Saturday, July 13, 2013

இவ்வருடமும் 20 மணிநேரத்திற்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்!

 
 


ஜுலை 11: கடந்த சில வருடங்களாக குறிப்பாக சில ஐரோப்பா நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 20 மணிநேரத்திற்கு கூடுதலாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுவந்தனர். இதே போல் இம்முறையும் இப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 18 மணி நேரம் முதல் 20 மணிநேரம் வரை நோன்பு நோற்கின்றனர்.

ஐரோப்பா நாடுகளில் தற்பொழுது கோடை காலம் நிலவுவதால் அதிகாலை 2:30 மணியிலிருந்து பஜ்ர் தொழுகையின் நேரம் ஆரம்பமாகிறது. சூரிய அஸ்தமனம் இரவு 9:30 லிருந்து ஆரம்பமாகிறது. இந்நாடுகளில் இரவு 11 மணிவரை சூரிய வெளிச்சம் கிடைப்பதுடன் இஷாத் தொழுகைக்கான நேரம் இரவு 11:30 மணிக்கு பின்னரே ஆரம்பமாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொருத்தமட்டில் அதிகாலை 04:20 தொடக்கம் மாலை 07:30 மணிவரைக்கும் நோன்பு வைப்பதற்கான நேரமாக இருந்து வருகிறது. இந்நாடுகளிலும் வெயில் காலமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் இரவு 8 வரைக்கும் கிடைக்கின்றது.

இதே போல் கனடா, அமெரிக்கா மற்றம் ஜப்பான் மற்றும் அதனைச் சூழவுள்ள நாடுகளில் சுமார் 16, 17 மணிநேரமும், நார்வேயில் 20 மணித்தியாலங்களும் முஸ்லிம்கள் இம்முறை நோன்பு நோறபதும் குறிப்பிடத்தக்கது.
Source : http://muthupet.org/?p=7073

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails