இஸ்லாமிய வரலாற்றில்
நெல்லை மாவட்டத்திற்கு மிக சிறப்பான இடம் உண்டு.
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டத்தில் ஏராளமான முஸ்லிம் ஊர்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான முஸ்லிம்களும் வாழுகின்றார்கள்.
மேலப்பாளையம்
காயல்பட்டினம்
தென்காசி
கடையநல்லூர்
செங்கோட்டை
போன்ற ஊர்கள் முக்கியமானவை.
பல நூற்றுக்கணக்கான ஜமாத்துகள் மாவட்டம் முழுவதும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் நடத்தும் மதரசாக்கள்
கல்விக்கூடங்கள்
கல்லூரிகள்
மருத்துவமனைகள்
தொழிற்கூடங்கள்
இங்கே உண்டு .
ஆலிம்கள்
மருத்துவர்கள்
அறிஞர்கள்
எழுத்தாளர்கள்
கவிஞர்கள்
சிந்தனையாளர்கள்
அரசியல்வாதிகள்
ஏராளம்பேர் வாழ்ந்த மாவட்டம்
வாழும் மாவட்டம் நெல்லை மாவட்டம்.
இஸ்லாமிய சான்றோர்களில்
குறிப்பாக புகழ் பெற்ற ஆலிம்களில்
முக்கியமானவர்கள்
இலங்கை வானொலியின் மணி மொழிப் புகழ் மவ்லானா
கலீலுர் ரஹ்மான் ஆலிம் ஹஸ்ரத்
ஜமாத்துல் உலமா ஆசிரியர்
அபுல் ஹசன் சாதலி ஹஸ்ரத்
டிஜெஎம் சலாஹுத்தீன் ரியாஜி ஹஸ்ரத்
சிராஜ் ஆசிரியர் சிராஜ் பாக்கவி ஹஸ்ரத்
போன்றவர்களும்
இன்னும் எண்ணற்ற ஆலிம் பெருமக்களும் மாவட்டத்திற்கு
பெருமை சேர்த்தவர்கள் .
காயல்பட்டினம் ஆலிம்களுக்கு தனிப்பட்டியலே போட வேண்டும். அத்தனை சிறப்புக்குரிய ஊர் காயல் பட்டினம்.
நெல்லை மாநகர உலமா பெருமக்களின் ஆன்மீக பணிகளின் ஒளிவிளக்காய் திகழ்வது மீனாஷிபுரம்.
நெல்லை மாநகரம் இஸ்லாத்தின் மணம் வீசும் நகரம் என்பதில் சந்தேகமேயில்லை.
அங்குள்ள ஆலிம்களின் வரிசையில் இன்றைய தினம்
அறிவொளியை ஏற்றிவைத்து மக்கள் மனங்களை மாண்புறச் செய்யும் பணியை செய்து வருபவர் ...
மரியாதைக்குரிய
மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் பி .ஏ. காஜா முயினுதீன் பாக்கவி ஹஸ்ரத் அவர்கள்.
ஒரு ஆன்மீக சொற்பொழிவின் மிக அற்புதமான ஆனந்தப் பரவசம் அவர்களது பயான்.
பருகப் பருகத் திகட்டாத அமுத பானம் போல் குற்றால அருவி போல் தங்கு தடையின்றி பாய்ந்து வரும் தமிழ் நடை...
ஆகா....ஆகா... அருமை ...அருமை.
பயான் முடிந்ததும் ...முடிந்துவிட்டதே என்று வருந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அத்தனை அற்புதமான சொல்லாற்றலை அவர்களுக்கு கொடுத்திருக்கிறான் கருணையுள்ள அல்லாஹ் !
மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில்
கோட்டாறு முஹைதீன் பள்ளி வளாகத்தில் வைத்து அவர்களின் பயான் நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றார்கள்.
இன்றைய தினம் அன்னை கதீஜா ( ரலி ) அவர்களைப் பற்றிய
மிக அற்புதமான சொற்பொழிவொன்றை அவர்கள் நிகழ்த்தினார்கள்.
என்ன இனிமை....
அடுத்த மாதம் சுவனத்தின் தலைவி பாத்திமா ( ரலி ) அவர்களை பற்றி பேசுவதாகக் கூறி இருக்கிறார்கள்.
கேட்பதற்கு இப்போதே ஆர்வமாக இருக்கிறது.
இன்றைய பயானில் அவர்கள் பேசிய பேச்சின் சில முத்துக்களை தனித்தனி பதிவுகளாகத் தர முயற்சிக்கிறேன் ...இன்ஷா அல்லாஹ் .
No comments:
Post a Comment