Showing posts with label முஸ்லிம்கள். Show all posts
Showing posts with label முஸ்லிம்கள். Show all posts

Monday, December 15, 2014

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்"


அஸ்ஸலாமு அலைக்கும்,

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி சகோக்களின் உதவியோடு இணைய கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கியில் பங்களிக்க அதன் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், நம் பக்கத்திலான சிறு பங்களிப்பே இக்கட்டுரை. பார்க்க https://ta.wikipedia.org/s/46rl

இதற்கு முன்பு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்ற பதம் குறித்த ஆய்வுக்கட்டுரை பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை படிக்க https://ta.wikipedia.org/s/2pcz


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Saturday, July 19, 2014

பூக்களைப்போல பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் !

பூக்களைப்போல
பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் !
காற்றுக்கூட

அதிகம் தீண்டாமல்
அவர்களை நாம் காக்கிறோம் !
முத்தங்களால்
யாரும் அசுத்தம் செய்வதை கூட
அருவருப்பாய் உணர்கிறோம் !

Tuesday, January 7, 2014

வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு!

 தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றின் வரவு காரணமாக, படித்த நடுத்தரவர்க்கத்தின் இடப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் என்ற எல்லையைத் தொடுவதற்குக் காத்திருக்கின்றன. கிராமப்புற மனிதர்கள் பிழைப்பு தேடி மாவட்டத் தலைநகரங்களில் அல்லது சென்னைக்கு நகர்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Tuesday, November 26, 2013

முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்!


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தவேண்டும்" என்பது பழமொழி. இப்பொழுது ஆயிரம் பேர் முன்னிலையில் அரசிற்குப் பயந்து திருமணம் நடத்தப்படுகிறது. காரணம் சட்டம் தான்.

"பருவ வயதை அடைந்து விட்டால் திருமணம் செய்து வைத்துவிடுவது" முஸ்லிம்களின் வழக்கம். தற்பொழுது பெண்ணுக்கு 19 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியானால்தான் திருமணம் செய்து வைக்கமுடியும் என்கிறது சட்டம். ஆனால் பருவமடைந்து விட்டால் திருமணத்திற்குரிய தகுதியை ஆணும், பெண்ணும் அடைந்துவிடுகின்றனர் என்கிறது அறிவியல்.

Monday, March 11, 2013

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்...

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- பௌத்த அச்சம் - நன்றி காலச்சுவடு

                                                    எம். ரிஷான் ஷெரீப்
இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்கிவைக்கவும் பல்வேறு விதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலங்காலமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. பங்களாதேஷ் வன் முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப் படைவாத அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத்தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆண்களும் பெண்களுமாகப் பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறு விதைக்கப்படும் நச்சு விதைகள் எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக் கலவரங்கள் ஏற்படக் காரணமாக அமையும்.

Friday, October 19, 2012

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 4

அடிப்படை வாதம்
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120826_tnmuslim4.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1


* அன்று புரட்சியில் தோன்றிய அருமையான மதம் இன்று அடிப்படை வாதத்தில் சிக்கிக்கொண்டது

* முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தான் என்பது நுணுக்கமான மேற்கத்திய அரசியல்

* தீவிரவாதம் என்றாலே ஒரு தாடியையும் ஒரு புர்காவையும் கண்ணுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்

* இஸ்லாத்தின் முக்கிய நோக்கமே அமைதி

* இஸ்லாத்திற்கு எதிரானவர்களைக் கொலை செய்யச் சொல்லி தவறாகப் போதித்தார்கள். இப்போது புரிந்துகொண்டு விலகிவிட்டோம்.

* இஸ்லாமிய சமுதாயத்தை மத அடிப்படை வாதிகளிடமிருந்து விடுவிக்க நினைக்கின்ற முற்போக்காளர்கள் வரவேண்டும்

மின்னஞ்சல் தகவல் தந்தவர் அன்புடன் புகாரி

Saturday, October 6, 2012

ஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிகரிப்பு



 நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

இஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்).

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது கட்டுரைக்கு வலு சேர்ப்பதாய் அமையுமென நம்புகின்றேன்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

Sunday, August 5, 2012

அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!


        குவஹாத்தி:ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.
ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.

Thursday, August 2, 2012

இந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZAN - 2012 IN PROGRESS)

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளான் மாதத்தில் உலகில் உள்ள முஸ்லிம்கள் ரமளானின் மகிமை அறிந்து நோன்பு வைத்து மகிழ்வடைந்து வருகின்றனர். சில படங்களை பாருங்கள்
All over the world Muslims have begun their holiest month of the year by fasting from dawn until dusk each day, broken each evening by large, communal meals. The start of Ramadan is earlier each year because it is calculated based on the sighting of the new moon, which begins the Muslim lunar month. Muslims use
the time to reevaluate their lives through the scope of Islamic doctrine. -- Lloyd Young
A Palestinian reads from the Koran during the dawn prayer on the first day of the Muslim holy month of
 Ramadan at a mosque in the West Bank city of Jenin on July 20. Muslims from Morocco to Afghanistan
 are steeling themselves for the toughest Ramadan in more than three decades with no food or drink,
 not even a sip of water, for 14 hours a day during the hottest time of the year.
                              (Mohammed Ballas/Associated Press)
prayer session "Tarawih" marking the beginning of the holy fasting month of Ramadan in a masjid in Makassar of Indonesia's South Sulawesi province on July 20. The Indonesian government set Ramadan to fall on July 21. (Yusuf Ahmad/Reuters)

Kashmiri Muslims offer prayers next to parked cars on a road outside a mosque on the first day of the holy month of Ramadan in Srinagar on July 21. (Danish Ismail/Reuters)

A Kashmiri Muslim woman prays at the Shah-i-Hamdaan shrine during Ramadan in Srinagar on July 23. Islam'sholy month of Ramadan is calculated on the sighting of the new moon and Muslims all over the world are supposed to fast from dawn to dusk during the month. (Tauseef Mustafa/AFP/Getty Images)


An Indian Muslim child runs at the Jama Masjid on the first night of Ramadan in New Delhi, India on
July 21. (Tsering Topgyal/Associated Press)


Pilgrims circle the Kaaba inside the Grand Mosque during the Muslim month of Ramadan in the holy city of
 Makah on July 23. (Hassan Ali/Reuters)

Wednesday, May 30, 2012

தொட்டால் தொடரும் ! - குறுந்தொடர்-1

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரங்கூன் போன்ற நாடுகளுக்கு "திரை கடலோடி திரவியம் தேடச் சென்றார்கள். அப்படிப் போன பலபேருடைய குடும்பம் "நல்லா" இருந்தது. அவர்கள் "ஜக்காத்" கொடுத்தார்கள். மற்றவர்கள் வாங்கினார்கள். அவர்கள் "ஹஜ்" செய்தார்கள், மற்றவர்கள் அவர்களை "ஹாஜியாரே" என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்., கார் வாங்கினார்கள், பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல், தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள். 



Friday, July 1, 2011

முஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா?

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?
பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு  என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்
முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள். அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும். இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார். அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.
அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
"(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 2:144)

LinkWithin

Related Posts with Thumbnails