நோன்பிருப்பதன் அருமையை அறிவியல்ரீதியாக
அறிந்ததால் நோன்பிருப்பதில்லை,
தொழுகையால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய பலன்களுக்காக தொழுவதுமில்லை,
இன்னும் ஹஜ்ஜை,
அறுக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே உண்பதை,
ஒழு செய்வதை,
அமர்ந்து நீர் அருந்துவதை,
தாடி வைத்துக் கொள்வதை,
மதுவின் பக்கம் நெருங்காமலிருப்பதை,
இன்னும் இன்னும்
எல்லா நற்செயல்களையும்
அவன் செய்வது,
இறைவனுக்கு அடிபணிவதற்காகவும்
இறைத்தூதர் சொல்
அடிபிறழாமல் நடப்பதற்காகவும்தான்
அவற்றை அறிவியல் நிரூபிப்பது கண்டு
மகிழ்கிறானே அன்றி
அறிவியல் அவனுக்கு ஒரு பொருட்டல்ல
மேலும் குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல
அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!
-நிஷா மன்சூர்
1 comment:
நம்பிக்கை அடிப்படையில் மதங்களை /மார்க்கங்களை அணுகு வது அவரவர் விருப்பம் (அல்லாஹ்வோ ,கல்லோ,புல்லோ,புன்னாக்கோ )எதுவாகயிருந்தாலும் சரி அனால் அதன் மீது அறிவியல் முலாம் பூசி அனைவரையும் முட்டாளாக்காதீர்கள்
Post a Comment