நானும் அக்கா அம்மா முனு பேரும் தான் நோன்பு வைப்போம் அத்தா வைக்க முடியாது உடல் நிலை காரணம் ....ராத்திரி 3.30 மணிக்கு தெரு தெருவாய் தப்ஸ் அடித்துக்கொண்டு பக்கீர்மார்கள் அந்த நேர நாய்களின் சப்தத்துக்கு மத்தியிலும் அத்தனை தெருவுக்கும் போயிட்டு வருவாங்க ...தூங்குவோரை எழுப்பிவிடுவதான் அவர்கள் சேவை ...அப்ப
அந்த நேரத்தில் நோன்பு வைக்காட்டியும் வேல செய்யமுடியாத சூழலில் குடும்பத்தில் சிரமமாயிருந்தாலும் ...அந்த நேரத்தில் அதாவது விடியகாலம் 3.30 மணியானாலும்
அந்த பக்கீர்மார்களுக்கு முழித்து தன்னாலான காசை கொடுப்பார் .....ஒருநாள் அக்கா கேட்டுச்சு...
ஏத்தா உனக்குத்தான் முடியலயே ...கஷ்டமாவேறயிருக்கே இந்த காச கொடுக்காட்டியென்ன னு ...........அத்தா சொன்னாக
பாவம் அவங்க மெனக்கட்டு இத்தன சிரமப்பட்டு நம்ம வாசல் தேடி வர்ராங்களே அதுக்காக நாம மதிப்பு கொடுக்கனும் நம்மளால நிறைய செய்ய முடியாட்டியும் நம்மலாலானத செய்யனும்னும்மா ..னு ...
அதே வழியாக நாங்கள் முடிந்ததை செய்து வருகிறோம் ...அந்த அத்தாவின் பிள்ளைகளாக இதுவரை.....
தர்மங்கள் தலை காக்கத்தான் செய்கிறது ......இது இந்த தந்தையர் தின நினைவு நாளில் .........11 வயதிலேயே என்னை
விட்டு பிரிந்த என் தந்தையார் நினைவாக...கனத்த மனதோடு.
No comments:
Post a Comment