Tuesday, October 23, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 2)

 “ பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 2


சலாம் சகோதரர்களே !
முன்னுரை :
“ பயணங்கள் அனுபவம் – “ சீனா “ இக்கட்டுரையை எழுதக்காரணம், புதிதாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நமது சகோதரர்களுக்கு விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் செல்லக்கூடிய அந்தந்த நாடுகளில் ஏற்படும் பல இன்னல்கள் மற்றும் அவர்களின் பய உணர்வுகள் இவைகளைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக வேண்டி, இப்பதிவுகள் தொடர்ச்சியாகப் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

குறிப்பாக இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் ஆங்கில மொழி பேசும் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தொழில் சம்பந்தமாக ஏராளமான தகவல்கள் இக்கட்டுரைகளில் இடம் பெற இருப்பதால், புதிய தொழில் தொடங்க முனைவோர், இப்பதிவுகளை தொடர்ச்சியாகப் வாசித்துப் பயனடைமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இக்கட்டுரை பதிவிற்காக நேரிலும், தொலைப்பேசியிலும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் ஊக்கப்படுத்திய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய நண்பர்கள், சகோதரர்கள் என அனைவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பயணங்கள் அனுபவம் – “ சீனா “ – பகுதி ஒன்றைப் பார்த்தோம்.
http://nijampage.blogspot.in/2012/01/blog-post_15.html


அதன் தொடர்ச்சியாகப் பகுதி இரண்டு........


தற்சமயம் தங்களது சீன நண்பர்களைக் காண நேர்ந்தால், “கொங் சீ ப சாய்” ( சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து ) என்று சொல்லலாம். அல்லது “வன் சீ ரூ யீ” ( நல்லதே நடக்கட்டும் ) என்றும் சொல்லலாம். சீனர்கள் புத்தாண்டு விழாவை கொண்டாடிவரும் இவ்வேளையில், மேலே சொன்ன இரண்டு வார்த்தைகள் அதிகளவில் அவர்களிடேயே உச்சரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர்களை அதாவது எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி என்று சூட்டப்பட்டு, அதன்படி இவ்வாண்டை “ டிராகன் ” ( Dragon ) ஆண்டு என கணக்கிடுகிறார்கள்.


சீனப்புத்தாண்டின் சிறப்பம்சம் என்னவெனில், மதச்சார்பற்ற அனைத்து சீனர்களும் ஒன்றாக கொண்டாடுவதுதான்.


“ குவாங்சோ “ ( Guangzhou ) ஏர்போர்ட்டிலிருந்து நானும் எனது சீன நண்பன் “ஜேம்ஸ்” ம் காரில் ஏறிப் புறப்பட்டோம். அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் “ குவாங்சோ “ நகருக்குள் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் வரைச் செல்லும்.அங்கிருந்து “ CALL TAXI “ களிலும் நகருக்குள் செல்லலாம்.
மேலும் அந்நகரின் சார்பாக முக்கியமான இடங்களுக்கு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை என செல்லக்கூடிய “ AIRPORT EXPRESS BUS “ வசதியும் உள்ளது. இவ்வாகனம் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணம் செய்யக் கூடியவையாக கருதப்படுகிறது.


மக்கள் தொகையில் முதன்மையான தேசம் மட்டுமல்ல, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தனை பொருட்களையும் உற்பத்தி செய்து குவிக்கும் தொழில் தேசம் சீனா என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நகரின் உள்கட்டமைப்புகள், சாலைகளின் அழகிய செடிகளுடன் கூடிய அலங்கரிப்புகள், வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வானுயர மேம்பாலங்கள், பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம் என சிறந்து விளங்குகிறது. குறிப்பாக “ வாயும் வயிறுமாக ” உள்ள நம்மூர் அரசியல்வாதிகள், பணிகளில் ” மாமுலான ” அதிகாரிகள், “ ஊக்கம் கொடுத்து ” பணிகள் எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் போன்றவர்கள் தங்களின் வாழ்வில் ஒரு முறையேனும் வந்து பார்த்து உணர்ந்து கொள்ளக்கூடிய பகுதியாக விளங்குகிறது.

என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.


இறைவன் நாடினால் ! “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................
Source : http://nijampage.blogspot.in/2012/02/2.html

சீனா பயண அனுபவம்!

2 comments:

Anonymous said...

Please write about chinese agriculture particularly rice growing @ rice processing industry,rice by products industry, milk and essantial quality products production industries. sridhar_kva@dataone.in

சேக்கனா M. நிஜாம் said...

மிக்க நன்றி

இறைவன் நாடினால் ! தொடரட்டும்...

LinkWithin

Related Posts with Thumbnails