்கள்.

இமாமவர்கள் திரட்டிய ஹதீஸ்கள்

இமாமவர்கள் திரட்டிய  மொத்த ஹதீஸ்கள் ஆறு லட்சம் ஆகும். இவற்றிலிருந்து தமது விதிகளின் படி தரம் திரித்து தேர்ந்தெடுத்தவை 7275 ஹீஸகளாகும்.இருமுறை கூறப்பட்டவற்றை ஒரே ஹதீஸாகக் கொண்டால் அவற்றில் இருப்பவை 4000 ஹதீஸ்கள் என்று இமாம் நவவீ (ரஹ்) கூறுகிறார்கள். இந்த நூலை எழுதி முடிக்க இவர்களுக்கு பதினாறு ஆண்டுகளாயின.இரவில் இருபது தடவைக்கு மேல் விழித்தெழுந்து விளக்கேற்றி இதில் விடப்பட்டுள்ளவற்றை சரிபார்ப்பார்கள்.

கஃபாவில் வைத்து இதனை எழுதத் துவங்கிய இவர்கள் பின்னர் நாடு நகரங்களெல்லாம் சுற்றித்திரிந்து தீஸகளைச் சேகரித்து, பின்னர் கஃபாவில் வைத்தே இதனை முடித்து, மதீனாவில் மஸ்ஜிதுந்நபவீயில் ரவ்ளாவுக்கம் மிம்பருக்கும் நடுவில் வைத்து மூன்று முறைகள் சரிபார்த்தனர்.இதில் வரும் ஒவ்வொரு ஹதீதுக்காக வேண்டியும் ஒளுச் செய்யாமலும் இரு ரகஅத்கள் தொழாமலும் இருக்கவில்ல என இவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுன் நின்று தாம் விசிறியால் வீசிக்கொண்டிருப்பதாகக் கனவு கண்டதாகவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் கலந்துவிட்ட பொய்களைத் தாம் பறக்கடிக்கப் போவதை இது உணர்த்துவதாக கனவு விளக்க வல்லுனர்கள் இதற்கு விளக்கம் கூறியதாகவும் அதுவே தாம் இந்நூலைத் தொகுத்தெழுதக் காரணமாக அமைந்ததாக இருந்ததென்றும் இவர்கள் கூறியுள்ளனர்.

உலகிலேயே அதிகமாக மதிக்கப்படும் பெருநூல்

இன்று “ஸஹீஹுல் புகாரி” குர்ஆனுக்கு அடுத்தபடியாக கெளரவிக்கப்படும் பெருநூலாக விளங்ககிறது. இவர்களுக்கு “அமீருல் முஃமினீன் ஃபில்ஹதீஸ்” ” ஹதீஸ் கலையின் முடிசூடா மன்னர்” என்ற சிறப்புப் பெயரையும் இந்நூலே ஈட்டித்தந்தது.

மாணவர்கள்

இவர்களிடம்  “ஸஹீஹுல் புகாரி” யைத் தொண்ணூறாயிரம் பேர் பாடம் கேட்டுள்ளனர்.இவர்களின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்,  நம்பத் தகுந்த ஆறு ஹதீஸ் நூல்களில் ஸஹீஹ் முஸ்லிமை எழுதிய  இமாம் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் அவர்களும், திர்மிதியை எழுதிய அபூ ஈஸா முஹம்மது அவர்களும், சுனனு நஸயீயை எழுதிய இமாம் அபூ அப்துருரஹ்மான் நஸயீ அவர்களும் ஆவார்கள்.

புகழ்மிக்க இந்த மாணவர்களின் வரிசையில் இமாம் இப்னு குஸைமா, இமாம் முஹம்மது பின் நஸ்ரு, இமாம் மசூரி ஸாலிஹ் பின் முஹம்மது அகியோரும் உள்ளனர். இவர்களெல்லாம் எளிதில் இணைகாண முடியாத அறிஞர்கள்ஆவர்.இவர்களைத்தவிர்த்து எத்தனையோ மார்க்க மேதைகள் இமாம் அவர்களின் மாணவர் அவதற்காக அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள்.

ஹதீஸில் அதிகக் கவனம்

இமாமவர்கள் தாம் மிகவும் பேணுதலாக இருந்ததோடு, ஹதீதுகளை எழுதுவதிலும் பேணுதலான முறையைக் கடைப்பிடித்தார்கள். சந்தேகமான வழியில் கூறப்பட்ட ஹதீதுகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு மனிதர் சில ஹதீதுகளைப்பற்றி இமாமவர் களிடம் சந்தேகத்தோடு பேசினார். இமாமவர்கள், ‘நீங்கள் என்னிடம் சந்தேக வழியில் வந்த ஹதீதுகள் இருக்கும் என ஐயப்படுகிறீர்களா? ஒருவரிடம் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் தான் அவரிடமிருந்த பத்தாயிரம் ஹதீதுகளை விட்டுவிட்டு வந்தேன். இதே போன்று இன்னொரு முஹத்திஸிடம் சிறிது சந்தேகம் ஏற்பட்டதால், அவரிட மிருந்த எல்லா ஹதீதுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் வந்து விட்டேன்.’ என்று பதிலளித்தார்கள்.

துன்பம் எதையும் ஏற்றுக் கொள்ளும் எஃகு இதயம் படைத்தவர்களாகவும், பொறுமையை அணியாய்ப் பூண்டவர்களாகவும் இமாமவர்கள் திகழ்ந்தார்கள். மாணவப் பருவத்தில் துன்பத்தை முறுவலோடு ஏற்றுப் பொறுமை செய்து கொண்டார்கள். ஆதமிப்;னு அயாஸ் அவர்களிடம் ஹதீஸ் கேட்கப் போயிருந்தபோது பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. உணவுக்குப் பணமின்றி மூன்று நாட்கள் குலைகளையும், புல்லையும் உட்கொண்டனர். மூன்று நாட்களுக்குப் பின் ஒருவர் ஒரு பணப்பையை இமாம் அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்.

இதே போல் பஸ்ராவில் மற்ற மாணவர்களோடு சேர்ந்து இமாமவர்கள் ஹதீதுகளை எழுதிக் கொண்டிருந்தனர். இடையில் பல நாட்கள் பாடத்திற்கு வரவில்லை. தேடிப் பார்த்து விசாரித்தபோது, இமாமவர்களின் ஆடை இற்றுக் கிழிந்து விட்டதும், வேறு ஆடை வாங்க வறுமை இடந்தரவில்லை என்றும் தெரியவந்தது. மற்ற மாணவர்கள் தங்களுக்குள் வசு10ல் செய்து துணி வாங்கிக் கொடுத்த பின்னர்தான் பாடத்தில் கலந்து கொள்ள முடிந்தது.

வறுமையிலும் செம்மை

இமாமவர்கள் தன்னலமற்ற சாமானிய வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். பல நாட்களை உணவும் நீருமின்றியே கழித்துள்ளனர். இன்னும் சில சமயங்களில் இரண்டு மூன்று பாதாம் பருப்புக்களை மட்டும் போதுமாக்கிக் கொள்வார்கள். ஆனால், ஏழை எளிய மாணவர்களுக்கும், முஹத்திதுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ஐநூறு திர்ஹம் செலவு செய்தனர். அண்ணல் நபிகளாரின் சுன்னத்தைப் பின்பற்றி, அந்த அழகிய முன்மாதிரியை ஒட்டியே தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த இமாமவர்கள் கூலிக்காரர்களோடு தாமும் சேர்ந்து உழைத்தும் இருக்கிறார்கள்.

இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் அம்பெய்வதில் திறமை பெற்றிருந்தனர். ஒரு முறை ஊருக்கு வெளியில் ஒரு பாலத்தைக் குறிவைத்து அம்பு விட்டார்கள். அது பாலத்தையே சேதப்படுத்தி விட்டது. அபூஜஃபர் என்பவரிடம் ‘பாலச் சொந்தக்காரரிடம் சென்று, நான் இந்தப் பாலத்தைச் சரி செய்து கொடுத்துவிடுகிறேன். அல்லது, சேதத்திற்குப் பணம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார். பாலத்திற்கு உரிமையாளரான மாலிக் ஹுமைதீ இமாமின் மீது பற்றும் பாசமும் வைத்திருந்ததால், ‘இமாமுக்கு என் சலாம் சொல்லுங்கள், என் சொத்து முழுதுமே இமாமுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று கூறினார். அன்றிரவு இமாமவர்கள் ஐநூறு ஹதீதுகள் சொல்லி, முந்நூறு திர்ஹம் தர்மம் செய்தார்கள்.

ரமலான் மாதம் வந்துவிட்டால், தொழுகையில் ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள். பின்னர் நடுநிசி (சஹர்);வரை ஓதிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு ஒரு குர்ஆன் முடிப்பார்கள். இரவும் பகலும் திருமறையை ஓதிக்கொண்டே இருப்பார்கள். ‘குர்ஆனை ஓதி முடிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு துஆ ஒப்புக் கொள்ளப்படுகிறது’ என்றும் கூறுவார்கள்.

இமாமின் புகழ்

மாணவப் பருவத்தில் இமாமவர்களைப் பார்த்த சுலைமான் இப்னு ஹர்ப் அவர்கள், ‘இந்தச் சிறுவன் எல்லையில்லாப் புகழ் பெறுவான்’ என்று சொன்ன வார்த்தைகள் பிற்காலத்தில் எழுத்துக்கு எழுத்து உண்மையாயின. இவர்களின் புகழ் இஸ்லாமிய நாடெங்கும் பரவியது. ஒரு நகருக்கு இமாமவர்கள் வருகிறார்கள் என்றால், அந்த நகரமே திரண்டு சென்று அவர்களை எதிர் கொண்டு வரவேற்கும்.

‘நைஷாப்பூருக்கு இமாமவர்கள் வந்தபோது அந்நகர மக்கள் மூன்று இடங்களில் பிரிந்து நின்று வரவேற்பளித்தார்கள். நான் எனது வாழ்நாளில் எந்த அறிஞருக்கும், அல்லது ஆட்சியாளருக்கும் இதுபோனற வரவேற்பைக் கண்டதில்லை’ என்று மற்றெரு முஹத்திதான இமாம் முஸ்லிம்(ரஹ்) கூறுகிறார்கள்.

சென்ற இடமெல்லாம் சிறப்பினை எய்திய இமாமவர்களைப் பலர் பலவிதமாகப் பாராட்டி இருக்கின்றனர். ஒரு சிலர் இமாமவர்களை ‘சய்யிதுல்ஃபுகஹா’ – ‘மத அறிஞர்களின் தலைவர்’ என்று வாழ்த்தினர். ‘நான் அவர்களுடைய மாணவன்’ எனக் கூறிக் கொள்வதில் வேறு சிலர் பெருமையடைந்தார்கள்.

புகாராவின் ஆட்சியாளர் காலிதுப்னு அஹ்மது இமாமவர்களைத் தம் வீட்டிற்கு வந்து தம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர அழைத்தார்கள். ‘கல்வியைத் தேடி மனிதன் செல்லவேண்டும். அவனைத் தேடிக் கல்வி செல்லாது’ என்று இமாமவர்கள் மறுத்து விட்டார்கள். ‘மற்ற குழந்தைகளைச் சேர்க்காமல், தம் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாடம் நடத்த வேண்டும் என்று மறுபடியும் கேட்டுக் கொண்டார்கள். அதையும் இமாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருவருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. புகாரா நகர் முழுதும், புகாரா மட்டுமென்ன? இஸ்லாமிய உலகு முழுதும் இமாமவர்களின் புகழ் பரவியிருந்ததால், வெறும் அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு இமாமவர்களை அசைக்க முடியாது என்பதை புகாராவின் அதிகாரப்பீடம் உணர்ந்து கொண்டது.

எனவே, குறுக்கு வழியைக் கடைப்படிக்க முடிவு செய்தார் காலித், இமாமவர்களின் ஆசிரியரான இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களுக்கு எந்தக் குற்றம் சாட்டிக் கசையடி கொடுத்தனரோ, அதே குற்றச்சாட்டை, அவர்களின் மாணவர் புகாரீ(ரஹ்) மீதும் சுமத்தப்பட்டது. ‘குர்ஆன் படைக்கப்பட்டது அன்று’ என்பதே இஸ்லாத்தின் உண்மைக் கொள்கையாகும்.

இதற்கு மாற்றுக் கருத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிடுமாறு ஒருசில கைக்கூலி அறிஞர்களை காலிது தூண்டிவிட்டார். ‘குர்ஆன் படைக்கப்பட்டதன்று’ என்ற நீதிக்குரல் இமாமவர்களிடத்திலிருந்து கிளம்பிய உடனேயே இமாமைக் குற்றவாளியாக்கி, அவர்களை புகாராவைவிட்டே அரசு வெளியேற்றி விட்டது. இமாமவர்களின் மனம் வெதும்பியது. புகாராவை விட்டு வெளியேறும்போது, ‘யாஅல்லாஹ்! இவர்கள் என்னை என்ன செய்வதற்கு நாடினார்களோ அதனை அவர்களுடைய விஷயத்திலும் காட்டிவிடுவாயாக!’ என மனம் நொந்து துஆச் செய்தார்கள்.

‘குணமெனும் குன்றேறி நின்றார் கோபம் கணமேயும் காத்தல் அரிது’ என்றாற்போல அநீதி இழைக்க நினைத்தவர்களுக்கே அந்த அநீதி திரும்பிவிட்டது. ஒருசில நாட்களில் ஆட்சியாளர் காலிதுப்னு அஹ்மத் கழுதையில் ஏற்றபட்டு ஊர்வலமாக கொண்டுவர ஆணையிடப்பட்டுப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

புகாராவை விட்டுப் புறப்பட்ட இமாமவர்கள், பேகந்த் எனும் நகரத்தினை வந்தடைந்தார்கள். எனினும், இமாமவர்களின் மீது சுமத்தப்பட்ட பழி, மிகத் தொலைவான இடங்களுக்கெல்லாம் பரவியிருந்ததால் பேகந்திலும் இமாமவர்களை ஏற்றுக் கொள்வதில் இரு பிரிவுகள் தோன்றிவிட்டன. ஒரு சிலர் அழைத்துக் கொள்ள விரும்பினர். அதனைச் சிலர் எதிர்த்தனர். இந்த துன்பவட்டத்தில் இருக்க இமாமவர்கள் விரும்பவில்லை. இதற்கிடையில் சமர்கந்துவாசிகள் இமாமவர்களைத் தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல முன் வந்தனர். அழைப்பை இமாம் ஏற்றுக் கொண்டனர். ‘காத்தங்’ என்ற ஊர்வரை சென்றுவிட்டாhகள். சமர்கந்திலும் இமாமை ஏற்றுக் கொள்வதில் இரு பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. கர்த்தங்கில் வைத்து இமாமவர்களின் உடல் நிலை திடீரென மோசமடைந்தது. சமர்கந்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டதால். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக நோயுற்ற நிலையிலும் அங்கே சென்றுவிட முயன்றார். சமர்கந்தின் மக்கள் இரண்டு விதக் கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த இமாமவர்கள் தஹஜ்ஜுது தொழுகையில் இவ்வாறு துஆச் செய்தார்கள்: ‘இறைவா! உமது பூமி மிகப் பரந்திருந்தாலும் என்மீது மட்டும் அது சுருங்கிவிட்டது. எனவே என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக!!’
இமாமவர்களின் மறைவு
பின், சமர்கந்துவாசிகள் ஒன்றுபட்டு அழைக்க வந்தபோது சமர்கந்துக்குப் புறப்படுவதற்காகத் தலைப்பாகை அணிந்து, செருப்பை மாட்டிக் கொண்டார்கள். ஒருசில அடிகள் எடுத்துவைத்த இமாமவர்கள், ‘இயலாமை அதிகரிக்கிறது. என்னை விட்டுவிடுங்கள்’ எனக் கூறினார். சிறிது நேரம் துஆச் செய்தார்கள். அறிஞர்க்கறிஞர், சய்யிதுல்ஃபுகஹா, முஹம்மது இப்னு இஸ்மாயீல் புகாரீ(ரஹ்) அவர்கள், ‘ஈதுல் பித்ர்’ இரவில் தங்களது 62வது வயதில் ஹிஜ்ரீ 256-ம் ஆண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். (இன்னாலில்லாஹி) மறுநாள் ளுஹர் தொழுகைக்குப் பின் கர்த்தங்கிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.

இமாமவர்களின் நூல்கள்:

‘தாரீகுல் கபீர்’ (மாபெரும் வரலாறு): இது தமது 18-வது வயதில் எழுதியதாகும். மஸ்ஜிதுந் நபவியில் உள்ள மிம்பருக்கும், நாயகம்(ஸல்) அவர்களின் மகபராவுக்கும் மத்தியில் இருந்து கொண்டு நிலவொளியில் இதனை எழுதினார்கள். இதைப்பற்றி இமாமவர்களே, ‘புத்தகம் நீண்டு விடும் என்பதால், இந்நூலில் எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இதில் கூறவில்லை, இருப்பினும், சுருக்கமாக எழுதியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நூலை பார்வையிட்ட இஸ்ஹாக் இப்னு ராஹ்வைஹி(ரஹ்) இதனை ‘ஓர் அதிசயம்’ என்றே வர்ணித்துள்ளார்கள்.

இந்நூலில், சஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉதாபிஈன்கள் ஆகியோரைப் பற்றி அகர வரிசையில் எழுதியுள்ளார்கள். ஒரே பெயரில் பலரிருந்தால், அவர்களின் தந்தையார் பெயரையும் சேர்த்து எழுதி உள்ளனர். இதில் அவரவருடைய நிறைவு குறைவுகளையும் எழுதி உள்ளனர். தந்தையார் பெயரைத் தெரிய முடியாமலிருந்தால் அவர்களை, ‘மறைந்த மனிதர்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இந்நூலை முஸ்லிம் கலைக் களஞ்சியம் (ஹைதராபாத்) பல பாகங்களாகப் பிரித்துப் பிரசுரித்து வெளியிட்டுள்ளது.

தாரீகுஸ்ஸகீர் (சிறிய வரலாறு):

இதன் சிறப்பம்சம், இறந்தவர்களைப்பற்றி, வருட அடிப்படையில் எழுதப்பட்டு இருப்பதாகும். இதனால் முதலில் இறந்தது யார்? அதற் கடுத்து இறந்தது யார்? என்றும் தெரிந்து கொள்ள இலகுவாகிறது.

அசத்தியமான கொள்கைகளை மறுத்து, ‘கல்கு அஃப்ஆலுல் இபாத்’  (பக்தர்களின் செயற்படைப்பு) எனும் நூல் எழுதியுள்ளனர். ‘கிதாபு ளுஅஃபாயிஸ் ஸகீர்’ எனும் நூலில் – தரம் குன்றிய ‘ராவீ’களைப்பற்றி அகரவரிசையில் எழுதியுள்ளனர். ‘தனித்து நிற்கும் ஒழுக்கம்’ எனும் பெயரில் நாயகம்(ஸல்) உடைய குணநலன்கள் பற்றிய ஒப்பற்ற ஒரு நூலை யாத்திருக்கிறார்கள். தித்திக்கும் திருமறைக்கு, ‘தஃப்ஸீருல்கபீர்’ என்ற பெயரில் விரிவுரை எழுதியுள்ளனர். ஒரே ஒரு ஹதீதை ரிவாயத் செய்தவர்களைப்பற்றி ‘கிதாபுல் உஹ்தான்’ எனும் நூலை இயற்றியுள்ளனர்.
‘கிதாபுல் இலல்’ (குறைகள்) என்ற நூலையும், ‘கிதாபுல் அஷ்ரபா’, ‘கிதாபுல் ஹிபா’, ‘பிர்ருல் வாலிதைன்’ போன்ற நூல்களையும் இமாமவர்கள் எழுதி உள்ளனர்.

புகாரா கண்ட அறிவொளி உலகனைத்தும் சுடர்வீசி ஒளி பரப்புமாக!
Source : http://albaqavi.com/home/?p=256

Monday, May 21, 2012

நீடூர் நெய்வாசல் - புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முதற்கட்டமாக வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

முதற்கட்டமாக வெளியாகியுள்ள பனிரெண்டு நபர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள்!

நீடூர் நெய்வாசல் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வக்பு வாரியம் தயாராகிவிட்ட நிலையில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களும் தயாராகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் வருகிற ஜூன் 16 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற நமதூர் நிர்வாகத்தேர்தலுக்காக ஒரு தரப்பார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பனிரெண்டு நபர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள் தங்கள் பார்வைக்கு.Sunday, May 20, 2012

இதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும்ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதும்.ஆட்சி அதிகாரத்தை அதை எடுப்பதும் இறைவன் வசமே. முற்றிலும் உண்மை.
நாளை இறைவன் உங்களிடமும் நிச்சையமாக கேள்விகளை கேட்பான் என்பதை மறவாதீர்கள்- இதுவும் முற்றிலும் உண்மை.


"அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை".-    நபி மொழி

"பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்".-    நபி மொழி


 இவைகளும்  அனைவரும் பேண வேண்டிய நல்வழி என்பதும் உண்மை


சில ஆலோசனைகள்


நல்லவராக இருந்தால் மட்டும் போதாது அவர் வல்லவராகவும் இருக்க வேண்டும்.
இதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும் . அதனால் ஊர்   ஒற்றுமை  கெட்டால்   அனைத்தும் கெட்டுவிடும்.அதனால் ஒற்றுமைக்கு   முக்கியம் தரப்பட வேண்டும். அல்லாஹ்வே பெரியவன் என்ற  நல்ல நோக்கம் வேண்டும். நமக்குள் பெரியவர், உயர்ந்தவர், நம் கட்சிக்கார் என்ற குறுகிய வட்டத்தில் பார்க்கக் கூடாது.
அனைத்துக்கும் மேல் அவர் இறை பக்தியுடன் இருந்து அல்லாஹ்வினை தொழக்கூடியவராக இருக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு முடித்த வரை அவசியம் வர வேண்டும். அனைத்துப்  பள்ளிவாசல்களும்  இறைவனை  தொழக்கூடிய  இடம்தான்  அதனால் "இது பெரிய பள்ளிவாசல் அது சின்ன பள்ளிவாசல் அது அந்த தெரு பள்ளிவாசல்" என்ற வேற்றுமை காட்டக் கூடாது. பள்ளிவாசல் அழகுக்கா அல்லது தொழுவதற்கா!


 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்


அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி தொழ வருபவர்களை ஏதாவது காரணம் சொல்லி அவருக்கு தடை விதிக்கக் கூடாது அவர் மற்றவருக்கு இடையூறாக இருக்கும் வரை!


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? 2:114 அல்-குர்ஆன்


நமது  கவனம் நமது தொழுகையில் இருக்க வேண்டும். நம் பார்வை அடுத்தவர் தொழுவதின் பார்வைக்கு போகும் பொழுது நாம் நமது தொழுகையின் ஈடுபாட்டில் இல்லாமல் போய் விடுகின்றோம் என்பது உறுதியாகிவிடுகின்றது    

 இங்கு கிளிக் செய்து படியுங்கள்


பள்ளிவாசல் எதற்கு? அழகுக்கா அல்லது

 இருதயம்  ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள்

.படத்தினை கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள்http://seasonsnidur.blogspot.in/2010/10/blog-post_2864.html


அல்லாஹ்வின்( இறைவனின்) 99 பெயர்கள் (அஸ்மாவுல் ஹுஸ்னா)

அல்லாஹ்வின்( இறைவனின்)   99 பெயர்கள் (அஸ்மாவுல் ஹுஸ்னா)
பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும்.  அப்பெயர்களின் தன்மைகளை உறுதியான நம்பிகையுடன்  அல்லாஹ்வின் ( இறைவனின்)  (அஸ்மாவுல் ஹுஸ்னா)  மனனம் செய்வதும் அதன்மீது நம்பிக்கை  வைப்பதும் நன்மைதரும்.
 அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். The most beautiful names belong to Allah: so call on him by them. (Surat Al-A’raf  7:180)
الَّذينَ ءامَنوا وَتَطمَئِنُّ قُلوبُهُم بِذِكرِ اللَّهِ ۗ أَلا بِذِكرِ اللَّهِ تَطمَئِنُّ القُلوبُ

அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (Surat Ar-Ra’d 13:28)


'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'. (அல்-அஃராப் 7:180)
99 names of Allah, Asma ul husna
'யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், - சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் - 199)

Saturday, May 19, 2012

வயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண்டும்

 வயதாகிவிட்டது அதனால் நினைவுகள் குறைகின்றன ஆனால் ஒரு காலமும் தாய் தந்தை நமக்கு செய்த சேவைகள் மறப்பதில்லை.
தனியே தொழும்போது சரியாக முறையாக தொழுகின்றோமா  என்ற குழப்பம் வருவதுண்டு. கவலை வேண்டாம். உங்கள் மனதைத்தான் இறைவன் பார்க்கின்றான்.நீங்கள் மனப் பூர்வமாக இறைவனை மனதில் நினைத்து தொழுகின்றீர்கள்.அதனால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என முழுமையாக நம்புங்கள்.
முடிந்தவரை பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் தொழும்போது  இந்த குழப்பம் வருவதற்கு   வாய்ப்பு கிடையாது. தொழுகையில் தொழ வைக்கும் இமாம் தவறு செய்து விட்டால் அந்த தவறு  உங்களுக்கு வந்து சேராது.

  வயதாகிவிட்டால் தேவையில்லாமல் பேசுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையை கேளுங்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுங்கள் .ஒத்திப்போடாதீர்கள். வயதாகி விட்டார் உளறுகின்றார் என்று மற்றவர் சொல்வதற்கு வழி வகுத்து வந்துவிடாதீர்கள். நாம் அடைந்த அனுபவத்தினையும் பெற்ற அறிவுகளையும் தம் மக்களுக்கு சொல்ல விருப்பம் வரத்தான் செய்யும்,ஆனால் இக்கால மக்கள் நம்மை விட மிக்க அறிவு பெற்றவர்களாகவே உள்ளார்கள். அவர்களுக்கு அறிவுரை ஒரு வேப்பு போல் கசப்பாகவே இருக்கின்றது. வேப்பு கசப்பானாலும் அது உடலுக்கு நலன்தரக் கூடியதுதான். அதிலும் அளவு தேவை அளவுக்கு மேல் போனால் நன்மைதராது பாதகம் விளைவிக்கும்.

 வேடிகையாக வயதானவர்கள் உளறுவார்கள் என்பதற்கு சொல்லும் பண மோகம் கொண்ட மகன்கள் கட்டிவிடும் கதை
ஒரு நேர்மையான தகப்பன் மரண தருவாயில் தன் மகன்களை அழைத்து தான் மற்றவர்களிடம் கொடுத்து அவை  தனக்கு வர வேண்டியவைகள் அதனை குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.  உடனே அவரது மகன்கள் வேகமாக அதனை குறித்துக் கொண்டார்கள். பின்பு அந்த தகப்பன் தான் கொடுக்கவேண்டிய கடன்களைப் பற்றி சொல்லி அதனை குறித்துக் கொண்டு கொடுத்துவிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது மகன்கள் 'அப்பாவுக்கு கோமா வந்து விட்டது உளறுகின்றார்' என்று சொல்லிக்கொண்டு  கொடுக்க வேண்டியதை மட்டும் குறிப்பு எடுக்காமல் நிறுத்திக் கொண்டனர்.


இஸ்லாத்தின்-கடவுள்-கொள்கை வழங்குபவர்: டாக்டர் அப்துல்லாஹ்

Friday, May 18, 2012

பிறப்பும் இறப்பும் இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்டங்கள் !

பிறப்பும் இறப்பும்  இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்டங்கள் !
  பிறந்து விட்டேன். நான் பிறந்ததற்காக பல வித மிட்டாய்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள் பெற்றோர்கள். அவர்கள் இல்லை நான் இருக்கிறேன். அவர்கள் அறிவார்கள்  நானும்  போய் விடுவேனென்று ஆனால் அந்த சிந்தனை அவர்களுக்கு அப்பொழுது வந்திருக்காது.
வருடா வருடம் சில ஆண்டுகள் அவர்கள் ஆசைப்பட்டு என் 'பிறந்த நாள்' கொண்டாடினார்கள். அதன்பிறகு நான் வளர்ந்தபின் 'முதிர்சியடைந்தபின்'  என் 'பிறந்த நாள்' நானே கொண்டாடுகின்றேன்.


பின்பு   பல கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. தம ஆண்  உறுப்பில்  ஒட்டிக்கொண்டுள்ள   ஒருதோலை  நீக்குவதற்கு( Circumcision is the removal of the foreskin, which is the skin that covers the tip of the penis.( ' சுன்னத்' என்ற பெயரில் கொண்டாட்டம் தேவையா )ஒரு விருந்தோடு கொண்டாட்டம் ,

என் சகோதரி  பூப்பெய்தினால் ஒரு அழைப்பு பத்திரிகை அடித்து ஒரு  விருந்து
பயணம் வந்தால் ,பயணம் போனால் இப்படியே கொண்டாட்டங்கள்... தொடரும் கொண்டாட்டங்கள் ...
இறைவா என்ன  செய்வேன்! பணத்திற்கு எங்கு போவேன்!
உயிர் போனபின் மூன்று , ஏழு ,நாற்பது பின்பு வருடா வருடம் நினைவு நாள் கொண்டாட்டம்.
மற்றவருக்கு கொண்டாட்டம் எனக்கு அல்லது என்   குடும்பத்திற்கு திண்டாட்டம் .

"பிறந்த நாள் கொண்டாட்டம்" "காதலர் தினம் "    "ஹேப்பி ஆசீர்வதிக்கப்பட்டவர் பிறந்த நாள்" அல்லது இந்த வகையான மற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும்  மேற்கு நாடுகளால் திணிக்கப்பட்டவை

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் அவற்றிற்கு கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

தேர்தலில் புதுமை காணப்போகும் நீடூர் - நெய்வாசல் !

 எத்தனையோ  தேர்தல் கண்ட  நீடூர் - நெய்வாசல் மக்களுக்கு (ஜமாத்தார்களுக்கு) இது ஒரு புது வகையான ஜமாஅத் தேர்தல்.
வோட்டுப் போடாமலேயே அரசியல் பேசி வரும் சில மக்களுக்கு இந்த தேர்தலும் ஒரு விதிவிலக்கா! நாம் அறியோம்!
ஒரு சில இடங்களில் கண்ட தேர்தல் நீடூர் - நெய்வாசலுக்கும்  வந்து விட்டது. இது ஒற்றுமை இல்லாமையால் வந்த வினையா அல்லது அவசியமான ஒன்றா! ஒரு காலம் இருந்தது போட்டியின்றி தேர்வு செய்யும் முறை.காலம்தான் பதில் சொல்லும் . அனைத்தையும் அறிந்தவன் இறைவன். அவன் நாடிய பின் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
 இது மற்ற இஸ்லாமிய கிராமங்களுக்கும் தொடரலாம்.
விவரம் அறிய கீழ் உள்ள லிங்க்குகளை கிளிக் செய்து படியுங்கள்!

 ஜூன் 16 ஆம் தேதி இரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய நிர்வாகத்தேர்தல்! முறைப்படி அறிவிக்கப்பட்டது!

  Source : http://www.nidurneivasal.org/2012/05/16.html

இறுதியாக நீடூர் - நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அ...

Source : http://mynidur.blogspot.in/2012/05/blog-post_3690.html?spref=fb

 நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள்

Source :  http://nidur.info/

 நீடூர்-நெய்வாசல் ஜாமியா மஸ்ஜித் தேர்தல் விதிமுறை இன்றுமுதல் அமுலாகிறது
 Source : http://nidurnet.blogspot.in

தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தற்ப்போது வெளியிடப்பட்டது வக்ஃப் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஜுன் 16ம்தேதி தேர்தல்

Source :  http://nidurnet.blogspot.in/

 

ஜூன் 16 நீடூர்-நெய்வாசல் ஜமாஅத் தேர்தல்! வக்ப் வாரிய அதிகாரி பிரத்யேகப் பேட்டி!

 Source : http://niduronline.com/?p=9154

Thursday, May 17, 2012

.இது மனிதனுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும்.

 “படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்" (நபிமொழி)

“கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேபியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்."  (நபிமொழி)

  எந்த இனமும்  மற்றொரு இனத்தை விட மேன்மையானது கிடையாது. நாம்  ஒரு தோட்டத்தில் உள்ள பல்வேறு மலர்கள். நாம் பார்க்கும் போது ஒவ்வொரு தோட்டமும் ஒவ்வொரு மலரும்   ஒரு பங்களிக்கிறது என்று நாம்  உணர வேண்டும் . ஒவ்வொரு பூவும் அதற்கான அழகிய நிறமும் மற்றும் நறுமணமும் பெற்றிருக்கலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது . ஆனால் அதற்கே உள்ள உயர்வான சிறப்புகளை நாம் அறிந்துக் கொள்வது கடினம் . அனைத்து மலர்க்களும் செடிகளும்  ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பயன்தரக் கூடியதாகவே  இறைவனால் படைக்கப் பட்டுள்ளன  . இதே வழியில் நாம் பல வண்ணங்களில் இறைவனால் படைக்கப்பட்டு அலங்கரிக்கப்  பட்டோம்.  உலக தோட்டத்தில் நாம் பல வண்ணங்களில் படைக்கப்பட்ட அழகிய  மலர்களாகவே உள்ளோம் என்பதனை உணர்ந்தால் மக்களுக்குள் உயர்வு தாழ்வில்லை .  "சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்."

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(குர்ஆன் 49:13) "நடத்தை சிறந்த உள்ளது.

பிறப்பால்,நிறத்தால் ,இனத்தால்  உயர்வு தாழ்வில்லை. கருப்பரைவிட வெள்ளையர் உயர்ந்தவரில்லை வெள்ளையரைவிட கறுப்பர் உயர்தவரில்லை . அராபியரும்,அமெரிக்கரும்  மற்ற எந்த நாட்டினரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர் தாழந்தவரில்லை. உயர்குடிப்பிறப்பு என்பது மற்றவர்களை ஏமாற்றி பிழைப்புக்காக உருவாக்கப்பட்டது . இதனை உடைத்தாக   வேண்டும். ஒருவரின் நடத்தை,செயல்பாடு மற்றும் சேவைகளால் ஒரு மனிதர் உயர்வாக கருதப்படுவதும் மதிக்கப்படுவதும் இயல்பு.இது வரவேர்க்கப்படவேண்டியது .இது மனிதனுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும். "கருப்பு மசூதி" அல்லது "வெள்ளை மசூதி" அல்லது கருப்பு கோவில் அல்லது வெள்ளை கோவில் என்று பெயர் சொல்லப்படுவதால் அங்கு சென்று வணங்குவதில் அல்லது தொழுவதில் மாற்றம் உண்டாகப் போவதுமில்லை.  வணக்கத்திற்கு,  தொழுவதற்கு ஏற்புடைய இறைவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். நீங்களாகவே பல இறைவனை உண்டாக்க முடியாது. அந்த இறைவன் எங்கும் நிறைந்தவன் அனைவருக்கும் பொதுவானவன். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" நாமெல்லாம் ஒரே குலம்,ஒரே இனம் மற்றும் நாம் தொழுவதும் ஒரே இறைவன். இதுதான் உண்மை மற்றும்  இதுதான் நம்மை  மேன்படுத்தும். மனிதனை மனிதன் வணங்கும் குணத்தை விட்டொழிப்போம். ஓர் இறைவனைத் தவிர மற்ற யாருக்கும் அடிபணிய மாட்டோம். இறைவன் பார்வையில் கருப்பன் மற்றும்  வெள்ளையன் என்ற வேறுபாடில்லை. அந்த ஓர் இறைவன்  முன் அனைவரும் சமம்.
"மனிதன் உரிமையோடு பிறக்கின்றான் ஆனால் அவன் பிரிவு என்ற சங்கிலியால் கட்டப் பட்டுள்ளான்"  

  மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(குர் 'ஆன்   49:13).

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.          (குர் 'ஆன்   49:10).

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.(குர் 'ஆன்   49:11).

“எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும் அவர்களைத் தலைவர்களாக்கவும் அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடி இருந்தோம்.”(குர்ஆன் 26 : 5)


“முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்றும் கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.” வரலாற்றாசிரியர் ஆர்னால்டு டாயின்பீ


“இன,சாதி அமைப்பை எந்த முஸ்லிம் நாடும் வளர்க்கவில்லை.” பிரிட்டிஷ் கலைக்களஞ்சியம்

Wednesday, May 16, 2012

ஒரு மாணவரின் கல்லூரி வாழ்கையில் ஒரு நாள் !

ஒரு மாணவரின் கல்லூரி வாழ்கையில் ஒரு நாள் !
கல்லூரி வாழ்வென்பது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பகுதியாகும். காலமெல்லாம் நினைவுகளை நினைவுக்கு கொண்டுவரக் கூடிய சிறப்பைக் கொண்டவை. கவலையற்ற அறிவை வளர்த்துக் கொள்ளக்  கூடியது  மட்டுமல்லாமல் நண்பர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பினையும் அளிக்கின்றன, அந்த  கல்லூரி வாழ்கையில் ஒரு மாணவரின் ஒரு நாள்  வாழ்கையின்  மறுபக்கத்தினை கீழ்  உள்ள விளக்கப் படம் விவரிக்கின்றது பாருங்கள்

A Day in the Life of a College Student
Presented By: BachelorsDegreeOnline.com

வீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்

முன்னாள் குத்துச் சண்டை வீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்
  வீரர் மகம்மது அலி அவர்களின் மகள்கள் (hana (ஹன) மற்றும் லைலா) வீட்டிற்கு வந்தபோது அவர்கள் முறையான ஆடைகள் அணியாமல் மிதமான ஆடைகளை அணிந்து வந்தனர். அந்த நிகழ்வினை அவரது மகள் விவரித்தது நம் மனதில் காலமும்   நினைவில் நிற்கக்  கூடியது.   
கார் ஓட்டுனர் வீரர் மகம்மது அலி  சூட் (அறை)  வரை வந்து அவர்களை விட்டுச் சென்றார் .எப்போழுதும்போல் மகம்மது அலி கதவுக்குப்பின் நின்று  தன மகள்களை வேடிக்கையாக  பயமுறுத்தினார் , பின்பு அன்பாக அவர்களை தன மடியில் அமரவைத்து  அன்போடு முத்தங்களைக் கொடுத்தார்.அப்பொழுது அவர் சொன்ன அறிவுரைகளும் ஆலோசனைகளும் தன்னால் மறக்க முடியாது  என்று  அவரது மகள் சொல்கின்றார்
 
   "அவர் கண்களால் என்னை நேராக பார்த்து "ஹன! (Hana,) , இறைவன் உலகின் மதிப்புமிக்க  கிடைக்கப்பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்துள்ளான் அவைகள் கடினமாக உள்ளது ", வைரம்  ஆழமான கீழே நிலத்தில், மூடப்பட்டு மற்றும் பாதுகாக்கப்படுவதால் அது மதிப்பு அதிகம் , முத்தை கடலின் கீழே ஆழமான இடத்தில , மறைக்கப்பட்டு மற்றும் அதனை  அழகான ஷெல்லுக்குள்   பாதுகாக்கப்படுவதால்.அதன் மதிப்பும் உயர்வாகின்றது .தங்கத்தினை  பாறை அடுக்குகள் மேலாக மூடப்பட்ட நிலையில் உள்ளது, தங்கத்தினைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்." அது மட்டுமல்லாமல்  அவர் கண்களால் என்னை பார்த்து. "உங்கள் உடல் என்பது புனிதமானது. . நீ! வைரம்,தங்கம் , மற்றும் முத்தை விட மிகவும் விலைமதிப்பு மிக்கவளாய் இருக்கிறாய்" அதனால் உன் உடம்பையும் பாதுகாப்பாகவும் முறையான ஆடையுடுத்திக் கொள்வதும் நல்லது"  என தன மகளைப் பார்த்து வீரர் மகம்மது அலி சொன்ன வார்த்தைகள் முத்து, தங்கம் மற்றும் வைரம் போன்றவையாகும்

Tuesday, May 15, 2012

சிறகு கொடுப்பாரோ!


திருமணபந்தம் தொட்டுத்தொடர
இருமனங்கள் இணையும் முன்னே
இருட்டியது வாழ்க்கை இருமாதத்தில்
இளம் வயதில் இதயத்தில் இடி
இறப்பு வந்தது விபத்தால் உயிர்பலி

விளங்காதவள் இவளென்று
வசைபாடும் சுடுசொற்களால்
வாட்டம்கொண்டு நெஞ்சம் ஆட்டம் காண
விதவைக்கோலம் வீட்டுசிறையால்
விரக்தி கண்ட உள்ளம்

வீதி இறங்கினாலும்
வெடுவெடுக்கும் முகங்களால்
வெதும்பித் ததும்ப- மனதுக்குள்
வேதனைகளும் வேடிக்கைக் காட்டிட

இரு விழிகள் எறிய
இமைகள் சுமையால் சரிய
இதயத்தின் நரம்பெல்லாம்
இறுகியே ரணமாக

நிலவை மேகம் மூடும்போதெல்லாம்
நினைவுகள் மெல்ல திறக்க
நெஞ்சத்தின் அறையெங்கும்
நெருப்பு அனல்கள் பறக்க

பட்டாம்பூச்சியின் ரெக்கைதன்னை
பட்டென பிடுங்கிய மாயமென்ன
பட்டுபோன தன் மகளின் வாழ்வைபார்த்து
பெற்றமனங்கள் படும் துயரங்களென்னென்ன!

பாவை மெல்ல உருகுவதும்
பசலை நோயால் வாடுவதும்
பாவம் யாரும் அறிவாரோ
பசுங்கிளிக்கு வாழ்வுச்சிறகு கொடுப்பாரோ!

வழி தேடும் பயணங்கள்
வலி சொல்லும் சலனங்கள்
விழி மெல்லும் விரசங்கள்
வாழ வகைதேடும் எண்ணங்கள்

மனதுக்குள்ளே பல புழுக்கங்கள்
மறைத்து வாழும் சந்தர்ப்பங்கள்
எழுதுகோல் வழியே கவலைகள்
எழுதிட தீருமோ! இதுபோன்ற ஏக்கங்கள்!

அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு


அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.

இஸ்லாமிய புகைப்படங்கள்,கிராபிக்ஸ் தரவிறக்கம் செய்ய சிறந்த வலைத்தளம்


இணையத்தின் வழி இஸ்லாமிய புகைப்படங்கள்,கிராபிக்ஸ்  தரவிறக்கம்  செய்ய சிறந்த வலைத்தளம்
  தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள்

இந்த திட்டத்தின்  நோக்கம் இஸ்லாமிய கலைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் ன்ற நோக்கமேயாகும்
நீங்கள் விரும்பினால் உங்கள் சொந்த இஸ்லாமிய புகைப்படங்கள்,கிராபிக்ஸ் பதிவேற்றலாம். மற்றும் பலவகையான இஸ்லாம் சம்பந்தமான  (துவாக்கள் ,ஹதீஸ்கள்,மேற்கோள்கள் மற்றும்  பல) அறிவுகளைப் பெற இந்த இணையதளம் உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது .பயன்படுத்தி  பயனடையுங்கள்   

 தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள்
 

Monday, May 14, 2012

துல்கர்னைன்(ஜுல்கர்னைன்) Zulkarnain

குர்ஆன் - சூரத்  அல் -கஹ்ப், Quran- Surat Al-Kahf
 18:83
Sahih International
And they ask you, [O Muhammad], about Dhul-Qarnayn. Say, "I will recite to you about him a report."

(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; "அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீர் கூறுவீராக.

18:86
Sahih International
Until, when he reached the setting of the sun, he found it [as if] setting in a spring of dark mud, and he found near it a people. Allah said, "O Dhul-Qarnayn, either you punish [them] or else adopt among them [a way of] goodness."

சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; "துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம்.
18:94
Sahih International
They said, "O Dhul-Qarnayn, indeed Gog and Magog are [great] corrupters in the land. So may we assign for you an expenditure that you might make between us and them a barrier?"

அவர்கள் "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்.

18:98
Sahih International
[Dhul-Qarnayn] said, "This is a mercy from my Lord; but when the promise of my Lord comes, He will make it level, and ever is the promise of my Lord true."

"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.
Source : http://quran.com/search?q=Zulkarnain
Copyright © Quran.com. All rights reserved.

Thursday, May 10, 2012

திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளாருக்கு ஐ.நா.வில் ஆலோசகர் பதவி

திமுகவின் இளைஞரணி மாநில துணைச் செயலாளரக  பதவி வகிப்பவர் அசன் முகமது ஜின்னா.  இவர் சட்டப்படிப்பில் முதுகலைப் படிப்பை முடித்து வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது செயல்பாட்டை பாராட்டி அமெரிக்க கவுன்சில் இவருக்கு 2004-ம் வருடம்  'இளம் அரசியல் தலைவர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது.  இப்போது ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவரது நியமனம் குறித்து யுனெஸ்கோ அமைப்பு தங்களது இணையதளத்தில் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், "நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்" என்று தெரிவித்துள்ளது.

அசன் முகமது ஜின்னா  தான்  மாணவி சரிகாஷா ஈவ்டீசிங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/

EPL - இஸ்லாம் - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு


Yaya Toure (Image courtesy - goal.com)
உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார். கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார். யார் இவர்? எந்த போட்டி அது? என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?

தொடர்ந்து படிக்க... http://www.ethirkkural.com/2012/05/epl.html

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Monday, May 7, 2012

70,000 இத்தாலியர்கள் இஸ்லாத்திற்கு இணைந்துள்ளார்கள்


ரோம்  - Ucoi (இத்தாலி இஸ்லாமிய சமூகங்கள் யூனியன்) சுமார்  70,000 இத்தாலியர்கள் இஸ்லாத்திற்கு இணைந்துள்ளார்கள் . 150,000 முஸ்லிம்கள் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள் மற்றும் ஏற்கனவே ஒரு மில்லியன் முஸ்லிம்கள் இத்தாலியில் வசிக்கின்றனர்
Rome - According to Ucoi (the Union of Islamic communities in Italy) about 70,000 Italians converted to Islam, a real boom of conversions heightened by the crisis of values but also by the economic crisis in Italy, as Elzir Izzedine commented during the Youtube programme KlausCondicio, by the anchorman Klaus Davi, who is carrying out a report on the Italians espousing Islam.

Ucoi made known a few data: 70 thousand Italians converted to Islam and what strikes most is the high number of Italians contacting Mosques to study Islam.

"It is an absolutely positive fact", Izzedine commented. "If you consider that there are already 150,000 Muslims with Italian citizenship and one million resident Muslims, you can understand that it is an unprecedented boom"

Source : http://1426.blogspot.in/

Sunday, May 6, 2012

அண்ணல் நபிகளாரின் அருமை பொன் மொழிகள்

                                   நபி மொழிகள்


செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

 இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

 உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

 நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

 உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

 எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

 எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

 இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

 கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

 பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

 தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

 பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

 அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

 நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

 அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

 ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

 இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

 தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

 பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

 தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

 நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

 உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.

  உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

 இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

 உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

 இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

 பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

 நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

 குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

 எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

 புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

 கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

 நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

 தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

 தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

 மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

 இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

 நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

 ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

 உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

 நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

 உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

 வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

 தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

 இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

 ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

 தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

 கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

 பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.

 ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

 வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.

 மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.

 செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.

 இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.

 நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.

 உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

தகவல் அனுப்பியவர்
தாரிக்  அஹ்மது  அவர்கள் 

மற்றும் தேவையான நபிமொழி பார்க்க கீழ் உள்ளதை கிளிக் செய்து பாருங்கள்   ஃபித்ரா அடிமை அத்தாட்சிகள் அநாதைகள் அநீதி அனுமதி அமானிதம் அறிவியல் அல்லாஹ் அவதூறு ஆணவம் ஆண்கள் ஆதம் (அலை) ஆஷுரா இசை இணைவைத்தல் இதயம் இனவெறி இரக்கம் இரவு இறந்தவர்கள் இறுதி நாள் இறையச்சம் இறைவன் உணவு உண்மை உறவினர் உலக வாழ்க்கை உழைப்பு ஏகத்துவம் ஏழை வரி ஏழைகள் ஒழுக்கம் கடன் கடல்கள் கணவன் கருத்து வேறுபாடு கல்வி காலம் குடும்பம் குர்ஆன் குர்பானி கெட்ட வார்த்தை கேலி கொலை கோழைகள் சகுனம் சகோதரன் சத்தியம் செய்தல் சந்தேகம் சபிக்கப்பட்டவர்கள் சாட்சி சாபம் சிசுக்கொலை சிரம் பணிதல் சிறந்தவர் சிலை வணக்கம் சூதாட்டம் செருப்பு செல்வம் சொத்து சொர்க்கம் சோதனைகள் ஜக்காத் ஜோதிடம் தங்கம் தண்டனை தண்ணீர் தந்தை தர்மம் தர்ஹா தலைவர் தாம்பத்தியம் தாயத்து தாய் திருடன் திருமணம் துன்பம் தும்மல் தொழுகை நட்பு நபி (ஸல்) நயவஞ்சகர்கள் நற்செயல்கள் நல்லறம் நாய் நாவைப் பேணுதல் நிம்மதி நீண்ட ஆயுள் நேசம் நோன்பு நோய் பகல் பட்டப்பெயர் பட்டுத் துணி பணியாளர் பதவி பாவமன்னிப்பு பாவம் பித்அத் பிரார்த்தனை பிள்ளைகள் புன்னகை புறம் பேசுதல் பெண்கள் பெருநாள் பெருமை பெற்றோர் பொய் பொறுமை போர் மது மனைவி மன்னிப்பு மரம் மருத்துவம் மறுமை மலை மழை முட்டாள்கள் தினம் முஹர்ரம் மூடநம்பிக்கை மோசடி ரமலான் லஞ்சம் லைலத்துல் கத்ர் வட்டி வாக்குறுதி வானம் விசாரணை விபச்சாரம் வியாபாரம் விருந்தோம்பல் வீடு வெற்றி வெள்ளிக்கிழமை ஸதகா ஸலாம் ஸஹர் ஹராம் ஹலால்
Source

LinkWithin

Related Posts with Thumbnails