Showing posts with label ஊர். Show all posts
Showing posts with label ஊர். Show all posts
Friday, March 13, 2015
இஸ்லாமிய வரலாற்றில் நெல்லை மாவட்டத்திற்கு மிக சிறப்பான இடம் உண்டு.
இஸ்லாமிய வரலாற்றில்
நெல்லை மாவட்டத்திற்கு மிக சிறப்பான இடம் உண்டு.
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டத்தில் ஏராளமான முஸ்லிம் ஊர்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான முஸ்லிம்களும் வாழுகின்றார்கள்.
மேலப்பாளையம்
காயல்பட்டினம்
தென்காசி
கடையநல்லூர்
செங்கோட்டை
போன்ற ஊர்கள் முக்கியமானவை.
பல நூற்றுக்கணக்கான ஜமாத்துகள் மாவட்டம் முழுவதும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் நடத்தும் மதரசாக்கள்
கல்விக்கூடங்கள்
கல்லூரிகள்
மருத்துவமனைகள்
தொழிற்கூடங்கள்
இங்கே உண்டு .
Tuesday, October 14, 2014
சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை
சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டைக்கு சிறு வயதில் சென்று வந்தது மனதில் பசுமையாக உள்ளது .
திரும்பவும் கடந்த ஞாயிறு அன்று எனது பேரன் சமீர் அலியோடு போய் வந்தது மனதில் பெரு மகிழ்வை தருகின்றது .
லால்பேட்டை மக்கள் மிகவும் ஒற்றுமையாக தங்கள் ஊரின் முன்னேற்றதிற்கு பெரும் பங்காற்றுகின்றனர்.
லால்பேட்டையை சுற்றி பார்ப்பதில் நண்பர் அஹ்மது ரிலா அவர்கள் மிகவும் உதவினார்கள் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுதது மனதிற்கு அமைதியை தந்தது .
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியை பார்த்த பின்பு எனக்கு மிகவும் வேண்டிய தமிழ் மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துற்றஹ்மான் ஹஜ்ரத் அவர்களை லால்பேட்டை அவர்களது வீட்டில் சந்தித்தேன்.
ஹஜ்ரத் அவர்களுடன் சிறு வயதிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு .அவர்கள் நீடூர் ஜாமியா அரபிக் கல்லூரியில் ஓதியவர்கள் .
அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அன்புடன் 'ஜின்னா' என்று என் பெயரை அழைத்து கட்டி அணைத்து தனது அன்பைக் காட்டினார்கள் .
லால்பேட்டை அரபிக் கல்லூரியில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி
அதன் பின்பு லால்பேட்டை ஊரை முழுமையாக பார்த்து வீராணம் ஏரியையும் பார்த்து வந்தோம்
லால்பேட்டை வீராணம் ஏரி அருகில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி
— with Ahamed Rila.
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் கூடத்தில் Mohamed Ali
— with Ahamed Rila.
அஹ்மத் ரிலா இல்லத்தில்
Ahamed Rila Mohamed Ali மற்றும் அஹ்மத் ரிலாவின் தந்தை ஹஜ்ரத், நூருல்லாஹ் அவர்கள்
***********************************************************************

Labels:
அரபிக் கல்லூரி,
ஊர்,
லால்பேட்டை,
வீராணம் ஏரி,
ஜாமியா மன்பவுல் அன்வார்
Thursday, September 18, 2014
ஜிஞ்ஜா
ஜிஞ்ஜா
ஜிஞ்ஜா என்றால் 'கல் அல்லது பாறாங்கல்' என்று லுகாண்டா மொழியில் பொருள்படும்.
உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவிலிருந்து கிழக்கே 80km துலைவில் அமைந்துள்ளது.
இது உகாண்டாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். தொழிற்சாலைகள் நிறைந்த நகராகவும் இருக்கிறது.
வற்றாத நதியும் உலகத்திலேயே இரண்டாவது பெரிய நல்ல தண்ணீர் நதியுமான ஜீவநதி நைல்நதியின் தொடக்கமிடமுமாகும்.
இது தொடங்கி பாயும்
இடத்தில் வரும் முதல் நீர்வீழ்ச்சி வோவவ்ன்ஸ ் பால்ஸ் என்று அழைக்கப் படுகிறது அதில் உகாண்டாவிலேயே பெரிய நீர் மின்திட்டம் செயல்பட்டு வருகிறது.
நைல்நதி ஜிஞ்ஜா ்விலிருந்து தொடங்கி சூடான் நாட்டின் வழியாக பல ஆயிரம் மைல்கள் ஓடிச்சென்று எகிப்து நாட்டில் கடலில் கலக்கிறது.

STEPHEN KIPROTICH,
ஊர்,
எகிப்து,
கம்பாலா,
சூடான்,
நாடு,
லுகாண்டா மொழி,
ஸ்டீவன் கிப்ரோடிச்
Monday, November 26, 2012
அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!
அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!
எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிர
ாமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள்
'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.
இவற்றில் 2 வது பெரிய பிராந்தியமான காரைக்கால், அந்த மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.
காரைக்கால் பீச்சில் குழந்தைகள் விளையாட பலவித விளையாட்டுகளோடு கூடிய 'பார்க்'கும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் இதமாக வருடிக் கொடுக்கும் கடல் காற்றை குழந்தைகளின் விளையாட்டுகளோடு ரசித்தபடி சுவாசிக்க, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் கடல் இல்லாத பக்கத்து ஊர் மக்களும் 'காரைக்கால் கடற்கரை'க்கு விரும்பி வந்த வண்ணம் இருப்பார்கள்
Monday, May 21, 2012
நீடூர் நெய்வாசல் - புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முதற்கட்டமாக வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
முதற்கட்டமாக வெளியாகியுள்ள பனிரெண்டு நபர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள்!
நீடூர் நெய்வாசல் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வக்பு வாரியம் தயாராகிவிட்ட நிலையில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களும் தயாராகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் வருகிற ஜூன் 16 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற நமதூர் நிர்வாகத்தேர்தலுக்காக ஒரு தரப்பார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பனிரெண்டு நபர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள் தங்கள் பார்வைக்கு.

Saturday, November 6, 2010
மயிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை
''நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்
"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்காவில் உள்ள ஒரு அமைதியான கிராமம்தான் வடகரை அறங்கக்குடி . அல்லாஹவின் கிருபையால் இந்த வருடம் (2010) 20 பள்ளி மாணவர்களுக்கும் 2 கல்லூரி மாணவர்களுக்கும் உதவி செய்துள்ளார்கள் . எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தொன்மைமிக்க இந்த ஊரில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும், கூட்டமைப்பை கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயல்படுவார்கள். நம்மூரைப்போல் இன்னோர் ஊர் ஆகுமா என்று திருப்தி அடைவார்கள் இந்த ஊர் மக்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர் .சிங்கப்பூரில் அதிகமாக உள்ளனர் .

Sunday, October 17, 2010
நம்மூரில் காணாமல் போன பழக்க,வழக்கங்கள்.
உலகை நவீன தொழில் நுட்பமயம் ஆட்டிப்படைத்து ஆட்சி செலுத்தி வருவதை நாம் அறிவோம். அதன் தாக்கம் பெருநகரங்கள் முதற்கொண்டு, சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் படிப்படியே சென்றடைவதை நாம் பல விசயங்களில் பார்த்து வருகிறோம். அதன் சாரமாக நம்மூரில் காணாமல் போன சில பழக்க, வழக்கங்களை இங்கு முடிந்த வரை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.
1. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் பள்ளிகளின் பாங்கு கொடுத்த பின் அடிக்கப்படும் நஹராக்களின் ஒலி இன்று பெரும்பாண்மையான பள்ளிகளில் 'இன்வெண்ட்டர்' வந்த பிறகு கேட்க முடியவில்லை.
2. வீட்டின் பல விசேச தருணங்களில் மற்றும் சம்மந்தி வீட்டாரை சந்தோசப்படுத்த வீட்டிலேயே ஆள் வைத்து அல்லது ஆள் வைக்காமல் மாவு இடித்து சுட்டுத்தரப்படும் பூவடை, நானா ஹத்தம், அரியதரம், குழல் பணியான், பூவந்தி, முட்டாசு, மைசூர் பாக்கு, வெங்காயப்பணியான், சாதா ஹல்வா, பீட்ரூட் ஹல்வா போன்றவைகள் இன்றும் வீடுகளில் உண்டாக்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. (பெண் வீட்டாரை வதக்காமல் இப்பழக்கத்தை விட்டு விட்டோம் என்று அறியப்பட்டால் மிக சந்தோசம் தான். அதற்காக நம் எல்லோரையும் பட்டினி போட்டு விடாதீர்கள் என்று யாரும் கேட்க மாட்டீர்களே?)
3. சிறுவர்களாக இருந்த நாம் விளையாடி கழித்த பளிங்கு, பட்டம், பம்பரம், பேபே, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு, தேர்தல் வாக்கெடுப்பு, கயிறு ரயில் வண்டி, நொங்கு கோம்பை வண்டி, டயர் வண்டி, அட்டபில்லு போன்ற விளையாட்டுக்கள் பெரும்பாலும் ஒழிந்து விட்டன. எல்லாம் கம்ப்யூட்டர், செல்போன் மயமாகி விட்டன.
4. கலியாணம் முடிந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் மாப்பிள்ளையுடன் கூட வந்து மூன்று வேளையும் ஒரு கட்டு கட்டிவிட்டு (சாப்பாடு) பெண் வீட்டாரின் மறைமுக வதுவாப்பேரு (பத்வா)எடுத்துச்செல்லும் மாப்பிள்ளை தோழன்மார்கள் சாப்பாடு இன்று ஓரிரு நாட்களிலே முடிந்து விடுவது ஒரு நல்ல முன்னேற்றம் தான். அல்ஹம்துலில்லாஹ்.. முற்றிலும் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.
5. பெரியவர் முதல் சிறியவர் வரை நமதூர் குளங்களில் குளிப்பது, கும்மாளம் அடிப்பது குறைந்து அல்லது மறைந்து விட்டது.
6. ஒன்றுமேயறியாத படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களைப்பிடித்து அவர்களுக்கு வருங்காலத்தில் திருமணம் முடிக்க இருக்கும் பெண்ணை முடிவு(அசைன்) செய்து 'நிக்காஹ்' என்னும் திருமண முன் உறுதி ஒப்பந்தம் செய்து வைப்பது இப்பொழுது குறைந்து அல்லது மறைந்து விட்டதாக கருதுகிறேன்.
7. சிறுவர்களுக்கு 'சுன்னத்' செய்யவதற்கு முன் வீட்டில் வசதி வாய்ப்புகள் இருக்கிறதோ இல்லையோ அலங்கார வாகன பவனி தெருதோறும் பைத்துசபா இசை முழங்க வருவது இப்பொழுது முற்றிலும் குறைந்து விட்டதாக கருதுகிறேன். நல்ல முன்னேற்றம் தான் மாஷா அல்லாஹ்.
8. வீடுகளின் முற்றத்தில் உரலை வைத்து நான்கு புறமும் புடவையை சுவராக எழுப்பி நடுவில் சிறுவர்களை உட்கார வைத்து அவர்கள் கதற, கதற நாசுவனை வைத்து 'சுன்னத்' செய்யும் முறை இப்பொழுது முற்றிலும் இல்லை என கருதுகிறேன்.
9. புதியதாக வெளிநாடு பயணம் செய்ய இருக்கும் நபர்களின் வீட்டில் சலவாத்நாரியா ஓதி நார்சா கொடுக்கும் வழக்கம் நின்று போய் விட்டதாக கருதுகிறேன். (வீட்டுக்கு வருகிறவர்கள் நன்றாக மூக்குபிடிக்க உண்டு செல்வார்கள். பாவம் சபுராளி சைத்தான் கோளாறு உள்ளவன் போல் காட்சி தருவான்).
10. இக்கால பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொழுது விளையாடிக்களித்த கலச்சிக்காய், சில்கோடு, பல்லாங்குழி, புளியங்கொட்டை, கொலெகொலெயா மந்திரிக்கா நரிநரியா சுத்திவா விளையாட்டுக்கள் எல்லாம் கண்மாசியா (முற்றிலும்) காணாமல் போய் விட்டது இக்கால சிறுவர், சிறுமியரிடம்.
11. நமது வீட்டில், குடும்பத்தில், தெருவில் யாரேனும் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டால் நமதூர் ரயிலடி (ரயில்வே ஸ்டேசன்) வரை ஆண்களும், பெண்களும் புடைசூழ வந்து ஹாஜிகளுக்கு மாலை அணிவித்து பைத்து ஓதி புனித பயணத்தை சிறப்புடன் இறைவன் கிருபையில் முடித்து வீடு வந்து சேர து'ஆச்செய்து அனுப்பியது இப்பொழுது இருக்கிறதா? அல்லது இல்லாமல் போய் விட்டதா? தெரியவில்லை. (எப்படி இருக்கும்? கம்பன் எக்ஸ்பிரஸ் தான் கண்மாசியாக்காணாமல் போய் விட்டதே....)
12. இப்பொழுது நமதூரில் மாணவ, மாணவியர் எல்லாம் வண்ண,வண்ண சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. நாம் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை கலர் வேட்டியும், பதினொன்றாம் வகுப்பிலிருந்து வெள்ளை வேட்டியும் உடுத்தி வர பள்ளி நிர்வாகமே அனுமதித்திருந்தது. அதை இப்பொழுது நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. (இப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றிருக்கும் நம்மூர்க்காரர்களின் பள்ளிப்பருவ புகைப்படங்களை குடியுரிமை வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கப்பட்ட அக்குடியுரிமையை அவர்கள் திரும்பப்பெற்றுக்கொண்டாலும் பெறலாம். அவ்வளவு அழகாகவும், நாகரீகமாகவும் இருக்கும். (சிலர் பழைய ஊதா தொப்பியுடனும் காட்சியளிப்பர்).
13. வீட்டினருக்கு தெரியாமல் கள்ளத்தனமாக பார்த்துவந்த (ஜெக்கரியா, நியூ சினிமா திரையரங்குகள்) சினிமாவும், குடித்த ஒட்டு பீடியும் பெரும்பாவமாக கருதப்பட்ட காலம் அது. தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை சைத்தான் குடிவந்த வீடாக பேசப்பட்ட நேரம் அது. அக்காலத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றோ எல்லை மீறிய பாவங்கள் பரவலாக நடந்துவருவதை காணாமல் இருக்க முடியவில்லை.
14. வீட்டில் நடை பெற இருக்கும் கலியாண வைபவங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டின் பெரியவர்கள் ஒன்று கூடி (டீ, மிக்ஸர், பனியான் துணையுடன்)பத்திரிக்கைகள் எழுதி முதலில் அயல்நாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு, பிறகு உள்ளூர் உற்றார், சுற்றத்தாருக்கு அனுப்பப்படும். இக்காலத்தில் அவைகளெல்லாம் குறைந்து அல்லது மறைந்து வாய்க்கூப்பாடு, டெலிபோன் கூப்பாடு, ஈமெயில் கூப்பாடு, சாட்டிங் கூப்பாடு, இன்டர்நெட் கூப்பாடு என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இதை தொழிலாக செய்து வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. எப்படி குதிரை வண்டிகளெல்லாம் ஆட்டோக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றதோ அது போல் தான் இதுவும்.
15. அன்று வீடுதோறும் தண்ணீர் நிறம்பிய கிணறுகள் இருந்தன. இன்று அவைகளெல்லாம் மறைந்து ஆழ்குழாய்க்கிணறுகளாக வந்து நம் வீட்டை ஆட்சி செய்வதுடன் குளங்களின் தண்ணீர் இருப்புக்கும் வேட்டு வைக்கிறது. அன்று கிணற்றில் பயன்படுத்தப்பட்ட வாளியும், கயிறும் அதன் இரும்பு சக்கரமும் விரைவில் அழிந்துபோன பொருட்களின் வரிசையில் அருங்காட்சியகத்தில் காணப்படலாம்.
16. ஒரு காலத்தில் நமக்கு வரும் சளித்தொல்லை, இருமல், காய்ச்சல், ஜலதோசங்களெல்லாம் ஆஸ்பத்திரி சென்று ஒரு ஊசி போட்டு வந்தால் அவை நம்மை விட்டு காணாமல் போய் விடும். ஆனால் இன்றோ எத்தனை ஊசி போட்டு வந்தாலும், மருந்து மாத்திரைகள் தின்றாலும் அவைகள் நம் அன்றாட வாழ்வில் தொட்டு விளையாட்டு விளையாண்டு வருகின்றன. (இக்கால மருந்துக்கு வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என சொல்ல வந்தேன்).
17. அன்றாட சமையலுக்காக நம் வீட்டில் பயன்படுத்தப்பட்ட அலாயத்திக்காட்டு விறகுகளும், சைக்கிளின் பின் கேரியரில் கட்டி வாங்கி வந்த விறகுகடை சவுக்கு விறகுகளும் இன்று கலியாண வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மாறிப்போனது. குறிப்பாக அலயாத்திக்காட்டு விறகுகள் இன்று அடியோடு இல்லாமல் போய்விட்டதாக கூறலாம். அன்று ஆடம்பரப்பொருட்களின் வரிசையில் பவனி வந்த கேஸ் அடுப்புகள் இன்று இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம்.
18. அன்று டி.வி.எஸ். 50 (மொபெட்) வைத்திருந்தாலே பணக்காரர்களின் வரிசையில் வலம் வந்தவர்கள் இன்று இன்னோவா இல்லை ஃபர்ச்சூனர் வைத்திருந்தால் மட்டுமே ஏதோ உப்புக்கு சப்பானி போல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பணங்காசுகள் பெருகி அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது என சொல்ல வந்தேன்...
19. ஒரு காலத்தில் நமதூர் ஜாவியாவில் பயான் முடிந்து இறுதியில் கொடுக்கப்படும் நார்சா சோறு ஆரம்ப காலத்தில் மண் சட்டியிலும், பிறகு சில்வர் கிண்ணத்திலும் இறுதியில் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் இன்னும் பல பழைய பழக்க,வழக்கங்கள் நாகரீக உலகை காரணம் காட்டி நம்மைவிட்டு நலுவிச்சென்றுவிட்டன.
20. ஒரு காலத்தில் ட்ரங்கால் புக் பண்ணி டெலிபோனுக்காக காத்துக்கிடந்த நாம் இன்று எல்லோரின் கைககளிலும் செல்போன் துள்ளி விளையாடுவதை தவிர்க்க முடியவில்லை.
21. அன்புக்கடிதங்களும், ஆசை வாழ்த்துக்களும், மணியார்டருகளும் கொண்டு வந்து நம் வீட்டில் கொடுத்துச்சென்ற தபால்காரர்கள் இன்று இருக்கலாம். ஆனால் அப்பழக்க,வழக்கங்களெல்லாம் மலையேறி சென்று விட்டதாக அடித்தும் கூறலாம் அடிக்காமலும் கூறலாம். இதில் தோனா.கானா முறையும் அடங்கும்.
இன்னும் நம்மிடம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த எத்தனையோ பழக்க,வழக்கங்கள் விஞ்ஞான மாற்றத்தை காரணம் காட்டி இன்று நம்மிடமிருந்து பிரியா விடைபெற்று சென்று விட்டன. அதில் சில எனக்கு ஞாபகம் உள்ளதை மேலே வரிசைப்படுத்தியுள்ளேன். மேற்கண்டவற்றில் யாரையும் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது உட்கருத்து ஏதேனும் வைத்தோ எதுவும் எழுதப்படவில்லை.
இஸ்லாத்திற்கு முரணான பல தீய பழக்க,வழக்கங்கள் நாளடைவில் நம்மை விட்டு காணாமல் போயிருந்தால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சந்தோசப்பட வேண்டியது தான்.
விடுபட்ட பழக்க,வழக்கங்களையும், உங்கள் மேலான கருத்துக்களையும் இங்கு பின்னூட்டமாக இட்டு தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பழைய ஞாபகங்களை ஓரளவு மறக்காமல் இங்கு வழங்க பேருதவி புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று அவனிடம் பிரார்த்தித்தவனாக இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
வஸ்ஸலாம்.
-- மு.செ.மு. நெய்னா முஹம்மது
Source : http://adirainirubar.blogspot.
Tuesday, October 5, 2010
காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்
காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்
நாம் முந்திய கட்டுரை தொடரில் "கலீபா அல்வாதிக் பெரும் கொடுமை இழைத்த பொழுது கெய்ரோ அருகில் முகத்தம் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுமாக 224 பேர் பக்ரீ குடும்பத்தை சேர்ந்த முஹம்மது கல்ஜி என்பாரின் தலைமையில் மரக்கலமேறி கி.பி.875ல் (கி.பி. 842ஆம் ஆண்டு என்ற கருத்தும் உள்ளது) இந்தியாவின் கீழ்க்கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் வந்திறங்கினர். அந்த இடத்தை பழைய காயல் என்று வழங்கப்படுகிறது." என்று முடித்திருந்தோம்.
அந்த காயல் நகர் எதுயென்பதை இப்போது பார்போம்....
காயல் நகரிலிருந்துதான் அதிராம்பட்டினத்திற்கு முஸ்லிம்கள் குடியேறியதாக வரலாற்று வழிச்செய்திகள் கூறுகின்றன.
காயல் என்னும் ஊரிலிருந்துதான் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.
ஆனால், அது எந்த காயல் நகர் என்பது நாம் பல வரலாற்று நூல்களை படிக்கின்றபோது ஏற்படுகின்ற சந்தேகமாகும்.
இதுவே ஆய்வு செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது!
"திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுக்காவில் அட்ச ரேகை வடபால் 8.34 தென்பால் 78.8 ல் அமைந்துள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் பழைய காயலின்றும் வேறுபட்டதாகும்.
இதனை இம்பீரியல் கெஜட்டீர் ஆப் இந்தியா(தொகுதி 15 பக்கம் 195) காட்டுகின்றது.
தாமிரபரணிக்குத் தெற்கு, தூத்துக்குடியிலிருந்து 18 மைல் தெற்காம அமைந்துள்ள இவ்வூரினை காயல் என்னும் ஊராக கருதி மயங்குதல் கூடாது என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது."(1)
திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினம் உண்மையான காயல் நகர் இல்லை என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
தமிழ்நாடின் தென்பகுதி ராமநாதபுரம் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் 9-14-80-50-10 என்னும் அட்ச ரேகையில் அமைந்துள்ள(2) கீழக்கரைதான் உண்மையான பூர்வீக காயல் நகர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
கீழக்கரைதான் காயல் என்றும் தென்காயல் என்றும் இருந்ததாக மதுரைத்தமிழ் சங்க புலவராக இருந்த செய்யது முகமது ஆலீம் புலவர் தமது மஜ்முஉல் முனாஜாத்(பக்கம்19) என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
இதுப்பற்றியே கீழக்கரையில் சீதக்காதி வள்ளல் கொலுவீற்றிருக்கின்ற காட்சியை நேரிற்கண்ட நொண்டி நாடக ஆசிரியர் அவரை காயற்றுரை செய்தக்காதி, காயல் நகரன், காயல் மன்னவன் செய்தக்காதி என்றெல்லாம் போற்றுகின்றார்.
தனிப்பாடல்களிலும் காயலாதிபனே, தென்காயற்பதியானே, காயல் துரை என்னும் தொடர்களையும் பார்கின்றோம்.(3)
சீதக்காதி என்ற செய்யது அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் இன்றைய கீழக்கரையைச் சேர்ந்தவர்தான் என்பது கவனிக்கத்தக்கது.
ஆக, இன்றைய கீழக்கரைதான் பண்டைய காயல் நகர் என்பது திண்ணம்!
"பழைய காயல் துறையிலிருந்து கடல் விலகி சென்றதன் காரணமாக அத்துறை தன் சிறப்பினை இழந்த போது அங்கிருந்த மக்கள் வேறு ஊர்களுக்கு சென்று குடியேற தொடங்கினார்கள். பரங்கிப்பேட்டை,முத்துப்பேட்டை போன்ற இடங்களுக்கும் சென்றதுடன் தங்கள் பழம் பகுதியின் பெயரைக் கொண்ட புதிய ஊர்களாகிய பின்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய ஊர்களையும் அமைத்தனர்.(4)
என்கிற வரலாற்று சான்றுகளிலிருந்து நமக்குள்ள பல சந்தேககங்களை நிவர்த்தியாக்கின்றன. பண்டைய காயலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களே பல்வேறு கடற்கரை பட்டினங்களிலும் குடியேறினர் அவர்களில் சிலரே தங்களின் பழைய இருப்பிடத்தின் நினைவாக ஊர்கலையும் அமைத்து அதன் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தனர். அந்த வகையில் உருவானதுதான் இன்றைய காயல்பட்டினமாகும்.
அதுப்போலவே காயலில் (கீழக்கரை) இருந்து வெளியேறிய மக்கள் அமைத்த ஊர்களில் ஒன்றுதான் அதிராம்பட்டினமாகும். அம்மக்கள்தான் அதிராம்பட்டினத்தின் முதல் குடிமக்களாவார்கள்.
உசாதுணை குறிப்புகள்:
(1) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 63
(2) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 26
(3) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 31,32
(4) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 64
இன்னும் பல வரலாற்று குறிப்புகள்
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து
Source : http://adiraihistory.blogspot.com/2010/10/blog-post_03.html

Tuesday, September 14, 2010
ஃபித்ரா விநியோகம் சிறப்பாக நடைப்பெற்றது
நீடூர் நெய்வாசல் அசோசியேசன் - துபாய் அமைப்பின சார்பாக நமதூரில் ஃபித்ரா பொருட்கள் வருடா வருடம் சிறப்பாக வழங்கிவருவதின் தொடர்ச்சியாக இவ்வருடமும் நமதூர் ஜின்னாதெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் வைத்து பித்ரா விநியோகம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. அவற்றின் சில காட்சிகள்....
Wednesday, August 18, 2010
Tuesday, August 17, 2010
காயல்பட்டணம்
காயல்பட்டணம் தமிழ்

Labels:
Pictures-படங்கள்,
ஊர்,
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)