அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது.
"இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்".
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..
இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.
21.நீங்கள் அமைதிபெற
உங்களிருந்தே துணைவியரை
உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும்
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சன்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் பாகம்:21---30 அர்ரூம்]
74.எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத்துணைகளிலிருந்தும்,மக்ககளிலிருந்தும்,
எங்களுக்கு கண்குளிரச்சியைத் தருவாயாக!
[உன்னை] அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும்
எங்களை ஆக்குவாயாக!
என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் பாகம்:19---25.அல் ஃபுர்கான்]
---------------------------------
"நாம் தாய்தந்தை மீது கொள்ளும் அன்பு
கணவன் மனைவி மீது கொள்ளும் அன்பு
பெற்றபிள்ளைகள் மீது கொள்ளும் அன்பு
ஏழை எளியவர்களின் மீது கொள்ளும் அன்பு
உற்றார் உறவினர் மீது கொள்ளும் அன்பு
காதலன் காதலியின் மீது கொள்ளும் அன்பு
உற்ற தோழமைகளின் மீது கொள்ளும் அன்பு
இவையனைத்தையும் முக்கியம்தான்
ஆனால்
அதைவிட பலமடங்கு இறைவன்மீது
அன்பு கொள்ளவேண்டும் ஏனென்றால்
இப்பூமியில்
நம்மைப் படைத்து பாதுக்காத்து பரிசுத்தப்படுத்தி
நமக்கு அன்பான தாய்தந்தை தந்து
நமக்கு அழகானமுறையில் உருவம்தந்து
பிறக்கவைத்து உயிர்வாழச்செய்துள்ளான்
உடல்தந்து உயிர்தந்து உலகில் வாழச்செய்த
இறைவன் தான் நமக்கு உயர்ந்தவன்."
-அன்புடன் மலிக்கா
No comments:
Post a Comment