'தாவா' என்றால் அழைத்தல் அல்லது
பகிர்ந்து கொள்ளுதல் என பொருள்படும். நன்மை ஏவி, தீமை தடுப்பது இரண்டு
பாலருக்கும் கடமையாகும்.இது மனித நேயத்தின் அடிபடையில் அமைந்த
செயல்.ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய கடமை. மனிதன் தவறு செய்பவன் ஆனால்
அந்த தவறுகளும் அதனால் விளையும் குற்றங்களும் நடைபெறுவதனை பார்த்தும்
பாராமுகமாக இருந்தால் மனித சமுதாயமே சீர்கெட்டுவிடும். நல்லதை ஊக்குவிப்பதும் கெட்டதை முடிந்தவரை தடுத்து நிறுத்துவதும் நமது கடமை.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
”கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:100)
மனிதன்
பிறக்கும்போதே கெட்டவனாக பிறப்பதில்லை . சூழ்நிலையும் வளர்ப்பு முறையும்
அவனை தவறான செயல்களில் ஈடுபட வைத்துவிடுகின்றது.
(லுக்மான் தன் மகனிடம்..) என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். (அல்குர்ஆன் 31:17)
நாம் மட்டும் நல்லவனாக
இருந்தால் போதுமா? நம் சகோதரர்களும் (அனைவரும் நமது சகோதரர்கள்தான்) நல்ல
பண்பாளர்களாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நாமும் அவர்களைப்போல் மாறும்
நிலைமை ஏற்பட்டுவிடலாம். அதற்கு முன் நாம் முந்திக்கொண்டு அனைவரையும்
நல்லவற்றின் பக்கம் அழைப்பதே இந்த 'தாவா' அல்லது 'தப்லீகின்' பணியாகும்.
ஒரு சிலர் தவறாக நினைக்கின்றனர் இஸ்லாம் மார்கத்திற்கு மாற்றும் செயலாகவே
இது இருக்கின்றது என்று.
(நபியே!) நீர்
நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால்
முடியாது ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் -
மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.(அல் கசாஸ் 28 :56)
மனிதனை நல்வழிப்படுத்துவது
அணைத்து மக்களின் கடமை . மது அருந்துவனை அல்லது மாதின் பக்கம் தவறான
வழியில் செல்பவனை பாராமுகமாக விட்டுவிட்டால் அவன் நிலை இன்னும் மோசமாகும்
அது மட்டுமல்லாமல் அவன் மனித சமுதாயத்திற்கு ஒரு தவறான பாதையை காட்டும்
வழிகாட்டியாகி விடுவான். மனிதனை நேசிக்க வேண்டும் அவனது கெட்ட செயலுக்காக
அவனை ஒதுக்கக் கூடாது, அவனையும் நல்வழிப்படுத்த வேண்டும்.. இதுதான் உயர்ந்த
சேவை அதன் மறு பெயர் தான் நல்லது பக்கம் அழைத்தல் அதுவே 'தாவா' அல்லது
தப்லீக் பணி
ரசூலுல்லாஹ்வின் உம்மத் ஆண், பெண் இரு பாலரும் தாவத் பணியில்
அர்ப்பணிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தாவத்பணியை அவசியம் உணரவேண்டும்.
சிலர் குறைவாகவும் இன்னும் சிலர் அதிகமாகவும் தாவத் பணி செய்கின்றனர்.
தாவத் இல்லாமல் வாழ்க்கை கழியக் கூடாது. வாழ்க்கையின் நோக்கம் தாவத்..நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம் நம்பிக்கையோடு மக்கள் நல் மாற்றத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய
உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான
முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத்
தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு
அறிவான்.
(அன் -நஹல் 16:125)
1 comment:
பயனுள்ள தகவல்,பயனுள்ள தளம் ...தொடர வாழ்த்துக்கள்
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?
14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.
அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
Post a Comment