Showing posts with label Country நாடு Pictures-படங்கள். Show all posts
Showing posts with label Country நாடு Pictures-படங்கள். Show all posts
Friday, October 29, 2010
அமெரிக்க நியூ யார்க் சிட்டியில் முஸ்லீம்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் அமெரிக்கா நியூ யார்க் சிட்டியில் மட்டும் 98 பள்ளிவாசல் உள்ளன.சுமார் ஒரு மில்லியன் முஸ்லீம்கள் உள்ளனர்
அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர்.
Labels:
Country நாடு Pictures-படங்கள்
Friday, September 17, 2010
பினாங்கு - 'நமது வேர்கள்'
பினாங்கு - 'நமது வேர்கள்'
இது எழுத நினைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.... ஒரு முறை நண்பர்களுடன் கதைத்தது... பிறகு.. எழுத தூண்டுகோல் ஆனது.
பினாங்கு... சின்னவயதில் கேள்விப்பட்ட 'சொர்க்கம்".
இன்றய திகதியில் என வீட்டு கொல்லைபுரத்துக்கு போர மாதிரி என்று சொல்லும் அளவுக்கு அடிக்கடி போகும் இடம் ஆகிவிட்டது
தரகர் தெருவும் , கடல்கரை தெருவும் கொஞ்சம் தலை தூக்க உதவிய ஊர்.[ ஆனாலும் அங்கு போய் வந்தவர்கள் செய்த அலப்பரை கொஞ்சம் ஒவர்.நம் ஆட்கள் பார்க்கும் வேலை கடுமையானது, ஆனாலும் பினாங்கு கவர்னர் ரேஞ்சுக்கு லந்து பண்ணும் தைரியம் அதிசயமானது.
ரயிலில் வந்து இறங்கியதும், ஒதும் பாத்திஹா, பின்னாடி ஒடி வரும் பசங்க ,… கொடுமை என்னவென்றல் அதில் அவர் மகனும் வருவான் அது அந்த ஆளுக்கு அது தெரியாது" இந்த சிதம்பர ரகசியத்தை வீட்டில் உட்கார்ந்து வெத்திலை, பாக்கு இடிக்கும் கிழவிதான் சொல்லவேன்டும், பிறகு 'என்னை உரிச்சு வச்சிருக்கான் , பிழிஞ்சு வச்சீருக்கான் என்று சர்பத் கடைக்காரர் மாதிரி உளர்வார்.
பினாங்கு ஆட்கள் வந்தவுடன் கேள்விப்படும் சுடு தண்ணி, எறச்சான்ம், சேமியா எல்லாம் கால ஓட்டத்தில் நிறைய மாசுபட்டுவிட்டது.
இவர்கள் தரும் "பல்லி முட்டாய், பிஸ்கோத்துக்கு’ பல முறை ரெங்கு பெட்டிக்கு பக்கதில் வரும் பசங்கள் எல்லாம் இப்பொது இல்லை.
நிலைக்கதவின் ஓரத்தில் நின்று நலம் விசாரிக்கும் நம்தெரு பெண்கள். பல வருடம் ஊருக்கு வராமல் அடம் பிடிக்கும் கணவன், பிள்ளை, உடன் பிறந்தவன் என்று எல்லோரையும் நலம் விசாரிக்கும் முறை[அப்போதெல்லாம் நம் ஜனங்களிடம் வறுமை இருந்தாளும் ஒழுக்கம் இருந்தது]. . " ஆமா அவனை "பொரொயில்"['PRAI" is name of the place in Main Land. Remember PENANG is an island] பார்த்தென், அக்கரைக்கு போயிட்டான்ல என்று சொல்வது, சில அறிவுரைகளையும் [கருத்து கந்தசாமி ஸ்டைலில் நமது ஆட்கள் சொல்வதும் இப்போது வந்த மொபைல் ஒழித்துவிட்டது
காது ஒரத்தில் பஞ்சு, கொஞ்சம் பச்சை கலர் சென்ட். காலரில் மடித்த கர்சீப், ஸ்டிச்கர் கிழிக்காத சட்டை, கையில் பட்டன் குடை என்று [கொஞ்சம் சின்ன வயது ஆட்கள் என்றால் Rayban கண்ணாடி, கலர் செருப்பு வந்த புதிதில் இவர்களின் "பில்டப்பு"க்கு மயங்காதவர்கள் இல்லை.
கஸ்டம்ஸ் விதி முறைகளின் மாற்றம், மற்றும் இப்போது வந்த கார்கோ சர்வீசஸ்... “நாகப்பட்டினதில் ஜப்தி பண்ணிட்டான்”, “டூட்டி கடுமை” போன்ற வார்த்தைகள் மறைய காரணமாகி விட்டது.
"என்ன ஈந்தியா?" [ இந்தியா தான் இவர்கள் வாயில் இப்படி ஆனது]
"பினாங்கிலெ ரோட்டிலெ சோரே போட்டு திங்கலாம்" போன் ற அல்ட்டாப்புகள் எல்லாம் நான் இங்கு வந்த பிறகு அவர்கள் சொன்ன இடங்களை பார்த்து சிரிப்புதான் வந்தது.
கறி வாங்கும் ஓமலில் மீன் வெளியில் தெரிய நடப்பதும், இறைச்சி கடையில் தான் ஒரு திறமையான ஆள் மாதிரி பேரம் பேசுவதும்[இறைச்சிகாடைகாரர்களிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை]
நாளடைவில் கொண்டு வந்த காசு எல்லாம் கந்தூரியிலும், தர்கா நேத்திகடனிளும், ஸ்விட்ச் போட்ட மாதிரி அழும் சொந்தங்களின் கண்ணீருக்காகவும்,சுன்னத்து, காது குத்து தேவைகளில் கரைய 'பொடி மீன் பிடித்து போவதும்...ஒமல் இரட்டையாக மடிப்பதும்....யாரும் நலம் விசாரிக்காமல் நடப்பதும் ...உலகம் இப்படித்தான் என்று எனக்கு அப்போ தே காண்பித்தது
கப்பல் கல்லுக்கு[ship ticket] மனைவியின் நகை, வலையல் எல்லாம் அடமானம் போவதும் இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் "என் இனமே இப்படி அடிப்படை தேவைக்காக மொத்தமாக அவதிப்பட்டதே என்று, இன்றும் என் மனம் வலிக்கும்'
வாழ்க்கையில் நாம் எவ்வளவு சாதித்தாலும், அந்த "வேர்களின்" பங்களிப்பு நிறைய இருக்கிறது.
Zakir Hussain
Source :http://adirainirubar.blogspot.com/2010/09/blog-post_6785.html
Labels:
Country நாடு Pictures-படங்கள்
Sunday, September 12, 2010
தாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]
தாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]

ஒரு வழியாக தாய்லாந்து செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டீர்கள்.
சரி.. என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்?
தாய்லாந்து சுற்றுலா பேக்கேஜ் என்று நாளிதழ் / வார இதழ்களில் விளம்பரம் செய்யும் ஏஜெண்ட்களிடம் சென்று உங்கள் பாஸ்போர்ட், போட்டோ, காசு ஆகியவற்றை கொடுத்தால் போதும். அவர்களே எல்லா ஏற்பாடுகளையும் செய்து உங்களை அப்படியே அழைத்துக் கொண்டு போய் சுற்றிக் காண்பித்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.
இதில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்லும் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். அவர்கள் சொல்லும் தேதியில், நேரத்தில் தான் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் இடத்தில் தான் சாப்பிட வேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்தில் தூங்கி எழுந்திருக்க வேண்டும். இப்படி பல கண்டிஷன்கள். அதனாலென்ன என்று சொல்கிற ஆசாமியா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இதற்கு மேல் இந்த கட்டுரை(கள்) தேவைப்படாது.
அதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று சொல்கிறவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
டிக்கெட்...
எந்த விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்தில் நேரடியாக பேங்காக் சென்று சேரும் தாய் ஏர்வேஸின் நேரடி விமானமா? அல்லது இலங்கை வழியாகச் செல்லும் Srilankan Airways-ஆ? மலேஷியா வழியாகச் செல்லும் ஏர் ஆசியாவா? என முடிவு செய்து கொள்ளுங்கள். ஏர் ஆசியா போன்ற low cost airlines-களுக்கு
டிராவல் ஏஜண்ட்டுகள் டிக்கெட் விற்பனை செய்ய மாட்டார்கள். நீங்களாகவே இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே டிக்கெட் எடுத்தால் விலை குறைவாகக் கிடைக்கும். ஆனால் தேதி மாற்ற இயலாததாகவோ, அப்படி மாற்றினால் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியதாகவோ இருக்கும்.ஒன்றுக்கு இரண்டு மூன்றாக டிராவல் ஏஜண்ட்களிடம் எந்த டிக்கெட் குறைவு என்று பார்த்து எடுத்துக் கொள்ளவும். தாய் ஏர்லைன்ஸிலேயே கூட Promotional Fare என்று இருக்கும். விசாரித்து எடுத்தால் நியாயமான அளவிற்கு காசு மிச்சப்படுத்தலாம்.
***
அடுத்து விசா...
இந்திய பாஸ்போர்ட்களைப் பொறுத்த வரை தாய்லாந்து ஏர்போர்ட்டிலேயே On Arrival முறையில் விசா எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வார அனுமதி கிடைக்கும். சாதாரணமாக 1,000 தாய் பாட் (சுமார் 1,400 ரூபாய்). தற்போது வருடக் கடைசி வரை இலவசமாக்கி இருக்கிறார்கள். கையோடு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் எடுத்து வரவும். விசா இல்வச காலத்திற்கு பிறகு வந்தீர்களேயானால், கையோடு தாய்லாந்து கரன்சியான பாட் (Baht) எடுத்து வர வேண்டும். இமிகிரேஷன் அருகிலேயே கரன்சி எக்சேஞ்ச், ஏ.டி.எம். மெஷின்கள் இருக்கும்.பொதுவாக On Arrival Visa பகுதியில் கூட்டம் மிகுதியாக இருக்கும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து சமயங்களில் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம்.
எனவே, சென்னையில் தாய் விசாவில் டூரிஸ்ட் விசாவை எடுத்துச் செல்லுதல் நேரத்தை மிச்சப்படுத்தும்.
தேனாம்பேட்டை, செனடாப் ரோடு - முதல் தெருவில் இருக்கும் VFS அலுவலகத்தில் தான் தாய்லாந்து விசா எடுக்க வேண்டும். இது எல்.ஆர்.சாமி பில்டிங் அருகில் இருக்கிறது. செனடாப் ரோடு முதல் தெருவில் முதல் கட்டிடம்.
ஆஸ்திரேலியா, கனடா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இங்கே விசா எடுக்க வேண்டும். எனவே எப்போதும் ஓரளவிற்கு கூட்டம் இருக்கும்.
தாய்லாந்து விசாவிற்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, பிறகு மதிய 1 முதல் 3 வரை விண்ணப்பம் பெற்றுக் கொள்கிறார்கள். டூரிஸ்ட் விசா இரண்டு மாதங்களுக்கு தங்க அனுமதி. இதுவும் இப்போது இலவசமாக தருகிறார்கள். ஆனால் VFS கம்பெனி சர்வீஸ் சார்ஜாக ரூ. 294/- வசூலிக்கிறார்கள். (இதைத் தான் சாமி வரம் தந்தாலும் பூசாரி தடுக்குறாரு கதை போல!)விண்ணப்ப படிவத்தை இங்கே இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
(VFS கம்பெனியின் இணைய தளம் --> http://www.vfs-thailand.co.in/index.html)
டூரிஸ்ட் விசா எடுக்கத் தேவையான ஆவணங்கள் :
- பாஸ்போர்ட்
- பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க நகல்
- இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- முழுதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்
- சென்னை-பேங்காக்-சென்னை Return Air Ticket
இரண்டுமே இல்லையா?
500 யு.எஸ். டாலர் பணம் வாங்கி அதை பாஸ்போர்ட்டில் endorse செய்ய வேண்டும்.
ஜெமினி மேம்பாலம் கீழே சபையர் தியேட்டர் அருகில் செல்லும் சாலை (கதீட்ரல் தானே?) சற்று தூரம் நடந்தால் இடது பக்கம் ஒன்றும், வலது பக்கம் ஒன்றுமாக Foreign Exchange (Forex) போர்டுகள் தென்படுகின்றன. உள்ளே உங்கள் பாஸ்போர்ட்டுடன் சென்று குறைந்தபட்சம் 500 டாலர் வாங்கி அதை மறக்காமல் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் endorse செய்து வர வேண்டும். பர்மாபஜாரில் வாங்குவதை விட இங்கே டாலர் விலை கொள்ளை! ஆனால் கிரெடிட் கார்டு, ஸ்டேட்மெண்ட் இல்லாதவர்களுக்கு இதான் வழி!
இவற்றோடு விசாவிற்கு கொடுத்தால் இரண்டு நாள் கழித்து காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் சென்று பாஸ்போர்ட்டை விசாவுடம் பெற்றுக் கொள்ளலாம்.
என்ன விசா வாங்கியாச்சா? டிக்கெட் தான் ஏற்கனவே எடுத்தாச்சு. வேறென்ன வேண்டும்?
அடுத்த பகுதியில் பார்க்கலாம்...
(இதன் முந்தைய பகுதி : 1)
நன்றி :http://mayavarathaan.blogspot.com/2010/08/part-2535.htmlதாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]
Labels:
Country நாடு Pictures-படங்கள்
Thursday, August 19, 2010
துபாய் : அப்பொழுதும் இப்பொழுதும்
துபாய் : அப்பொழுதும் இப்பொழுதும்
துபாயின் வளர்ச்சி அடுத்தடுத்த 1970 - 2010 சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி ஆரம்பமானது . துபாய் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியும் அடைந்துள்ளது .(by mail )from பாரூக் அலி
Labels:
Country நாடு Pictures-படங்கள்
Subscribe to:
Posts (Atom)























