Wednesday, October 15, 2014

ஆப்கானிஸ்தானின் கல்வி தேவதை


ஷபானா பாஸிஜ் பற்றி...

ஷபானா சிறுமியாக இருந்த பொழுது ஆஃப்கான் தஃலிபான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எங்கும் கெடுபிடி, பெண் குழந்தைகள் வெளியில் செல்லமுடியாத சூழல். படிப்பிற்காக வெளியே செல்லுதல்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம்.

ஷபானா பாஸிஜின் தந்தை, மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் தன் மகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறார். இவர் போன்ற பெற்றோர் எடுத்த முடிவினால் நகரத்தில் ஆங்காங்கு நடைபெறும் இரகசியப் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர்.

பள்ளி என்றால் நாம் கற்பனை செய்வது போலில்லாமல், ஒரு வீட்டின் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் வருவது கூடாது; அதேபோல கலைந்து செல்லும் போதும் கூட்டமாக செல்லுதல் கூடாது. இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, போதிக்கும் ஆசிரியர்கள், பாதுகாப்பிற்கென வரும் பெற்றோர்கள் என எவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

இதுபோன்ற ஒரு பள்ளிக்குத்தான் ஷபானா அனுப்பப்படுகிறார். எப்படித் தெரியுமா? ஆண் பிள்ளையின் உடைகளை அணிந்து, மளிகைக் கடைக்கு சாமான்கள் வாங்குவது போன்ற தோற்றத்தில் பையில் புத்தகங்களை அடுக்கி சென்று வருகிறார். தினமும் ஒரே பாதையில் சென்றால் சந்தேகம் ஏற்படுமென்று தினமும் வெவ்வேறு பாதைகளில் அந்த இரகசியப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்.

இந்நிலையில், படிப்பில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஷபானா, அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

தான் கற்ற கல்வி, தன் நாட்டு மக்களுக்கு பயன் பட வேண்டும் என்று நினைத்த ஷபானா பாஸிஜ்... அதற்குறிய முயற்சிகளில் ஈடுபட தொடங்கி வெல்லவும் செய்கிறார்.

*
------------------------------------------------
// சகோதரி 'ஷபானா பாஸிஜ்' குறித்த சிறப்புகளை நண்பர் ரஃபீக் பேஸ்புக் மூலம் இன்றுதான் நான் அறியவந்தேன். ஆப்கானிஸ்தானில் தொடங்கிய அவரது கல்விகான விடாமுயற்சி மலைக்கவைக்கிறது.
                                                                                                       Taj Deen

- தாஜ்
*
*
நன்றி:
ரஃபீக் பிரண்ட்ஸ் / F.B..
                                                                                             Rafeeq Friend
மலாலா எனும் மாயை! - Rafeeq

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails