- தக்கலை கவுஸ் முஹம்மத்
நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள்............
@ இஸ்லாம் எனும் வார்த்தைக்கு நிதர்சன வாழ்வில் பொருள்தந்தவர்
@ இறையாணை என்றவுடன் சிலைத்தொழில் விற்பன்னருக்கு மகனாக பிறந்தும் தயங்காமல் தவ்ஹீதை தரணியிலே எடுத்துரைத்தவர்
@ இறையாணை என்றவுடன் தன் மனைவியையும் அருமை புதல்வனையும் பாலைவனத்தில் குடியமர்த்தியவர்
@ இறையாணை என்றவுடன் ஆதிஆலயமான கஃபாவை தன் புதல்வனுடன் சேர்ந்து புனர்நிமானம் செய்தவர்
@ தள்ளாடும் பருவத்திலும் தனக்கொரு பிள்ளைவேண்டுமெனும் ஆசை இறை அருளில் நிராசை கொள்ள செய்யவில்லை தொடர் பிராத்தனை பருவம் கடந்தாலும் பலன் செய்யும் என்பதை உரக்க உணர்த்தியவர்
@ ஆசை ஆசையாய் இறைஞ்சி பெற்ற அருமைப் புதல்வனை " தாரும்எனக்கு" என்று கேட்ட உடையவன் அல்லாஹ்விற்கு தயங்காது தரத்துணிந்தவர்
@ வாருங்கள் ஹஜ்ஜுக்கு எனும் அவரது அழைப்பை ஏற்று பாரெங்கும் உள்ள மக்கள் அலை கடலென அணிதிரள்வதை பார்க்க பல கோடி கண்கள் வேண்டும்
@ தவாபும், ஸயீயும், அறுத்து பலியிடுதலும், ஜம்ராவுக்கு கல் எறிதலும் எல்லாம் இப்ராஹீம் நபி தம் நிஜ வாழ்வில் செய்தவற்றைத்தான் ஹாஜிகள் நிழலாக செய்கிறார்கள்
@ அகில உலக மக்களுக்கும் ஒப்பற்ற முன்மாதிரி உத்தம நபி(ஸல்) ஆனால் அவருக்கும் வாழ்வில் சில விஷயங்களில் முன்மாதிரி அவர்தான் இப்ராஹீம் நபி (அலை) - 16:123
@ சத்தியத்தை நிலைநாட்ட அசத்தியத்தை(சிலைகளை) அழித்தபோது இமயமாய் எழுந்த மக்களிடத்தில் தனிமனிதனாக அல்லாஹ்வின் பார்வையில் சமுதாயமாக விளக்கமளித்தார்
@ வியப்பூட்டும் வாதங்களால் அரக்க குணம் கொண்ட சர்வாதிகார மன்னனாம் நம்ரூதை வெலவெலக்க செய்து வெற்றி கண்டவர்
@ அவரின் வீரமும்,துணிவும், பாரில் யாருக்கும் அஞ்சா நெஞ்சமும் இறுதியில் நெருப்புக்குண்டத்தை பரிசாக பெற்று தந்தது ஆனால்அதற்கும் அஞ்சாமல் அதிலேயே தஞ்சம் பெற்றவர்
மொத்தத்தில் இப்ராஹீம் நபி ( அலை) அவர்கள்......
@ சமுதாய தொண்டாற்றும் இளைஞனாக அவர் ஒரு தியாகி
@ அரக்க அரசனுக்கு சாதாரணக் குடிமகனான அவர் ஒருதியாகி
@ அசத்தியவாதிக்கு மகனான அவர் ஒருதியாகி
@ ஆன்மீகவாதிக்கு தந்தையாக அவர் ஒருதியாகி
@ நல்ல மனைவிக்கு நல்ல கணவனாக அவர் ஒருதியாகி
@ பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அவரதுமனைவி ஒரு தியாகி
@ புலிக்கு பிறந்தது பூனையாகுமா.... அவரது மகன் ஒரு தியாகி
ஆக மொத்தத்தில்........
தியாகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டான ஒரு இஸ்லாமிய குடும்பம் இப்ராஹீம் நபியின் குடும்பம்.. அனைத்து வகையான சோதனைகளிலும் வெற்றி கண்டு அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்ற அவரின் வாழ்வை எண்ணி பயிற்ச்சி பெறவே இப்பருவகாலம் எனவே இப்பருவத்தே பயிற்ச்சி செய்வோம், இறை அன்பை பெரும் நல்ல பண்பாளராய் மாறிடுவோம் ....... இன் ஷா அல்லாஹ்...
Source : மௌலவி ரஃபீக் ஃபிர்தவ்ஸி அவர்கள் பஹ்ரைன் தமிழ் தாவா சார்பாக 2015 ல் வெளியிட்ட பிரசுரம் அதிலுள்ள அனைத்து தகவல்களையும் அப்படியே இங்கே டைப் செய்து இன்னும் பலரையும் இந்த நல்ல செய்திகள் சென்றடைய வேண்டும் இன்ஷாஅல்லாஹ் என்கிற நல்லெண்ணத்தில் உரிய பட செய்திகளை தேர்வு செய்து பதிவு செய்துள்ளேன்.. அல்ஹம்துலில்லாஹ்...
- தக்கலை கவுஸ் முஹம்மத்
No comments:
Post a Comment