Thursday, May 10, 2012

திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளாருக்கு ஐ.நா.வில் ஆலோசகர் பதவி

திமுகவின் இளைஞரணி மாநில துணைச் செயலாளரக  பதவி வகிப்பவர் அசன் முகமது ஜின்னா.  இவர் சட்டப்படிப்பில் முதுகலைப் படிப்பை முடித்து வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது செயல்பாட்டை பாராட்டி அமெரிக்க கவுன்சில் இவருக்கு 2004-ம் வருடம்  'இளம் அரசியல் தலைவர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது.  இப்போது ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவரது நியமனம் குறித்து யுனெஸ்கோ அமைப்பு தங்களது இணையதளத்தில் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், "நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்" என்று தெரிவித்துள்ளது.

அசன் முகமது ஜின்னா  தான்  மாணவி சரிகாஷா ஈவ்டீசிங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails