Saturday, May 5, 2012

இந்த உலகின் அறிஞர்களா அல்லது மறுமையிலா?

                 இந்த உலகின் அறிஞர்களா அல்லது மறுமையிலா?

இன்றைய உலகம் முழுவதும் கல்வி அறிவின் இடத்தில் அறியாமை இடம் பெற்றுள்ளது, மேலும் அது மற்ற எல்லோரையும் விட முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக உள்ளது . நாம் ஒரு சமுதாயம் என்ற வகையில் கல்வி அறிவு என்றால் என்ன என்பதில் குழப்பத்தில் இருக்கின்றோம். நமக்கு நீண்ட தாடியுடன் கணுக்கால்களுக்கு மேல் ஆடை அணிந்து, இறை இல்லத்தில் அதிக நேரத்தை செலவழிக்கும் மனிதரையோ அல்லது இஸ்லாமிய ஆடையால் தன்னை முழுவதுமாக மறைத்தும் தன் கணவணையும் குழந்தைகளையும் கவனிக்கும் பெண்ணையோ ஆகிய இருவரையும் கண்டால் பிந்தங்கியவராகவும் ஜாஹில் (அறியாமையாகவும்) ஆகவும் தோன்றுகிறது. மறுபுறம், கற்றறிந்தவர் என்பவர் ’கடந்துவிட்டார் (PASSED)' என்ற வார்த்தை எழுதப்பட்ட ஒரு துண்டு காகிதத்தை எவர் தங்கள் வசம் வைத்திருக்கின்றார்களோ அவர்கள் தான்.

இவ்வாறாகத்தான் நாம் குழப்பத்திற்கு மட்டும் உள் ஆகவில்லை, ஆனால் மேலும் முஸ்லிம் அல்லாதவர்களால் அறிவிழக்கப்பட்டும் உள்ளோம் ஏன் என்றால் கல்வி அறிவு பற்றியதான கருத்து இதுவாக இருக்கின்றது. எவ்வாறாயினும் நாம் நம்மை கேட்டு கொள்வது என்னவென்றால், இத்தகு சிறந்த நவீன தொழில்நுட்பமும் பரந்த அறிவியல் மற்றும் லௌகீக அறிவும் கொண்ட இன்றைய உலகில் ஏன் இன்னும் ஊழல், அடக்குமுறை மற்றும் அநியாயம் நிறைந்து காணப்படுகின்றது.


இதில் கவலைக்குறியது என்னவென்றால் இது வேறு எங்கும் விட அதிகமாக முஸ்லிம்களின் நிலங்களில் காணப்படுவது தான்: மேன்மை மிக்க அல்லாஹ் தனது இறைமறையில் இயம்பி உள்ளான்:

“அவர்கள் இந்த உலக வாழ்வில் இருந்து (அதன்) வெளித் தோற்றத்தையே அறிகிறார்கள், ஆனால் அவர்கள் மறுமையை பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். [சூறா அல்-ரூம் (30): 7]

இப்னு கஸீர் (ரஹ்) தங்களது தஃப்ஸீரில் இவ்வசனத்தை பற்றி கூறுகையில்: அல்-ஹஸன் அல்-பஸ்றி (ரஹ்) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்களில் ஒருவர் இந்த உலகை எந்த அளவிற்க்கு அறிந்து இருப்பார்கள் என்றால் அவர் ஒரு நாணையத்தை எடுத்து கொண்டு உங்களிடம் கூறுவார் இதன் கனத்தை பொருத்து அதன் மதிப்பு ஆனால் அவருக்கு எவ்வாறு தொழுகை நிறைவேற்றுவது என்று தெரியாது”.

இறை தூதர் ஸல்லலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இத்தகு நிலை பாட்டில் அல்லாஹ்வின் கோபத்தை பற்றி கூறுகையில்:”இரவில் பிணமாகவும் பகலில் கழுதையாகவும், இந்த உலகை பற்றிய அறிவுடனும் மறுமை பற்றி அறியாமையிலும் இருந்து கடுகடுப்பு, திமிர் பேராசை, சுயநலம் கொண்டு சந்தையில் சப்தம் எழுப்பி சண்டை போடும் மனிதர்கள் எல்லோரையும் நிச்சயமாக அல்லாஹ் வெறுக்கின்றான்”இவை அனைத்தும் இன்று நம்மிடையே எந்த அளவிற்க்கு பொருந்துகிறது? நாம் விஞ்ஞானிகளின் வேறுபட்ட தத்துவங்களை அறிந்திருக்கலாம், நாம் மனித உடலின் முழுமையான வேலைபாட்டை, பல நாடுகளின் பொருளாதார கொள்கையின் அகத்தையும் புறத்தையும், கடந்தகால மற்றும் நிகழ்கால மக்களின் வரலாற்றை பற்றியும்: மேலும் திரைபட நடிகர்கள், பாப் பாடகர்கள், விளையாட்டு வீரர்கள், மகாராஜா மற்றும் மகாராணி ஆகிய இவை அனைத்தையும் பற்றி கூட அறிந்திருக்கலாம், ஆனால் நாம் எவ்வாறு முறைபடி தொழுகை நிறைவேற்ற வேண்டும் என்று தெரியவில்லை?

நான் இதில் உள்ள பலவற்றை பற்றிய அறிவு தேவை இல்லை என்றோ அல்லது முக்கியம் இல்லை என்றோ கூறவில்லை, அதை ஒப்பிடுகையில் தீனை பற்றிய அறிவு எந்த அளவிற்க்கு உண்மையாக இருக்கிறது? என்பதற்க்காகவும் மேலும் நாம் இந்த உலகை பற்றிய அறிவை அடையும் முயற்ச்சிகளை போன்றே இதற்க்கும் செய்கின்றோமா? என்பதற்க்காகவும் தான். இது உண்மையான அறிவு அன்று.

இமாம் அல்-அவ்ஸாஈ (அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக), இதை பற்றி கூறுகையில் “கல்வி அறிவு என்பது இறைதூதர் ஸல்லலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தோழர்கள் அறிவித்ததுதான், ஆகையால் அது அல்லாத வேறு எதுவும் கல்வி அறிவு கிடையாது” என்று தெளிவுபடுத்தி உள்ளார்கள். எனவே ஸஹாபா (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன்) அவர்கள் மார்க்கத்தை புரிந்து நடைமுறைபடுத்தியது, அவர்கள் கற்றுக்கொடுத்தது அறிவித்து சென்றது ஆகிய இவைகள் தான் உண்மையான அறிவு.

இதன் பொருள் ஸஹாபாக்கள் (அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக) உலக விவகாரங்களில் அறியாதவராக இருந்தார்கள் என்று இல்லை, மாறாக தீனை பற்றிய அறிவு தான் முக்கியதுவம் பெறும் என்பது ஆகும். ஏன் என்றால் இது மறுமை தீர்ப்பு நாளில் எதேனும் பலன் தரக்கூடியதாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.

அன்புள்ள வாசகர்களே, நாம் இந்த உலகின் அறிஞராக இருக்க வேண்டுமா அல்லது மறுமையிலா என்று முடிவு எடுப்பது நம்மை பொறுத்தது. இதற்க்கு அப்பால் அலீ ரலியல்லாஹு அன்ஹு விளக்கியது போன்று ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது

“மக்கள் மூன்று வகையினர்: ‘ஆலிம், றப்பானி, இரட்சிப்பின் பாதைக்காக கற்க்கும் ஒருவர், மற்றும் யார் அழைப்பு விடுத்தாலும் பின்பற்றும் – எல்லா காற்றிர்க்கும் ஏற்றவாறு வழையும் - குழப்மான கும்பல் – அவர்கள் கல்வி அறிவின் ஒளியில் பயன்பெறவும் இல்லை, வலிமையான அதரவின் துணையுடன் கற்க்கவும் இல்லை”

 Source: www.uh.edu/campus/msa/
Source : http://islamiyapaathai.blogspot.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails