94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று அலிகாரில் காலமானார்.
புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் "இந்திய தேசிய ராணுவத்தில் (இந்தியன் நேஷனல் ஆர்மி") பணியாற்றிவர்.
ஐஎன்ஏ வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.
பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல்மரண தணடனை வழங்கியது.
1947ல் தேச விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் தந்தவர் Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment