Thursday, September 30, 2010

இந்தியாவிடம் தோற்கும் அமெரிக்கா! ஒபாமா கவலை

அயோவா: நாட்டில் கல்வியறிவு வெகுவாக குறைந்து கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் அமெரிக்க இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், கல்வியறிவு மற்றும் வேலை வாய்ப்பில் இந்தியா மற்றும் சீனாவிடம் அமெரிக்கா தோல்வியடைந்து வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.
அயோவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் இளைஞர்கள் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுவது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் உலக அளவில் வேலைகளுக்கு போட்டிபோடும் நிலையை அமெரிக்கா இழந்து வருகிறது. இந்தியா, சீனா நாடுகள் கல்விக்கு அதிக தொகை செலவிட்டு வருகின்றன. கல்வி நிலையங்களை பொறுத்தவரை நாம் முதலிடத்தில் இருக்கிறோம். ஆனால் மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை நாம் 12வது இடத்தில் இருக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்றார்.
உலகில் அளவில் அதிக உற்பத்தி செய்யும் நாடாக இருந்த அமெரிக்கா, அந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவ தொடங்கி உள்ளது முன்பை விட இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்கள் மக்களுக்கு கல்வி அறிவு புகட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா இந்த நாடுகளிடம் விரைவிலோ அல்லது சில காலம் கழித்தோ அவர்கள் நம்மை முந்தி விடுவார்கள். அவர்கள் தங்கள் முன்பை விட அதிக ஏற்றுமதியும் செய்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் எரிசக்திக்கான ஆதாரங்களை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டு உள்ளன. எதிர்கால வேலைகள் எல்லாம் அவர்கள் கைகளில் தான் இருக்கும். பட்டதாரிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் குறைந்து விட்டன. புஷ் ஆட்சி காலத்தில் தான் சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மை குறைந்து போனது கல்வித் துறையில் பின் தங்கியுள்ளதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு என்றார்.
Source : http://www.inneram.com/2010100110929/america-defeat-by-india-soon-says-obama

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails