Sunday, October 21, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் நிந்தவூர் சிப்லி கவிதை ஒலிபரப்பு

வடிவும் வகிடும்

வானத்தில் மிதக்கும் வடிவு
...... வெண்மேகம் இழைத்த வகிடு
தானத்தில் சிறந்த வடிவு

.......தூயோன்சொல் விகித வகிடு

தென்னை மரத்தின் வடிவு
.......தென்றல் வருடும் வகிடு

கன்னம் கொடுக்கும் வடிவு
...... காந்தக் குழியின் வகிடு


கடலின் நீரில் வடிவு
.... கப்பல் கிழித்த வகிடு

உடலின் சேரும் வடிவு

.... உள்ளம் விரித்த வகிடு



புன்னகைப் பூக்கும் வடிவு

....பூவிதழ் விரித்த வகிடு

எண்ணமும் காட்டும் வடிவு

...எம்முணர் வுகளின் வகிடு

வயற்கள் தோறும் வடிவு
.... வரப்புக் கட்டிய வகிடு

செயற்கள் தோறும் வடிவு

....செயலின் திட்டமே வகிடு


ஊரின் பரப்பில் வடிவு

....ஊரும் தெருவின் வகிடு

வேரின் உறுதி வடிவு

....வேறாய்ப் பரவும் வகிடு

வலிமைக் கட்டிட வடிவு

.....வரைபடம் எழுதிய வகிடு

பொழியும் சந்திரன் வடிவு
....பிறையெனப் பிளந்திடும் வகிடு

இலைகளின் ரேகை வடிவு

....இறைவன் தீட்டிய வகிடு

மலைகளின் பாக வடிவு

... .மனங்கவர் நீர்வழி வகிடு

ஏறும் எறும்பின் வடிவு

..ஏற்றப் பணியின் வகிடு

ஆறு சிறக்கும் வடிவு
.. ஆங்கு அணைகள் வகிடு

தேசிய கொடியின் வடிவு

......தியாக வண்ண வகிடு

தேசிய தலைமை வடிவு
..... தெளிவாய்ப் பண்ணும் வகிடு

குடும்பத்தின் உறவுகள் வடிவு
.. குலையாத உறுப்பினர் வகிடு
மிடுக்கான உடையினில் வடிவு
.....மெலிதான மடிப்பினில் வகிடு

முகத்தின் தோற்ற வடிவு

.... முகத்தின் மூக்கே வகிடு
முதுகின் தோற்ற வடிவு
... .. முதுகின் தண்டின் வகிடு


வெண்பா யாப்பின் வடிவு

......வெண்டளைக் காய்சீர் வகிடு

பெண்பால் சீப்பின் வடிவு

.....பெண்டலை நேர்சீர் வகிடு


செல்வம் பெற்றதன் வடிவு
...செய்யும் செலவின் வகிடு
கல்வி கற்றதன் வடிவு
... கற்றல் முறையின் வகிடு தகவல் தந்தவர் அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails