Saturday, September 18, 2010

ஆளூர் ஷா நவாஸ் என்றொரு ஆளுமை!

ஆளூர் ஷா நவாஸ். ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க தமிழ் முஸ்லிம் ஆளுமையாளர்.
இருபத்து எட்டே வயதான இந்த இளைஞர் இன்றைய முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு சமூக, கலை, இலக்கிய தளங்களில் முஸ்லிம்களின் போதாமை ஒரு காரணம் என்பதைத் தெளிவுபட உரைக்கிறார்.
குஜராத் இனப்படுகொலைகளின் போது, வாய்விட்டு அரற்றவும் வழியற்றுப் போன முஸ்லிம் சமூகத்தில் இவர்தான் 'தோட்டாக்களை' தொகுத்தார், அறச்சீற்றக் கவிதைகளாக.
"முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றியும், முஸ்லிம்களின் அளப்பரிய பங்களிப்புகளைப் பற்றியும் இங்கே முஸ்லிம்கள் தான் பேசியாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது,இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம்களுக்காக மற்றவர்களும், மற்றவர்களுக்காக முஸ்லிம்களும் பேசுகின்ற நிலை மலர வேண்டும்" என்று ஆதங்கப்படுகிற ஷா நவாஸ் ஆவணப்படங்கள் வாயிலாக தமிழக முஸ்லிம்களின் குரலை ஓங்கி ஒலித்துவருகிறார். இவருடைய இரண்டு ஆவணப்படங்களும் வியக்கத்தக்க வெற்றியையும் இலக்கையும் எட்டின என்பதிலிருந்தே இவருடைய திறனைப் புரிந்துகொள்ளலாம். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் பறைசாற்றிய "பிறப்புரிமை" என்கிற ஆவணப்படம் ஊடகத்துறையிலும், அரசியல், சமூக அறிஞர்களிடத்திலும் அதிர்வலைகளை உண்டாக்கியது, உண்மை உணரப்பட உதவியது என்றால் இரண்டாவது படமான "கைதியின் கதை" - ஊடகங்களால் பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்ட ஒருவரை அரசியல் பலிகடாவாக அநியாயச் சிறையில் நீண்ட காலம் வாடுவதிலிருந்தும் விடுவிக்கத் துணைபுரிந்தது.
அண்மையில் கூட, முஸ்லிம்கள் திருமாவளவனை நம்பலாமா? என்ற கேள்வி தொனிக்க, 'சமநிலைச்சமுதாயம்' இதழில் இவர் எழுதிய கட்டுரை, விடுதலைச் சிறுத்தை திருமா வளவனிடமிருந்து "நீங்கள் என்னை நோக்கி என்ன கேள்வி எழுப்பினாலும், எவ்வளவு சந்தேகமடைந்தாலும் அல்லது பழி சுமத்தினாலும் நான் அதைப் பற்றி கவலைப் படாமல் சகிப்புத்தன்மையோடு இருந்து, தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் சக்தியாய் எழுச்சி பெற உறுதியாகப் பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில், விடையாகச் சொல்லிக் கொள்கிறேன்" என்ற விடையைக் கொண்டுவந்தது.
முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று அப்பட்டமாகவும் ஆதங்கமாகவும் கூறும் ஷா நவாஸ், சமூகத்தின் சாதனைகளையும், சரித்திரங்களையும் ஆவணப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்தவராக, தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் அரசியல் தலைவரான காயிதேமில்லத் பற்றிய ஆவணப்படத்தை, தன்னுடைய மூன்றாவது ஆக்கமாக, எடுத்துவருகிறார்.
தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து, கலை இலக்கிய ஊடகத் தளத்தில் தீவிர செயலாற்றி வரும் இந்த ஆளூர் இளவல், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களாலும் ஆதரிக்கப்படவேண்டியவர்.
இவருடைய வலைப்பதிவு முகவரி:http://aloorshanavas.blogspot.com/
--
BABUJI
by mail fromBabu ji
 ------------------------------------------------------------------------------------------------------
ஆளூர் ஷா நவாஸ்பிறப்பிடம் கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமம்
--------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் படிக்க :காயிதே மில்லத் ஆவணப்படம் ஏன் எதற்கு?



மேலும் படிக்க :திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றம


Prof A.Marx, Ansari, Aloor Shanavas, Dawood miakhan 
ஆளூர் ஷா நவாஸ் இயக்கத்தில்,ST கூரியர் நிறுவனர் அன்சாரி அவர்களின் தயாரிப்பில், கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் உருவாகி வருகிறது. 06 -08 -2009 அன்று சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது.
.மேலும் படிக்க :ஆளுர் ஷாநவாஸ் இயக்கிய பிறப்புரிமை ஆவணப்படம்


1 comment:

mkr said...

நிச்ச்யம் பாரட்டகுரியவர்.முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரது பணி தொடர்ந்து பயன்பட துவா செய்வோம்

LinkWithin

Related Posts with Thumbnails