Friday, February 7, 2014

இஸ்லாமியச் சட்டம் - நீடூர், A.M.ஸயீத்


இஸ்லாமியச் சட்டம்
 

நீடூர், A.M.ஸயீத்

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.' (2:229) உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், போன்ற பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு நாடுகளில் இது போன்ற பரவலாகக் காணமுடியாது. மதச்சார்பற்றக் கொள்கையை பாரதம் பின்பற்றி வருகிறது. மதங்களின் தனிப்பட்ட சட்ட திட்டங்களில் தலையிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே விடுதலை வாங்கித் தந்தவர்களின் கனவாக இருந்தது.
'தனியார் சட்டம்' (PERSONAL LAW)என்பது, அந்தந்த மதங்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஹிந்து மகவேற்புச் சட்டம் (THE HINDU ADAPTATION ACT) ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம் (THE HINDU SUCCESSION ACT) ஆகியன ஹிந்து சமயத்தாரை மட்டுமே கட்டுப்படுத்தும். இதே போல முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் முதலியன முஸ்லிம்களை மட்டுமே கட்டுப்படுத்தும். சமயச் சட்டங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தந்த சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, தத்துவம், முதலியவற்றை ஓரளாவது அறிந்து கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமலும் காழ்ப்புணர்ச்சியன் அழுத்தத்தில் அவதிப்படுவதன் காரணமாகத்தான், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.



தொடர்ந்து படிக்க கீழே  உள்ளதை சொடுக்கி (கிளிக் செய்து) படியுங்கள் 






இஸ்லாமியச் சட்டம் (1)
இஸ்லாமியச் சட்டம் (2)
இஸ்லாமியச் சட்டம் (3)
இஸ்லாமியச் சட்டம் (4)
 இஸ்லாமியச் சட்டம் (5)
 இஸ்லாமியச் சட்டம் (6)
 இஸ்லாமியச் சட்டம் (7)
இஸ்லாமியச் சட்டம் (8)
 இஸ்லாமியச் சட்டம் (9)
இஸ்லாமியச் சட்டம் (10) 
இஸ்லாமியச் சட்டம் (11)
 இஸ்லாமியச் சட்டம் (12)
 இஸ்லாமியச் சட்டம் (13)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails