Wednesday, September 15, 2010

டெலிவிஷன் ஒரு கருத்தடை சாதனமா?


[ மக்கள் தொகைப் பெருக்கத்தை உண்மையிலேயே கட்டுப்படுத்த வேண்டுமென்று நம்முடைய அரசாங்கம் உண்மையாகவே தீவிரமாகக் கருதுமேயானால், அது உருப்படியான வழிகளைச் சிந்திக்க வேண்டும். பொறுப்புள்ள ஒரு அமைச்சர் இப்படி இந்த விஷயத்தை கேலிக்கூத்தாக மாற்றுவது எந்த விதத்திலும் சரியல்ல. டெலிவிஷன் பார்த்தால் கணவனும் மனைவியும் 'இணைவதற்கு' நேர மிருக்காது என்ற பொருள்பட அவர் சொல்வது எந்தளவுக்கு சரி என்பதற்கு தமிழ்நாட்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். தற்போது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக டெலிவிஷன் பெட்டிகள் இருக்கின்றன. தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழும் கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாக இன்று டெலிவிஷன் இருக்கிறது. தண்ணீர் இல்லாத கிராமங்கள் இருக்கும். ஆனால், கேபிள் அல்லது டிஷ் இல்லாத கிராமம் தமிழகத்தில் நிச்சயமாக இருக்காது. அந்த அளவுக்கு டெலிவிஷன் என்பது தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறது. ஆனால், டெலிவிஷன் பார்ப்பவர்கள் அதன்பிறகு, களைப்படைந்து தூங்கி விடுவார்கள் என்று அமைச்சர் சொல் வதைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், நம்முடைய சேனல்களில் பெரும்பகுதியை சினிமாக்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அந்த சினிமாக்களில் வரும் பாடல் காட்சிகள் எப்படி நம்மிடையே பாலுணர்வைத் தூண்டுகின்றன என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.
அதுவும் இரவு நேரம் என்றால், பல்வேறு சேனல்களில் கொஞ்சம் தாராளமான சூடு கிளப்பும் பாடல்கள் ஒளிபரப்பப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு தூங்கிவிடுவார்கள் என்று சொன்னால், குழந்தைகள்கூட அதை நம்பாது. உண்மையில் டெலிவிஷன் என்பது இன்று மக்களுக்குப் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தூண்டுகோலாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.] எளிதான, புதிய குடும்பக் கட்டுப்பாட்டு முறை ஒன்றை நம்முடைய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்!
டெலிவிஷன் பார்த்தால், குழந்தை பிறக்காது என்பது தான் அவருடைய கண்டுபிடிப்பு.
உலக மக்கள் தொகை நாள் நிகழ்ச்சியன்றில் கலந்துகொண்டு பேசும்போதுதான், அமைச்சர் இந்த 'அபூர்வமான' ஐடியாவை தெரிவித்திருக்கிறார். ''ஒவ்வொரு கிராமத் திலும் மின்சார வசதி செய்து தரப்பட்டால்... மக்கள் நள்ளிரவு வரை டி.வி. பார்ப்பார்கள். அப்புறம் தூங்கிவிடுவார்கள். அவர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்காது. மின்சாரம் இல்லையென்றால், செய்வதற்கு வேறு எதுவும் வேலை இருப்பதில்லை, குழந்தை உற்பத்தி செய்யும் வேலையைத் தவிர...'' என்று கூறியிருக்கும் அமைச்சர்,
நான் ஏதோ தமாஷாக இதைச் சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். சீரியஸாகத்தான் பேசுகிறேன். டெலிவிஷனின் தாக்கம் அப்படிப்பட்டது. நம்முடைய நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை டெலிவிஷன் மூலம் எண்பது சதவிகிதம் குறைத்துவிட முடியும்!'' என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.
நம்முடைய சுகாதார அமைச்சர் 'டெலிவிஷன் டெக்னிக்'ஐ சொன்னதோடு,
''திருமணம் செய்து கொள்வதைத் தள்ளிப்போடுங்கள். முப்பது வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டால், குழந்தை பிறப்பது குறையும்...'' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். உலக மக்கள் தொகை குறித்து கடந்த மார்ச் மாதத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
2050-ம் ஆண்டில் உலகின் பாதி மக்கள் தொகை இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, அமெரிக்கா, தான்ஸானியா, வங்கதேசம் மற்றும் காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளில் இருக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. அப்போது உலக மக்கள் தொகை 910 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும், இப்போது உள்ளதைவிட அது 230 கோடி அதிகம் என்றும் ஐ.நா. கூறியிருக்கிறது.
2009-க்கும் 2050-க்கும் இடையில் பணக்கார நாடுகளின் மக்கள் தொகை உயராமல் 120 கோடி என்ற அளவிலேயே இருக்கும். ஆனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் மக்கள் தொகையோ, தற்போதுள்ள 560 கோடியிலிருந்து 790 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்களில் 86 சதவிகிதம் பேர் ஏழை நாடுகளாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில்தான் இருப்பார்கள் என்று ஐ.நா. சபை கூறியிருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தமட்டில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும்தான் போட்டி. இப்போது சீனா முதலிடம் வகிக்கிறது. ஆனால், சீனாவை இந்தியா 2028-ம் ஆண்டில் முந்திவிடும் என்று ஐ.நா. சபை கூறியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பிறகு, நம்முடைய நாட்டின் மக்கள் தொகை மூன்று மடங்காகப் பெருகி, இப்போது அது 120 கோடியைத் தாண்டிவிட்டது.
நம்முடைய மக்கள் தொகை ஆண்டுக்கு 1.6 சதவிகிதம் என்கிற விகிதத்தில் வளர்ச்சி கண்டுவருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகின் நிலப்பரப்பில் இந்தி யாவின் அளவு மூன்று சதவிகிதம்தான். ஆனால், உலக மக்கள் தொகையிலோ, இந்தியாவின் பங்கு பதினேழு சதவிகிதம்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பொறுத்த வரை, பணக்கார நாடுகளில் அது மெதுவாகவே உள்ளது. ஆனால், வறுமை அதிகம் உள்ள ஏழை நாடுகளிலோ அதன் வளர்ச்சி விகிதம் பணக்கார நாடுகளைப் போல மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புகளின் காரணமாக மக்களின் ஆயுள் கூடியிருப்பதால் இறப்பு சதவிகிதம் குறைந்துவருவதும், அதே நேரத்தில் பிறப்பு சதவிகிதம் அதிகரித்து வருவதும்தான் இதற்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தொகைப் பெருக்கத்தை உண்மையிலேயே கட்டுப்படுத்த வேண்டுமென்று நம்முடைய அரசாங்கம் உண்மையாகவே தீவிரமாகக் கருதுமேயானால், அது உருப்படியான வழிகளைச் சிந்திக்க வேண்டும்.
பொறுப்புள்ள ஒரு அமைச்சர் இப்படி இந்த விஷயத்தை கேலிக்கூத்தாக மாற்றுவது எந்த விதத்திலும் சரியல்ல. டெலிவிஷன் பார்த்தால் கணவனும் மனைவியும் 'இணைவதற்கு' நேர மிருக்காது என்ற பொருள்பட அவர் சொல்வது எந்தளவுக்கு சரி என்பதற்கு தமிழ்நாட்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். தற்போது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக டெலிவிஷன் பெட்டிகள் இருக்கின்றன. தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழும் கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகள் எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாக இன்று டெலிவிஷன் இருக்கிறது.
தண்ணீர் இல்லாத கிராமங்கள் இருக்கும். ஆனால், கேபிள் அல்லது டிஷ் இல்லாத கிராமம் தமிழகத்தில் நிச்சயமாக இருக்காது. அந்த அளவுக்கு டெலிவிஷன் என்பது தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறது. சேனல்களின் எண்ணிக்கையும் குறைவில்லை. டெலிவிஷன் இருப்பதால், மக்கள் இரவுகளில் நீண்ட நேரம் விழித்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
ஆனால், டெலிவிஷன் பார்ப்பவர்கள் அதன்பிறகு, களைப்படைந்து தூங்கி விடுவார்கள் என்று அமைச்சர் சொல் வதைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், நம்முடைய சேனல்களில் பெரும்பகுதியை சினிமாக் கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அந்த சினிமாக்களில் வரும் பாடல் காட்சிகள் எப்படி நம்மிடையே பாலுணர்வைத் தூண்டுகின்றன என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.
அதுவும் இரவு நேரம் என்றால், பல்வேறு சேனல்களில் கொஞ்சம் தாராளமான சூடு கிளப்பும் பாடல்கள் ஒளிபரப்பப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
அதைப் பார்த்துவிட்டு தூங்கிவிடுவார்கள் என்று சொன்னால், குழந்தைகள்கூட அதை நம்பாது. உண்மையில் டெலிவிஷன் என்பது இன்று மக்களுக்குப் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தூண்டுகோலாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
டெலிவிஷன் சேனல்களில் ஒளிபரப் பாகும் திரைப்படக் காட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு கேபிள் ஆபரேட்டர்கள் ஆங்காங்கே நள்ளிரவு நேரங்களில் செக்ஸ் சேனல்களுக்கு இணைப்புக் கொடுக்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வருவதை நாம் பார்த்திருப்போம். இவையெல்லாம் இன்று உண்மையில் கிராமப் பகுதிகளில் மக்களிடையே பாலியல் பழக்கங்களை பாதித்து அவர்களுக்கு புதுப்புது டெக்னிக்குளை அறிமுகப் படுத்தியிருக்கின்றன.
நம்முடைய மக்களிடையே அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் பாலியல் நெகிழ்ச்சிக்கு டெலிவிஷனும் இணைய வசதியும் முக்கியமான காரணங்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால், டெலிவிஷன் என்பது பாலுறவில் ஈடுபடாமல் தடுப்பதற்கு பதிலாக, மக்களிடையே பாலுறவுக்கான வேட்கையைத் தூண்டுவதாகவே இருக்கிறது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், நம்முடைய அமைச்சர் டெலிவிஷனை சிறந்ததொரு கருத்தடை சாதனம் என்ற ரேஞ்சுக்குப் பேசியிருப்பது நல்ல தமாஷ்.
முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டால், குழந்தை பிறப்பு குறையுமென்று அமைச்சர் சொல்லியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்கிற பெண்களைக் காட்டிலும், சற்றே வயதாகி திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தைகள் குறைவாகவே பிறக்கின்றன என்று கூறியுள்ளன.
ஆனால், இதில் இன்னொரு பிரச்னை இருக்கிறது,
வயது கடந்து திருமணம் செய்து கொண்டு அதன்பிறகு, குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மருத்துவ ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. 20 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு அவ்வளவாக ஏற்படுவதில்லை. அதற்கு மேல் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் வரை கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயது கடந்து கருத்தரிக்கும் பெண்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு முதலான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமெனவும், கருப்பை பலவீன மடைவதாலும் கரு வாய்ப் பகுதி இறுகிவிடுவதாலும், பிரசவத்தின்போது சிரமம் ஏற்படுமென்றும் மருத்துவத் துறையினர் சொல்லுகின்றனர். அது மட்டுமின்றி, முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதென்றும் அவர் கள் கூறுகின்றனர்.
சமூக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பிழைபட்ட கருத்துகளைத்தான் நம்முடைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அரிய கண்டுபிடிப்பு போலப் பேசியிருக்கிறார்.
சுகாதாரத் துறைக்கு அமைச்சராக வருபவர்கள், எல்லோரும் மருத்துவ நிபுணர்களாக இருக்க வேண்டுமென நாம் எதிர் பார்க்க முடியாது. ஆனால், அவர்கள் பொறுப்பு உணர்வோடு நடந்துகொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதில் தப்பில்லை. ஆசாத்ஜி! கருத்துகளை உதிர்க்கும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள்!
நன்றி: ரவிக்குமார்
http://nidur.info/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails