by
சுவனப் பிரியன்
வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?
'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.'
குர்ஆன் 22:40
பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவ தற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Wednesday, September 25, 2013
Wednesday, September 18, 2013
எதிரி
நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.
நான் 'அத்மகாம்' பாலத்தை நெருங்கினேன். எனது சகோதரனின் வீடு நேரெதிர்ப் புறத்தில் அமைந்திருந்தது. அதனை நெருங்க எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும். திருடனைப் போல வலதுக்கும் இடதுக்கும் எனது பார்வையைச் செலுத்திய நான், என்னையே தைரியப்படுத்திக் கொண்டு தேசத்தின் எல்லையைக் கடந்து செல்ல முயன்றேன். எனினும், சில அடிச்சுவடுகளைப் பதித்து முன்னேறிச் செல்கையில் பலத்த சப்தத்தோடு கூக்குரலிடும் ஓசையைக் கேட்டேன்.
'நில்!'
நான் செய்வதறியாது அவ்விடத்திலேயே சிலையாக நின்றேன். முன்னே பார்த்த எனக்கு, துப்பாக்கியை நீட்டியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தென்பட்டனர்.
"இந்தியனொருவன்" என எனது முக லட்சணத்தைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் கத்தினான்.
"கைது செய் அவனை" என அடுத்தவன் கத்தினான்.
"இல்லை...இல்லை... ஐயா நான் இந்தியனில்லை. அதே போல பாகிஸ்தானியனும் இல்லை. நானொரு காஷ்மீர்வாசி. அதோ அங்கே கேரனிலிருக்கும் சிறிய வீடொன்று தென்படுகிறது அல்லவா? அதுதான் எனது வீடு. ஆற்றின் மறுகரையிலிருக்கும் அந்தச் சிறிய வீடும் தென்படுகிறது அல்லவா? அங்கேதான் எனது சகோதரன் வசிக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவருக்கென்று கூற அங்கு யாரும் இல்லை. அவரது உதவிக்கு யாராவது வரும்படி தகவலொன்று கிடைத்தது. ஐயா, தயவுசெய்து எனக்கு ஒரு அரை மணித்தியாலம் கொடுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதெனப் பார்த்து, முடிந்தால் மருந்துகளும் வாங்கிக் கொடுத்து..சிலவேளை அது தண்ணீர் மாத்திரமாகவும் இருக்கலாம்...அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்."
எனது கழுத்தில் துப்பாக்கிப் பிடியால் தாக்கப்பட்டேன். எனது இரு பாதங்களுக்குக் கீழே பூமி அதிர்வதைப் போல உணர்ந்தேன். அவர்கள் என்னை அவர்களது பங்கருக்கு இழுத்துச் சென்றனர்.
Labels:
A.G.ATHTHAR,
காஷ்மீர்,
சமூகநோக்கு,
சமூகம்,
சிறுகதை,
திண்ணை,
நிகழ்வுகள்,
விடிவெள்ளி
Thursday, May 24, 2012
விடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி !
அழகிய பெண்களின் படங்களை முகப்பில் சூடிக் கொள்ளாத, சினிமாக் கவர்ச்சி
மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாத, சிறு பிள்ளைகளுக்குக் கூட ஒரு
நல்ல பரிசாக வாங்கிக் கொடுத்துவிடக் கூடியதோர் பெறுமதியான பத்திரிகையாக
நான் விடிவெள்ளியைக் காண்கிறேன். இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான
இஸ்லாமியரின் உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகளை மட்டுமே
தாங்கி வரக் கூடிய ஊடகங்கள், அன்றும் இன்றும் நம் நாட்டில் மிக மிகக்
குறைவாகவே உள்ளன. முஸ்லிம்களுக்கென்றொரு தனியானதொரு ஊடகம் அவசியமாக
உள்ளதென்பது எம்மில் பலராலும் உணரப்பட்டுள்ள இவ்வேளையில், விடிவெள்ளியானது
இச் சிறுபான்மை இனத்தவருக்காகவே வாராவாரம் தொடர்ந்தும் வெளிவருவது
மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஒன்றாக அளிக்கிறது.
Labels:
சமூகம்,
விடிவெள்ளி,
விமர்சனங்கள்
Monday, June 13, 2011
தற்செயலாய் வீடு உருவாகுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
ஏ, பி என்று இருவர் ஒரு காட்டிற்குள் சென்றனர். அங்கே ஒரு வீட்டை கண்டனர். ஏ உடனே ஒரு நோட்டை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.
பி: (ஆச்சர்யத்துடன்) என்ன செய்கின்றீர்கள்?
ஏ: இவ்வளவு அழகான வீடு நிச்சயமாக இயற்கையால் பல லட்ச ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்......அது சம்பந்தமாகத்தான் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றேன்.....
பி: இது அறிவுக்கு ஒத்து வரவில்லை. இதை யாராவது கட்டியிருக்க வேண்டும்...
ஏ: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்? இயற்கையால் இந்த வீடு உருவாகியிருக்க வாய்ப்பில்லையா?
பி: ஆம். உள்ளே வாருங்கள்....(உள்ளே செல்கின்றனர்). இங்கே பாருங்கள், அறைகள் எல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. இயற்கை தற்செயலாக ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கலாம், ஆனால் நேர்த்தியான ஒரு அமைப்பை பலவித கணக்குகளோடு உருவாக்க முடியுமா?
ஏ: ஏன் முடியாது?
Sunday, November 28, 2010
பெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு என்ன…?
மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சங் பரிவாரங்கள் தங்களது சதித்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திட எடுத்துக் கொண்ட வலிமையான ஆயுதம்தான் “அவதூறு பிரச்சாரம்”
நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி கலாச்சார ரீதியாக, மதரீதியாக, பொருளாதார ரீதியாக, எப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை பாமர மக்களிடம் பரப்ப இயலுமோ அப்படியெல்லாம் பரப்பி வருகின்றனர் இந்த கோயபல்ஸின் வாரிசுகள்.
உலக அளவில் நவீன ஊடகங்கள் வழியாக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக சமீப காலமாக ‘ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயரும் சமூகங்களால் ஏற்படும் புவி, அரசியல், பொருளாதார மாறுதல்கள்’ என்கிற சமூகவியல் ஆய்வுகளின் தகவல்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கி
இன்னும் 30 வருடங்களில் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சதவீதம் பெரும்பான்மையாக மாறிவிடும் என்கிறது இந்த ஆய்வுகள். குறிப்பாக ஜெர்மனி, லண்டன் மாநகரம், பிரான்ஸ் போன்ற நாடுகள் இதில் அடக்கம்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சி விகிதம் 225 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒருபுறம் இருக்க,
18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் எப்படி இஸ்லாத்துக்கு எதிராக பொய்களையும் புரட்டுக்களையும் அள்ளிவிட்டு இஸ்லாமிய நிலப்பரப்பில் புகுந்து அரசுகளைக் கவிழ்த்து, அபகரித்துக் கொண்டார்களோ, அது போல தற்போது சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய கொடுமதியாளர்களின் உலகளாவிய பொருளாதாரச் சுரண்டலுக்கு நிரந்தரமான முடிவுரை எழுதும் ஆற்றலும் வல்லமையும் வலிமையான கருத்தியல் கோட்பாடும் இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது என்பதால் அவதூறுகளை தங்களது பிரச்சார சாதனங்கள் மூலம் அயராது அள்ளிவிடுகின்றனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் இந்தியாவிலும் பெரிய அளவுக்கு எதிரொலித்திருக்கிறது.
கடந்த 25 வருடங்களாக உலக அளவிலும் இந்திய அளவிலும் இடைவிடாது முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அள்ளிவிடப்பட்டு வந்த இந்த அவதூறு மூட்டைகள் தற்போது நவீனமெடுத்து தொழில்நுட்ப ரீதியாக வலிமை பெற்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக அயராமல் ஒலித்து வருகின்றன.
முஸ்லிம் என்கிற அடையாளத்தை தாங்கிய அனைவருமே பயங்கரவாதிகள் என்று ஊதி ஊதி பாமர மக்களையும் நம்பவைத்து விட்டனர். உலக அளவில் ஓங்கி ஒலிக்கப் பட்டு வரும் இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இந்தியச் சமூகத்திலும் உலககச் சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
நடுநிலை பேணுவோர், ஜனநாயக சக்திகள் சத்தியத்தை நிலைநிறுத்திட தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அவதூறு போரில் தடுப்பு அரணாக வீற்றிருக்கின்ற போதிலும் அவதூறு பிரச்சாரத்தின் வலிமை சில நேரங்களில் தடுப்பு அரணையும் தாண்டிச் செல்கிறது.
இதன் விளைவுகளை முஸ்லிம் சமூகம் பெருமளவில் சந்தித்து வருகின்றது. நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் இது குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
“They (Muslims) carry a double burden of being labeled as ‘‘anti national’’ and as being “appeased” at the same time. Wile Muslims need to prove on a daily basis that they are not “anti national” and “Terrorist”.
“தேச விரோதிகள்” என்றும் “தாஜா செய்யப்படுகின்றனர்” என்றும் ஒரே நேரத்தில் குத்தப்பட்ட இரட்டை முத்திரையை இரட்டைச் சுமைகளாக முஸ்லிம்கள் சுமந்து கொண்டு இருக்கின்றனர்.
நாங்கள் “தேச விரோதிகளோ” “பயங்கரவாதிகளோ” அல்ல என்று தினமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்’’ – சச்சார் கமிட்டி அறிக்கை (பக்கம் – 11)
இந்திய நாட்டில் வேறெந்த சமூகத்திற்கும் இதுபோன்ற நெருக்கடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சமூக பாதிப்புகள் என்பது பல்வேறு மட்டத்தில் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக கடும் துன்பங்களை முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகிறது.
பெருநகரங்கள் என்று சொல்லப்படும் மும்பய், டெல்லி போன்ற நகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. தொழில் செய்வதற்கு ஏற்ற இடங்களோ, கடைகளோ மறுக்கப்படுகின்றன. சிறந்த பள்ளி கல்லூரிகளில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஏறக்குறைய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களாக வடமாநில முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர். இது ஒரு தேசிய அவமானம். 63 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டதிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.
இது குறித்து நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்கள் தனது ஆய்வறிக்கையில் கவலையோடு குறிப்பிட்டிருந்தும் கூட அரசின் மெத்தனப் போக்கால் இந்தப் பிரச்சினை தற்போது பெரிதாகி வருகிறது. சில நாட்கள் முன்பு சிழிழி-மிஙிழி என்ற செய்திச் சேனல் முஸ்லிம்கள் பெரு நகரங்களில் புறக்கணிக்கப்படுகின்றனரா என்கிற ஆய்வை நடத்தி செய்தி வெளியிட்டிருந்தது. அதில் முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில்லை என்று வீட்டின் உரிமையாளர்கள் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆந்திராவையும் கேரளாவையும் மத பயங்கரவாதிகள் நிறைந்த பகுதிகள் என்று வழக்கம் போல மத்திய உளவு அமைப்புகள் தங்களது வேலையைக் காட்டி வருகின்றனர். இவற்றிற்கு உள்துறைச் செயலாளர் நி.ரி. பிள்ளையும் ஒத்து ஊதுகிறார்.
சென்னையில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் என்றாலே வீடுகள், கடைகள் மறுக்கப்படுகின்ற காட்சிகளை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை உருவாகி உள்ளது.
வட இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகளின் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்கள் இதற்கு காரணம் என்றாலும் சகோதர வாஞ்சையுடனும் அனைவரும் உறவுகளைச் சொல்லி அழைத்திடும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. இது ஒரு தேசிய அபாயம்.
தமிழ்ச் சமூகத்தின் தந்தை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணிலும் இத்தகைய மனப்போக்கு மாறிவருவது மிகவும் வேதனையை தருகிறது.
சமூக பகிஷ்கரிப்பு என்கிற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டு வரும் முஸ்லிம் சமூகம் இதிலிருந்து எப்படி விடுபடுவது? பாதிக்கப்பட்ட மக்களான முஸ்லிம் சமூகம் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீளுவது? விரிவான கண்ணோட்டத்தோடு அணுக வேண்டிய விவகாரம் இது.
ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூகம் தன்னைப் பற்றி எந்த அளவிற்கு சுயபரிசோதனை செய்து கொள்கிறதோ அதை வைத்தே அமையும்.
Subscribe to:
Posts (Atom)


