Thursday, September 24, 2015

தியாகச்சோதனையதில் வென்றுத் தந்த வெகுமதி

 தியாகச்சோதனையதில்
வென்றுத் தந்த வெகுமதி
திரும்பவும் வந்ததடைந்தது
தீனோர்க்கு ஓர் ஒளியாய்

மார்கத்தில் மூத்தோராம்
மதி நிறை நல்லோர்தம்
தூக்கத்தில் கண்ட "கனா"
தூயவனின் கட்டளையென

ஆக்கத்திற்கிசைவு தர
அருமை மகனார் "இஸ்மாயீலை"
அறுத்துப் பலியிட தாமும்
அனுமதி கேட்கச் சென்றாரே.!!

நோக்கம் நிறைவேரட்டும்....
ஏகனின் ஆணையிதுவென்றால்
ஏற்றுக்கொள்வேன் கலங்காதீர்
அவன் ஏவியதைச் செய்வீராகவென

ஏக்கநிறை அனனை ஹாஜிரா
கண்ணீரில் நனைந்தே யன்று
போர்க்குண வாளேந்திய தந்தையோடு
புறப்பட்டாரே புன்னகை மாறா இஸ்மாயீலும்

கூர் வாளேந்தி கழுத்தினை
குறி வைத்து
ஓங்கியே வெட்டினாரே
ஓதியே "அல்லாஹூ "அக்பரென்றே

வெட்டுபடா தமையன் தலைகண்டு
வீறுகொண்டு அடித்தாரே
நட்ட பாறை நடுபிளக்க
நன்மாராயம் கூறியே நாயனவனும்

திட்டமாய் அனுப்பிய தேவலோக
ஆட்டுக் குட்டியொன்றை யறுத்தே
தேவை நிறைவேற்றுவீராகவேயென
சத்திய தூதராய் மட்டுமின்றி
சக தோழனாகவும் தேர்ந்தெடுத்தே

புத்திப் பெருமகன்
பொறுமையின் தலைமகனாய்
இஸ்மாயிலையும் பொருந்திக்கொண்ட
சரித்திர நாளிதுவே
நாம் மீண்டும் நினைவுகூறும்
தியாகத்தின் திருநாளாய் இன்று.....

 
தமிழ் பிரியன் நசீர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails