பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்
முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள். அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும். இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார். அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.
அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
"(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 2:144)