Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Wednesday, January 21, 2015

ஹஜ் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள், ஜனவரி 19 முதல் விநியோகம்!


சென்னை: தமிழக அரசின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , ''2015 இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Friday, June 27, 2014

பொருள் ஈட்ட பயணம் செல்கின்றோம்..



ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை

இறை நேசம் கொண்டு புனித இடமாம் மக்காவுக்கு ,மதினாவுக்கு ஹஜ் அல்லது உம்ரா பல் முறை செய்யும் போது ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்றுசிலர் கேட்கிறார்கள் . அவர்கள் அதன் அருமையை அறிவதில்லை .இறைவன் வசதி தந்துள்ளான் அவர்கள் நன்மையை நாடி மற்றும் ஆத்ம திருப்திக்கு செல்கின்றார்கள் .அவர்களுக்கு இறைவன் அந்த பாக்கியத்தை தந்துள்ளான்
தனிப்பட்ட நல்ல காரியங்களை நல்ல மனதோடு பாருங்கள் .
இடாதவர் இடுபவரையும் கெடுக்கும் நிலை வேண்டாம்

போகிறவர்கள் அனைத்து நல்ல செயல்களும் இங்கு செய்யத்தான் செய்கின்றனர் (தர்மம் ,தொழுகை ஜகாத்து போன்ற நல்ல காரியங்கள் )

ஒரு முறையான ஹஜ் கடமையும் நிறைவேற்றி விடுகின்றனர் .

Wednesday, February 19, 2014

குர்ஆன் அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!

ஒரு முஸ்லிம்,

நோன்பிருப்பதன் அருமையை அறிவியல்ரீதியாக
அறிந்ததால் நோன்பிருப்பதில்லை,

தொழுகையால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய பலன்களுக்காக தொழுவதுமில்லை,

இன்னும் ஹஜ்ஜை,
அறுக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே உண்பதை,
ஒழு செய்வதை,
அமர்ந்து நீர் அருந்துவதை,
தாடி வைத்துக் கொள்வதை,
மதுவின் பக்கம் நெருங்காமலிருப்பதை,

Monday, September 30, 2013

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்!


சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின்  முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்    டுக்குள்ளோர்    நாடு - அங்கே
.......….அகிலமுஸ்     லிம்களின்  கூட்டுமா   நாடு
 மரபு  வழிகளில்  தேடல்  -புவி
........….மனித  நதிகளின்  சங்கமக் கூடல்

Wednesday, September 5, 2012

ஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்?


இஸ்லாம் மார்க்கத்தில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானவை.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடலும் மனமும் உறுதியும் தூய்மையும் ஆகின்றன.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது. சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது. அந்தத் தொழுகைக்குச் செல்லும்முன் பலரும் குளித்து விடுவார்கள். அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேர ஓசோனை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது. அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவின் பல நிலைகளைப் போன்றது. நெற்றி தரையில் தொடும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது. இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும். அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

Wednesday, March 21, 2012

புனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவிப்பு.

ஜெட்டா:--   நாகை மாவட்டம் மயிலாடுதுறை  மற்றும் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தோர் ஒரு குழுவாக, சவூதி அரேபியாவில் உள்ள   மக்காவிற்குப் புனிதப்  பயணம் மேற்கொண்டனர், மஹ்தியா ஹஜ் சர்வீஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை மக்காவிற்கு  அழைத்துச் சென்றது.

புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள்  இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட ,  தக்க துணையின்றிப்  பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத  நான்கு பெண்மணிகள்  திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு  முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர்  ஹைதர் அலி  ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த  ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத்  தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள்  இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.
Source : http://www.inneram.com/

Friday, October 7, 2011

ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறை விளக்கம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
வழங்குபவர்:
மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
வெளியீடு:
அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா)



ஹஜ் செயல்முறை விளக்கம் from islamkalvi on Vimeo.
Download video – Size: 199 MB
Download CD:
Download VCD Quality files Size: 625 MB
 Source : http://www.islamkalvi.com/portal/?p=701
 --------------------------------------------------------------------------------

Friday, July 1, 2011

முஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா?

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?
பதில்: இஸ்லாத்தின் அடிப்படையான தத்துவமாகிய ஏக இறை வழிபாடு  என்பதன் அடிப்படை கொள்கையும் நம்பிக்கையும், இறைவன் ஒருவனே; அவன் தேவைகள் அற்றவன்; அவன் பெறப்படவில்லை; யாரையும் பெறவுமில்லை, அன்றி அவனுக்கு நிகராக ஏதுமில்லை என்பதாகும்
முஸ்லிம்கள் என்பதற்கு ஏக இறைவனுக்கு முழுமையாகக் கட்டுபட்டவர்கள் என்று பொருள். அல்லாஹ்வை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டளையாகும். இதற்கு மாற்றமாக ஒருவர் செயல்பட்டால் அவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவதோடு இறைவனுக்கு இணைவைத்தல் எனும் மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை செய்தவராகிவிடுவார். அதற்காக அவர் மரணிக்கும் முன்னர் மன்னிப்பு கேட்டு மீளாமல் அதேநிலையில் மரணிக்க நேருமானால் மறுமையில் அவர் மாபெரும் நஷ்டம் அடைவார் என்று இஸ்லாம் கூறுகிறது.
அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
"(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 2:144)

Sunday, November 28, 2010

ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக  ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.
ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.
மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார்.

LinkWithin

Related Posts with Thumbnails