“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்" (நபிமொழி)
“கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேபியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்." (நபிமொழி)
எந்த இனமும் மற்றொரு இனத்தை விட மேன்மையானது கிடையாது. நாம் ஒரு
தோட்டத்தில் உள்ள பல்வேறு மலர்கள். நாம் பார்க்கும் போது ஒவ்வொரு
தோட்டமும் ஒவ்வொரு மலரும் ஒரு பங்களிக்கிறது என்று நாம் உணர வேண்டும் .
ஒவ்வொரு பூவும் அதற்கான அழகிய நிறமும் மற்றும் நறுமணமும் பெற்றிருக்கலாம்
என்பதை யாரும் மறுக்க முடியாது . ஆனால் அதற்கே உள்ள உயர்வான சிறப்புகளை
நாம் அறிந்துக் கொள்வது கடினம் . அனைத்து மலர்க்களும் செடிகளும் ஏதாவது
ஒரு வகையில் மக்களுக்கு பயன்தரக் கூடியதாகவே இறைவனால் படைக்கப் பட்டுள்ளன
. இதே வழியில் நாம் பல வண்ணங்களில் இறைவனால் படைக்கப்பட்டு அலங்கரிக்கப்
பட்டோம். உலக தோட்டத்தில் நாம் பல வண்ணங்களில் படைக்கப்பட்ட அழகிய
மலர்களாகவே உள்ளோம் என்பதனை உணர்ந்தால் மக்களுக்குள் உயர்வு தாழ்வில்லை .
"சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி
உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்."
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;
நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்
கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும்
பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக
மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து)
தெரிந்தவன்.(குர்ஆன் 49:13) "நடத்தை சிறந்த உள்ளது.
பிறப்பால்,நிறத்தால் ,இனத்தால் உயர்வு தாழ்வில்லை. கருப்பரைவிட வெள்ளையர்
உயர்ந்தவரில்லை வெள்ளையரைவிட கறுப்பர் உயர்தவரில்லை .
அராபியரும்,அமெரிக்கரும் மற்ற எந்த நாட்டினரும் ஒருவருக்கு ஒருவர்
உயர்ந்தவர் தாழந்தவரில்லை. உயர்குடிப்பிறப்பு என்பது மற்றவர்களை ஏமாற்றி
பிழைப்புக்காக உருவாக்கப்பட்டது . இதனை உடைத்தாக வேண்டும். ஒருவரின்
நடத்தை,செயல்பாடு மற்றும் சேவைகளால் ஒரு மனிதர் உயர்வாக கருதப்படுவதும்
மதிக்கப்படுவதும் இயல்பு.இது வரவேர்க்கப்படவேண்டியது .இது மனிதனுக்கு ஒரு
உந்துசக்தியாக அமையும். "கருப்பு மசூதி" அல்லது "வெள்ளை மசூதி" அல்லது
கருப்பு கோவில் அல்லது வெள்ளை கோவில் என்று பெயர் சொல்லப்படுவதால் அங்கு
சென்று வணங்குவதில் அல்லது தொழுவதில் மாற்றம் உண்டாகப் போவதுமில்லை.
வணக்கத்திற்கு, தொழுவதற்கு ஏற்புடைய இறைவன் ஒருவனாகத்தான் இருக்க
முடியும். நீங்களாகவே பல இறைவனை உண்டாக்க முடியாது. அந்த இறைவன் எங்கும்
நிறைந்தவன் அனைவருக்கும் பொதுவானவன். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
நாமெல்லாம் ஒரே குலம்,ஒரே இனம் மற்றும் நாம் தொழுவதும் ஒரே இறைவன். இதுதான்
உண்மை மற்றும் இதுதான் நம்மை மேன்படுத்தும். மனிதனை மனிதன் வணங்கும்
குணத்தை விட்டொழிப்போம். ஓர் இறைவனைத் தவிர மற்ற யாருக்கும் அடிபணிய
மாட்டோம். இறைவன் பார்வையில் கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற
வேறுபாடில்லை. அந்த ஓர் இறைவன் முன் அனைவரும் சமம்.
"மனிதன் உரிமையோடு பிறக்கின்றான் ஆனால் அவன் பிரிவு என்ற சங்கிலியால் கட்டப் பட்டுள்ளான்"
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும்
படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும்
(வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து
கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய
உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய
உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது
கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(குர் 'ஆன் 49:13).
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு
சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள்
மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.
(குர் 'ஆன் 49:10).
முஃமின்களே! ஒரு சமூகத்தார்
பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில்
(பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே)
எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) -
ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில்
ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்)
ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின்
(அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள்
(இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.(குர் 'ஆன் 49:11).
“எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும் அவர்களைத் தலைவர்களாக்கவும் அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடி இருந்தோம்.”(குர்ஆன் 26 : 5)
“முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்றும் கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.” வரலாற்றாசிரியர் ஆர்னால்டு டாயின்பீ
“இன,சாதி அமைப்பை எந்த முஸ்லிம் நாடும் வளர்க்கவில்லை.” பிரிட்டிஷ் கலைக்களஞ்சியம்
No comments:
Post a Comment