Tuesday, October 14, 2014

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டைக்கு சிறு வயதில் சென்று வந்தது மனதில் பசுமையாக உள்ளது .
திரும்பவும் கடந்த ஞாயிறு அன்று எனது பேரன் சமீர் அலியோடு போய் வந்தது மனதில் பெரு மகிழ்வை தருகின்றது .
லால்பேட்டை மக்கள் மிகவும் ஒற்றுமையாக தங்கள் ஊரின் முன்னேற்றதிற்கு பெரும் பங்காற்றுகின்றனர்.
லால்பேட்டையை சுற்றி பார்ப்பதில் நண்பர் அஹ்மது ரிலா அவர்கள் மிகவும் உதவினார்கள் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுதது மனதிற்கு அமைதியை தந்தது .

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியை பார்த்த பின்பு எனக்கு மிகவும் வேண்டிய தமிழ் மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துற்றஹ்மான் ஹஜ்ரத் அவர்களை லால்பேட்டை அவர்களது வீட்டில்  சந்தித்தேன்.
ஹஜ்ரத் அவர்களுடன் சிறு வயதிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு .அவர்கள் நீடூர் ஜாமியா அரபிக் கல்லூரியில் ஓதியவர்கள் .
அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அன்புடன் 'ஜின்னா' என்று என் பெயரை அழைத்து கட்டி அணைத்து தனது அன்பைக் காட்டினார்கள் .


லால்பேட்டை அரபிக் கல்லூரியில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி


அதன் பின்பு லால்பேட்டை ஊரை முழுமையாக பார்த்து வீராணம் ஏரியையும் பார்த்து வந்தோம்
 லால்பேட்டை வீராணம் ஏரி அருகில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி
— with Ahamed Rila.


லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் கூடத்தில் Mohamed Ali
— with Ahamed Rila.
 அஹ்மத் ரிலா இல்லத்தில்
Ahamed Rila Mohamed Ali மற்றும் அஹ்மத் ரிலாவின் தந்தை ஹஜ்ரத், நூருல்லாஹ் அவர்கள்
 ***********************************************************************

லால்பேட்டை தமிழ் நாட்டில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஆற்காடு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த அன்வருத்தீன் என்பவரின் அமைச்சரவையில் இருந்த "லால்கான்" என்பவரே இந்த லால்பேட்டை என்ற ஊரை வளர்த்தெடுத்தவர். அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு "கான் இருப்பு" எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்றும் "காங்கிருப்பு" என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டு வந்துள்ள வாய்க்காலுக்கு "கான் வாய்கால்" என அழைக்கப்படுகிறது.

இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்று குற்றேவலர்-கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு,கீழத்தெரு,மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார். இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது.

அத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று, சத்திரம்,சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்றும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்.

இப்படி ஜாமிஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லிம்களும் வீராணப்பகுதியில் இந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

மத நல்லிணக்கத்தின் உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ஆம் ஆண்டுக்கு முன்பு லால்கானால் உருவாக்கப்பட்டது 
லால்பேட்டை

நன்றி https://www.facebook.com/lalpet786/info
*****************************************************

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரசா லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார்

இங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் மன்பஈ எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். மன்பஈ என்றால் மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும்.
மதரசாவின் சிறப்பம்சம்: இம் மதரசாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லால்பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
ழமை வாய்ந்த புகழ்ப்பெற்ற மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிஸ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும் ஏக அல்லாஹ்விடம் வேண்டுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொண்டு முடிவுரைக்கு திரையிடுகின்றேன். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
நன்றிhttp://lalpetexpress.com
 லால்பேட்டை ஊரைப்பற்றி
     ஏக அல்லாஹுவின் திருபெயரைக்கொண்டு ஆரம்பிக்கின்றோம் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞர்களை உருவாக்கி உலகமெங்கும் அனுப்பும் வரலாற்று சிறப்புமிக்க ஓர் ஊரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

லால்பேட்டை ஓர் அறிமுகம்:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் சிதம்பரத்திலிருந்து 22கி.மீ. நெய்வேலியிலிருந்து 30கி.மீ. காட்டுமன்னார்குடிஇலிருந்து 3கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, லால்பேட்டை. லால்பேட்டையின் இயற்ப்பெயர் லால்கான்பேட்டை ஆகும். இந்தபெயர் காலப்போக்கில் மாறி லால்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. பெயர் எப்படி உருவானது என்பதை, லால்பேட்டை உருவானது எப்படி என்ற தலைப்பில் பின்னர் கீழே காண்போம்.

இன்ஷா அல்லாஹ்.

இவ்வூர் முஸ்லிம்கள் அதிக அளவிலும் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் குறைந்த அளவிலும் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இருக்கும் ஓர் ஊராகும். லால்பேட்டை சிதம்பரம் நாடாளுமன்ற மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்வரும் ஓர் பேரூராட்சியாகும்.

இவ்வூரில் முஸ்லிம்கள்,ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

லால்பேட்டை உருவானது எப்படி:

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்திலும் அதற்க்கு முன்பும் இந்தியாவில் நவாப்களின் ஆட்சிக்காலம் சிறந்த ஆட்சிகாலம் என்றே சொல்லலாம், அவ்வரிசையில் சிறந்த ஆட்சிப்புரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார்.

அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் எனும் பெயருக்குரிய செல்வமகன் இந்த பகுதிக்கு வருகை தந்தபோது அவருடைய கடைக்கண் பார்வையில் பட்டதுதான் இவ்வூராகும். இவ்வூரை உருவாக்கி நிர்மாணித்த பெருமை இவரையே சேரும்.

அவருடைய வருகைக்கு முன்பு ஒரு சிலரே அங்காங்கே வாழ்ந்து வந்த குக்கிராமங்கலாய் இவ்வூர் இருந்தது என்று கூறப்படுகிறது. லால்கான் வருகைக்கு முன்பு இங்கு ஊரே இல்லையென்றும் கூறப்படுகிறது. இரு வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் லால்கான் வரவுக்கு பின்னர்தான் இவ்வூர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது என்பதை பின்வரும் குறிப்புகளிலிருந்து அறியமுடியும்.

அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளார். இப்பகுதிக்கு “கான்இருப்பு” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பெயர் இன்றும் கூட அப்பகுதிக்கு காங்கிருப்பு என்று அழைக்கப்படுகிறது இப்பகுதியை சிதம்பரத்திலிருந்து லால்பேட்டையை நெருங்கும்போது காங்கிருப்பை காணலாம் இது லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மேலும் இப்பகுதி விவசாய பாசனத்திர்க்கென லால்கான் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த வாய்க்களுக்குகூட “கான் வாய்க்கால்” என இன்றும் அழைக்கப்படுகிறது.

அமைச்சர் லால்கான் தன் நிர்வாகத்தை இங்கே துவக்கி இதை ஒரு பேரூராக மாற்ற நினைத்து (லால்கான் ) ஜாமியா மஸ்ஜிதை (தற்போது பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் லால்கான் ஜாமியா மஸ்ஜித் ) கட்டினார். பள்ளிவாசலின் முன்புறம் நான்கு தெருக்களை நிறுவி அதில் முஸ்லீம் மக்களை கொண்டுவந்து குடியமர்த்தி அதற்க்கு மேலதெரு, கீழ தெரு , வடக்கு தெரு, தெற்கு தெரு என பெயரிட்டார் அத்துடன் குற்றே வேலர்கள் என அழைக்கப்பட்ட மக்களை தெற்கு தெருவிற்கு தெற்க்கே குடியமைத்து அதற்க்கு குற்றே வேலர் தெரு எனப் பெயரிட்டார் அது காலப்போக்கில் மாறி கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது.

இவ்வாறாக இஸ்லாமிய வாழ்வு இங்கே வளர ஆரம்பித்தது, இவ்வூரை உருவாக்கி வளரவைத்த அந்த மாபெரும் அமைச்சரின் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. அந்த பெயர்தான் லால்(கான்) பேட்டை.

பாகுபாடற்ற இஸ்லாமிய உணர்வு மிக்க லால்கான் அவர்கள் வீராணம் கரையோரம் சத்திரம் சாவடி ஒன்றைக்கட்டி அதன் கரையோரம் கோவில் ஒன்றையும் அமைத்து ஒரு குளமும் தோண்டியுள்ளார் அந்த குளம் திருக்குளம் என்று இந்நாள்வரை அழைக்கப்படுகிறது அதன் கரையோரம் எட்டு ஜாதியினரை குடியமர்த்தினர்

இப்படியாக ஜாமியா மஸ்ஜித் பகுதியில் முஸ்லிம்களும் வீராணம் பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சமகாலத்தில் குடியமர்த்தி அவர்களின் வாழ்க்கைக்கான தேவைகளும் லால்கானால் வழங்கப்பட்டு வளர ஆரம்பித்த இவ்வூர் இன்று மக்கள் தொகை பெருகி பல தெருக்களும், புதிய நகர்களும் உருவாகி செல்வ செழிப்புடன் ஒரு நகருக்கு இணையான பேரூராய் வளர்ந்து முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் ஒன்றாக ஒற்றுமையாக வாளும் ஓர் சிறந்த ஊராகும்

லால்பேட்டை மக்களின் தொழில் மற்றும் வருமாணம்:

லால்பேட்டையில் நெல், உளுந்து, பயறு, கரும்பு, வெற்றிலை ஆகியவை சாகுப்படி செய்யப்படுகிறது, லால்பேட்டை இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பலநாடுகளில் தங்கி பணிபுரிகின்றனர் அதில் குறிப்பாக ஐக்கிய அமிரகம்,சவுதி அரேபியா, மலேசியா,சிங்கப்பூர், கத்தார், குவைத் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாகும் மத்திய அரசிற்கு அந்நிய செலவாணியை பெற்று தரும் முக்கிய ஊர்களில் லால்பேட்டையும் ஒன்றாகும்.

லால்பேட்டையின் மக்கள் தொகை

லால்பேட்டையின் மக்கள் தொகை சுமார் 20197 (2007 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) இதில் ஆண்கள் சுமார் 54% மற்றும் பெண்கள் சுமார் 46% ஆகும்.

லால்பேட்டையின் சுற்றியுள்ள முஸ்லீம் கிராமங்கள்:

எள்ளேரி, கொள்ளுமேடு , ஆடூர் , கந்தகுமரன், நெடுன்ச்சேரி, ஆயங்குடி.

அருகிலுள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள்:


ரயில் நிலையம் சிதம்பரம் ,


விமானநிலையம் திருச்சி மற்றும் சென்னை.


முடிவுரை:இப்பகுதியை படிக்கும் அனைவரும் லால்பேட்டை மேலும் செழிப்படைந்து பெரிய நகரமாக உருவாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி http://lalpetexpress.com/about-town/

****************************************

வெளியூர் மக்களை அசைபோடும் லால்பேட்டையின் வெற்றிலை..!!

வெள்ளை வெற்றிலை.இதுகடலூர் மாவட்டம்லால்பேட்டையில் அதிகம் பயிடப்படுகின்றது.வீரணம் ஏரி பாசனத்தால் தண்ணிர்தட்டுப்பாடின்றி,அமோக விளைச்சலைத்தருகிறது.

அசுரவளர்ச்சினால்,விட்டத்திற்கு மேலும் செல்லும்போது வெற்றிலைபறிப்பது கடினம் என்பதால், அந்த கொடியை அப்படியேஎடுத்து வட்டவடிவமாக சுழற்றி பூமியில் வைத்து,அதன் மேல் சேற்றை வைத்து விடுவார்கள்.

தலைப்புக்கொடி மேல் நோக்கி இருக்கும்.சிலநாட்களுக்கு பிறகு இந்த பதியனிலிருந்து பலகிளைகள்கிளம்பும்.

அதுவளந்து பலன் கொடுக்கும் இதனைசுழற்றிக் கட்டுதல் என்று சொல்வர்.

வெள்ளை வெற்றிலையப் பார்த்தாலே அழகு!
மக்கள் மத்திலே வைத்தலே சபை அழகு!
அதைப்போட்டாலே முக அழகு!!!

தகவலுக்கு நன்றி லால்பேட்டை சகோதரர்களின் சங்கமம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails