Saturday, May 19, 2012

வயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண்டும்

 வயதாகிவிட்டது அதனால் நினைவுகள் குறைகின்றன ஆனால் ஒரு காலமும் தாய் தந்தை நமக்கு செய்த சேவைகள் மறப்பதில்லை.
தனியே தொழும்போது சரியாக முறையாக தொழுகின்றோமா  என்ற குழப்பம் வருவதுண்டு. கவலை வேண்டாம். உங்கள் மனதைத்தான் இறைவன் பார்க்கின்றான்.நீங்கள் மனப் பூர்வமாக இறைவனை மனதில் நினைத்து தொழுகின்றீர்கள்.அதனால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என முழுமையாக நம்புங்கள்.
முடிந்தவரை பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் தொழும்போது  இந்த குழப்பம் வருவதற்கு   வாய்ப்பு கிடையாது. தொழுகையில் தொழ வைக்கும் இமாம் தவறு செய்து விட்டால் அந்த தவறு  உங்களுக்கு வந்து சேராது.

  வயதாகிவிட்டால் தேவையில்லாமல் பேசுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையை கேளுங்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுங்கள் .ஒத்திப்போடாதீர்கள். வயதாகி விட்டார் உளறுகின்றார் என்று மற்றவர் சொல்வதற்கு வழி வகுத்து வந்துவிடாதீர்கள். நாம் அடைந்த அனுபவத்தினையும் பெற்ற அறிவுகளையும் தம் மக்களுக்கு சொல்ல விருப்பம் வரத்தான் செய்யும்,ஆனால் இக்கால மக்கள் நம்மை விட மிக்க அறிவு பெற்றவர்களாகவே உள்ளார்கள். அவர்களுக்கு அறிவுரை ஒரு வேப்பு போல் கசப்பாகவே இருக்கின்றது. வேப்பு கசப்பானாலும் அது உடலுக்கு நலன்தரக் கூடியதுதான். அதிலும் அளவு தேவை அளவுக்கு மேல் போனால் நன்மைதராது பாதகம் விளைவிக்கும்.

 வேடிகையாக வயதானவர்கள் உளறுவார்கள் என்பதற்கு சொல்லும் பண மோகம் கொண்ட மகன்கள் கட்டிவிடும் கதை
ஒரு நேர்மையான தகப்பன் மரண தருவாயில் தன் மகன்களை அழைத்து தான் மற்றவர்களிடம் கொடுத்து அவை  தனக்கு வர வேண்டியவைகள் அதனை குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.  உடனே அவரது மகன்கள் வேகமாக அதனை குறித்துக் கொண்டார்கள். பின்பு அந்த தகப்பன் தான் கொடுக்கவேண்டிய கடன்களைப் பற்றி சொல்லி அதனை குறித்துக் கொண்டு கொடுத்துவிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரது மகன்கள் 'அப்பாவுக்கு கோமா வந்து விட்டது உளறுகின்றார்' என்று சொல்லிக்கொண்டு  கொடுக்க வேண்டியதை மட்டும் குறிப்பு எடுக்காமல் நிறுத்திக் கொண்டனர்.




 அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்(குர்ஆன் -2:215.)

“அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான் (இஸ்ரா: 23).

 நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.

நூல்: திர்மிதீ

         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி)

நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails