SELAMAT HARI RAYA
"உபயம்" TO: இந்த ஆர்டிக்கில் எழுத தூண்டுதலாக இருந்த சகோதரர்கள் அபு இப்ராஹிம் , தாஜுதின், சாகுல் , யாசிர், உன்னைபோல் ஒருவன், கிரவுன்.
மலேசியாவில் பெருநாள்.... அடிப்படையில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் நாம் செய்யாத சில நல்ல விசயங்களை இந்த மலாய்க்காரர்கள் செய்கிறார்கள். அதாவது பெருநாள் தொழுகை தொழுதவுடன் வீட்டுக்கு வந்து தாய் தகப்பனிடம் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சலாம் கொடுத்து பிறகு "மன்னிப்பு" கேட்பது. சமயத்தில் நான் நினைப்பது உண்டு .. இந்த மாதிரி நம் ஊரிலும் இருந்தால் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சினைகள் ஓய்ந்து இருக்குமே. .. அந்த நாள் எப்போது தான் வருமோ..
[ கடப்பாசி , வட்டிலப்பம் பற்றி ஒன்னும் சொல்லலியே எனும் நண்பர்கள் கொஞ்சம் அவதானிக்க!]
சிலரின் பெற்றோர்கள் உயிருடன் இல்லாத பட்சத்தில் மையவாடிக்கு போய் அவர்களுக்காக யாசின் ஓதுவது [ சின்ன பிள்ளைகள்கூட ] அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு வருவார்கள். " நல்ல நாளும் பெரியா நாளும் யான் வாப்பா மைத்தாங்கரைக்கு போரா " என்று எந்த பெரியவர்களும் ” ப்ரேக்” போடுவதில்லை. ஏதோ நாம் மட்டும் "சாகாவரம்' வாங்கி வந்த மாதிரி.
அடுத்த மிகப்பெரிய விசயம் “BALIK KAMPUNG’ [ கிராமம் திரும்புதல்]
மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூர் எனபது அனைவருக்கும் தெறிந்ததே, ஆனால் இங்கு இருப்பவர்களின் பூர்வீகம் மற்ற ஊர்களாக [கிராமம்] ஆக இருக்கும். நோன்பு ஆரம்பத்திலேயெ இந்த பஸ், ரயில் டிக்கட் எல்லாம் விற்று முடிந்துவிடும். அதையும் தாண்டி பெருநாளைக்கு முதல் நாள் [ அல்லது 2 நாளைக்கு முன் ] எக்ஸ்பிரஸ் ஹைவே, நேசனல் ஹைவே எல்லாம் பிதுங்கும். ஒரு முரை இந்த டிராபிக்கில் மாட்டி பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வர 4 மணி நேரம் பிடிக்கும் ஹைவேயில் 10 மணி நேரம ஆகி நத்தையை விட கேவலமாக நகர்ந்து , இடையில் உள்ள ஹைவே டாய்லெட் எல்லாம் உள்ளே புக முடியாத அளவு மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிந்ததால் அந்த இடத்திலேயெ முடிவெடுத்தேன்
• இந்த மாதிரி பெருநாள் காலங்களில் அவுட் ஸ்டேசன் தவிர்ப்பது.
• ஆட்டொமேடிக் கியர் கண்டுபிடித்து இவ்வலவு நாள் ஆகியும் 'எனக்கு மேனுவல் கார்தான் பிடிக்கும் என்ற மங்கம்மா / மங்காத்தா சபதத்தை கைவிடுவது.
மலேசியாவின் ஹைவெ ஒரு வித்யாசமானது. மலேசியாவின் தென்கோடி சிங்கபூரிலிருந்து வட எல்லை தாய்லாந்து வரை [அலியார்சாரின் பூகோளம் க்ளாஸுக்கு கட் அடித்துவிட்டு தூங்கியவர்கள் கூகிள் மேப் நோக்கவும்] ஏறக்குறைய 1100 கிலோ மீட்டரையும் ட்ராபிக் லைட் இல்லாமல் கடக்கலாம், அவ்வளவு நீட்டமான, நீட்டான ஹைவே. இப்போது இந்தியாவில் நிறைய ஹைவே ப்ராஜக்ட் இவர்கள் தான் செய்கிறார்கள்.
'பெருநாள் அன்று பெருநாள் தொழுகை இங்கு உள்ள டெலிவிசனில் நேரடி ஒளிபரப்பு உண்டு. தமிழ் புத்தாண்டுக்கு தமிழுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசும் / உளரும் நடிகைகளை வைத்து பேட்டி எடுக்கும் கொடுமை மாதிரி எதுவும் இவர்கள் செய்வதில்லை.
இங்கு உள்ள TV3 இஸ்லாத்தின் வளர்ச்சியையும் சரித்திரங்களையும் JEJAK RASUL என்ற நிகழ்ச்சியின் மூலம் இதுவரை 20 எபிஸோட் வரை எடுத்து மக்களுக்கு காட்டி இருக்கிறது. [ மலாய் மொழியில்] ஒரு எபிஸோட் = 30 நாட்கள், ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு லொகேசன்.. இதுவரை இவர்கள் கவர் பண்ணாத நாடே இல்லை எனலாம். இந்த வருடம் இவர்கள் கவர் செய்த இடங்களில் 30 நோன்பும் கொரியாவிலும் , ஜப்பானிலும் எந்த அளவு இஸ்லாம் வளர்த்து இருக்கிறது என்றால்... வார்த்தைகளுக்கு கட்டுப்படாத அந்த மக்கள் ... ஈமானின் பலத்தை இவர்களிடமிருந்து நாம் கற்ருக்கொள்ள நிரைய இருக்கிறது.
பிள்ளைகளுக்கு பெருநாள் காசு கொடுப்பதைகூட கலைநயத்துடன் ஒரு அழகிய என்வெலெப்பில் வைத்து செய்வார்கள். அதன் பெயர் "அங்பாவ்' இந்த சிஸ்டம் சீனர்களிடம் “சுட்டது’.
மற்றபடி பெருநாள் சாப்பாடு [ இப்பதான் நம்ம சப்ஜெக்ட்டுக்கு இந்த ஆளு வர்ராய்ன்யா என்பது காதில் விழுகிறது ]
நாம் எல்லாம் தென் இந்திய முஸ்லிம்களாக இருப்பதால் நம் அதிராம்பட்டினத்து 'தொலி, [ எந்த "லி"] வட்டிலப்பம் [ஹைபர்டென்சனின் 'சத்ரு'] கடப்பாசி, இடியப்பம் , எறச்சானம் என்று வயிறு 'காந்தும்" மெனுக்கள் அதிகமாகும். அடுத்த நாளின் "மொளவுதண்ணி' , ரசத்தின் ருசியில் மீண்ட சொர்க்கம் தெரியும்.
சாப்பாடு விசயங்களை ஒரு தனி ஆர்டிக்கில் ஆக எழுதலாம்.
இப்போது புதிய சமுதாயங்களின் காலமாக இருப்பதால் ரெடிமேட்சட்டையின் அளவு ஸ்டிக்கர் கிழிக்காமலும், டிஸ்ப்லேயில் மடித்துவைத்தமாதிரியெ அயன் பண்ணாது கித்தா[ரப்பர்] செருப்பும், பாம்பு மார்க்] சென்ட் போட்டு நமக்கெல்லாம் பெருநாள் காசு தந்து வளர்த்த அந்த வலுவான அப்பாக்கள் இப்போது இல்லை. [ இவர்களை பற்றி ஒரு ஆர்டிக்கில் முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன். Infact that was my fisrt article in internet , அதிரை நிருபர் அனுமதித்தால் மறுபடியும் வெளியிடலாம், நான் அனுப்பி தருகிறேன்]
மலேசியாவில் கலர்புள்ளான விசயங்கள் கொட்டிகிடக்கிறது.
இங்கு பெருநாளை ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவார்கள். ஒவ்வொறு வார இறுதியிலும் பெருநாளைக்குறிய விருந்து இருக்கும்.
Source :http://adirainirubar.blogspot.com/2010/09/selamat-hari-raya.html
No comments:
Post a Comment