ஆஹா பேச்சு
சென்ற 04.10.09 அன்று சென்னை ஆஹா பண்பலை வானொலி 91.9-ல் என்னை கிழக்கு பாட்காஸ்ட் சார்பாகப் பேட்டி கண்டார்கள். எனது அடுத்த விநாடி, ஆல்ஃபா தியானம் ஆகிய இரண்டு நூல்களையும் பற்றி விரிவாகக் கேள்விகள் கேட்கப்பட்டன. நானும் முடிந்த அளவு பதில்களைச் சொன்னேன்.முடிந்த அளவு என்று ஏன் சொல்கிறேன் என்றால், சன் டிவியில் வணக்கம் தமிழகத்துக்காக ஒருமுறை என்னை நேர்காணல் செய்தார்கள். செய்வதற்கு முன்பே என்னிடம் இரண்டு மணி நேரம் பேசி என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று தெரிந்துகொண்டார்கள்! ஆனால் ஆஹா-வில் என்னைக் கேள்வி கேட்டவர் பொதிகை சித்ரா. தெளிவான அழகான குரல். தமிழ் இலக்கியம் படித்தவர். அதுமட்டுமல்ல. எனது நூலை ஆழமாகப் படித்தவர். எனவே அவருடைய கேள்விகள் முதல் தரமானவை. அனுபவத்தில் ஏற்பட்ட சந்தேகத்தில் முளைத்தவை. நூலில் திளைத்தவை. என்ன கேட்கலாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டு பிறகு கேட்கப்பட்டவை அல்ல.
எனது நூலை ஏற்கனவே படித்த சிலர் — சென்னை சில்க் எம்.டி. திரு விநாயகம், டாக்டர் சாருமதி, திரு ராஜேஷ், எம்.எஸ்.ஸி படிக்கும் ஒரு மாணவி, யோகா பயிற்சியாளர் திருமதி கௌசல்யா ஆகியோர் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகுந்த சந்தோஷம் கொடுத்தன.
நல்ல பதிவு. நீங்களும் இங்கே கேட்டுப் பாருங்களேன்.
No comments:
Post a Comment