தமிழ் பேசும் நல்லுலகில் இஸ்லாத்தின் தூய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு தனது வாழ்நாளையே அர்பணித்த சகோதரர் பீ.ஜே அவர்கள் தற்போது புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்திக்கும் இவ்வேலையில் சகோதரர் பீ.ஜே யைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் விதமாகவும், தெரிந்தவர்கள் இன்னும் சில தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்தக் ஆக்கத்தை வெளியிடுகின்றேன்.
இந்தியா, இலங்கை என்று தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஏகத்துவக் கருத்துக்கள் சென்றடைவதற்கு இறைவன் சகோதரர் பீ.ஜே அவர்களை காரணமாக்கினான் என்றால் அது மிகையாகாது.
குர்ஆன், சுன்னாவை வாயலவில் பேசிவிட்டு தனது வாழ்வில் அதன் வாசைன கூட இல்லாமல் இருக்கும் பிரச்சாரகர்களுக்கு மத்தியில் சொன்னதை தனது வாழ்வில் தன்னால் முடிந்த வரை பின்பற்றி நடக்கும் ஒரு சிறப்பான இஸ்லாமியப் பிரச்சாரகராக சகோதரர் பீ.ஜே அவர்களை நாம் கண் முன்னால் காணக் கிடைக்கிறது. அல்லாஹ் அவருடைய நோயை குணப்படுத்தி அவரின் பேச்சாற்றல் மூலமும், எழுத்தாற்றல் மூலமும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல நன்மைகளை வழங்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திப்போமாக!
இப்படி எழுதப்படுவதையும் தக்லீத் – தனிமனித வழிபாடு என்று யாராவது நினைத்தால், அவர்கள் தக்லீத் ஓர் ஆய்வு என்ற பெயரில் நான் எழுதிய புத்தகத்தைப் படிக்கும் படி வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவன் : RASMIN M.I.Sc
யார் இந்த பீ.ஜே?
பீ.ஜே என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல்,எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.
1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
யார் இந்த பீ.ஜே?தொடர்ந்து படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
No comments:
Post a Comment