Friday, March 27, 2015

மோடியும் நவாஸ் ஷெரீபும் கூட விளையாடலாம். காஷ்மீர் பிரச்சினை காணாமல் போயிடும்.

" 11 பேர் விளையாடுறதை
11000 பைத்தியக்காரங்க ரசிக்கிறாங்க "
அப்படின்னு பெர்னார்ட்சா என்ற ஆங்கில நாடக ஆசிரியர் சொல்லி இருக்காரு.
இன்னைக்கு கிரிக்கெட் பார்த்தவங்களையெல்லாம்
பைத்தியக்காரங்கன்னு நேரடியாக சொல்லாம மறைமுகமா பெர்னார்ட்சா சொன்னதைச் சொல்லி கிண்டலடிக்கிறாங்க சில " பெருசு "ங்க .

பெர்னார்ட்சா சொல்வதெல்லாம் வேதவாக்கா என்ன ?
அவருக்கு கிரிக்கெட் பிடிக்கவில்லை. விளையாடத் தெரியவில்லை.
அதனால அதை குறை சொன்னாரு.
போகட்டும்....
பெர்னார்ட்சா ஏதாவது விளையாட்டு விளையாடி இருக்காரா ?
இல்லை.

நாடகத்துக்கு கதை எழுதுவாரு .
அவ்வளவுதான்.
அந்த நாடகத்தை எத்தனை பேரு பார்ப்பாங்க ?
நாடகம் பார்க்கிறவனையும் நடிக்கிறவனையும் கூத்தாடின்னு வேறு சொல்றாங்க.

ஆக...
எதைச் செய்தாலும் உலகம் குறை சொல்லும்.
இந்தியாவில்
ஹாக்கி..
பேட்மின்டன்
செஸ்
டென்னிஸ்
கால்பந்து
கைப்பந்து
சிலம்பம்
மல்யுத்தம்
ஜல்லிக்கட்டு
கபடி
இன்னும் நிறைய விளையாட்டு இருந்தது.
பெண்களுக்குக் கூட அம்மானைன்னு ஒரு விளையாட்டு.
பல்லாங்குழி.
இவை எல்லாமே காணாமல் போச்சு.
கிரிக்கெட் மட்டும் மட்டை போடுது.
அதையும் கொஞ்சம்பேரு கழுவி ஊத்திட்டு இருக்காங்க.

மற்றபடி இப்போ வயசு வித்தியாசமில்லாம விளையாடுற ஒரே விளையாட்டு
" கேன்டி கிரஷ் சாஹா "தான்.

பேசாம
டோனியும்
சுமித்தும்
பொல்லார்டும்
மிஸ்பாவும்
கம்ப்யூட்டர்ல உக்காந்து
கேன்டி கிரஷை கிண்டி கிண்டி
விளையாடினா பிரச்சினையே இருக்காது.

மோடியும்
நவாஸ் ஷெரீபும் கூட விளையாடலாம்.
காஷ்மீர் பிரச்சினை காணாமல் போயிடும்.

@ சரி ...
இந்த பதிவு யாருக்கு ?
என் மதிப்புக்கும்
மரியாதைக்குமுரிய
ஒரு " பெருசு "க்கு !
Abu Haashima
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails