Saturday, October 6, 2012

ஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிகரிப்பு நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

இஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்).

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது கட்டுரைக்கு வலு சேர்ப்பதாய் அமையுமென நம்புகின்றேன்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.


டாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா?

2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

அதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.

இந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை?

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் காரணங்களை ஒத்தே இருக்கின்றன.

தங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வு மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் பழங்குடியின சமூகத்திற்கும்,  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால்   முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.

இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா?

தொடர்ந்து படிக்க..http://www.ethirkkural.com/2012/10/60.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails