ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை
இறை நேசம் கொண்டு புனித இடமாம் மக்காவுக்கு ,மதினாவுக்கு ஹஜ் அல்லது உம்ரா பல் முறை செய்யும் போது ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்றுசிலர் கேட்கிறார்கள் . அவர்கள் அதன் அருமையை அறிவதில்லை .இறைவன் வசதி தந்துள்ளான் அவர்கள் நன்மையை நாடி மற்றும் ஆத்ம திருப்திக்கு செல்கின்றார்கள் .அவர்களுக்கு இறைவன் அந்த பாக்கியத்தை தந்துள்ளான்
தனிப்பட்ட நல்ல காரியங்களை நல்ல மனதோடு பாருங்கள் .
இடாதவர் இடுபவரையும் கெடுக்கும் நிலை வேண்டாம்
போகிறவர்கள் அனைத்து நல்ல செயல்களும் இங்கு செய்யத்தான் செய்கின்றனர் (தர்மம் ,தொழுகை ஜகாத்து போன்ற நல்ல காரியங்கள் )
ஒரு முறையான ஹஜ் கடமையும் நிறைவேற்றி விடுகின்றனர் .
“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
---------------------------------------------
எனது அண்ணன் மர்ஹூம் வக்கீல் சயீது ஐந்து முறை ஹஜ் செய்தார் .
நான் இரண்டாயிரத்தில் ஒரே முறை ,ஆனால் அடுத்து செல்லவும் மிகவும் ஆசை
.---------------------------------------------------------
அந்த புனித தலத்திற்குச் செல்லும் வரை நானும் அப்படித்தான் சொலிக்கொண்டிருந்தேன்.
ஆனால் ஒருமுறை சென்று வந்த பிறகுதான் அதன் ஆத்மதிருப்தியும் அகத்தெளிவும் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகிறது
2014-ரமலான் உம்ராவுக்காக இன்ஷா அல்லாஹ் ஞாயிறன்று கிளம்புகிறேன்.நண்பர்கள் எமது ரமலான் உம்ராவை இறைவன் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....!!
-நிஷா மன்சூர்
( நிஷா மன்சூர் இந்த ஆண்டு ரமளானில் உம்ரா செல்கின்றார்கள் .அவர்களுக்கு நமது வாழ்த்துகள் .அவர் நமக்காக துவா செய்வார் அவருக்காக நாம் துவா செய்வோம் ,)
-----------------------------------
ஒரு குழந்தையை பிரிந்து பொருள் ஈட்ட செல்லும் தந்தை ,மனதில் ஏக்கமும், அழுகையும், சொல்லெனா துயரமும் ஒன்று கலந்த கலவையின் மன நிலையில் உள்ள தந்தையை போல் , தற்போது நான் உள்ளேன். மக்காவின் புனிதப் பள்ளிவாசல் எத்ரில் நான் வேலை செய்த ஹோட்டல் இருந்த்த தால் தினமும் காபாவை காணும் பாக்கியத்தை இறைவன் எனக்கு இரைண்டரை வருடம் தந்தான். அல்ஹம்துலில்லாஹ்..- Ashraf Ali Nidur
No comments:
Post a Comment